Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த சின்ன விஷயம் கூட பக்கவாதத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க மக்களே...

Nandhinipriya Ganeshan October 29, 2022 & 11:33 [IST]
இந்த சின்ன விஷயம் கூட பக்கவாதத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க மக்களே...Representative Image.

வாதநோய் அல்லது மூளை நரம்பியல் நோய் என்பது மூளைக்கும் போகும் இரத்தம் தடைப்பட்டு மூளை செயல்படுவதற்கான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்படைவது. இதை பேச்சு வழக்கில் பக்கவாதம் என்பார்கள். அதுவே ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் (Brain Stroke) என்றழைக்கப்படுகிறது. இப்பிரச்சனை பெருமூளையின் வலதுபகுதியில் ஏற்பட்டால், உடலின் இடதுப்பகுதி பாதிக்கப்படும். இடதுப்பகுதியில் பிரச்சனை ஏற்பட்டால் வலதுப்பகுதி பாதிக்கப்படும். அதுவே, சிறுமூளையின் இடது பக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டால் இடது பக்கம் பாதிக்கப்படும். இடது பக்கத்தில் ஏற்பட்டால் இடது பக்கம் பாதிக்கப்படும்.

இந்த சின்ன விஷயம் கூட பக்கவாதத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க மக்களே...Representative Image

பக்கவாதத்தின் அறிகுறிகள் என்னென்ன?

➤ பொறுக்க முடியாத அளவு அதீத தலைவலி

➤ அடிக்கடி தலைச்சுற்றல் போன்ற உணர்வு

➤ குமட்டல் மற்றும் வாந்தி

➤ நடப்பதில் சிரமம்

➤ அவ்வப்போது வலிப்பு ஏற்படுதல்

➤ முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல் அல்லது உணர்வின்றி போதல்

➤ பேச இயலாமல் போவது அல்லது வாய் குளறுதல்

➤ ஒன்று அல்லது இரண்டு கண்களிலுமே பார்வை இழத்தல்

➤ கை, கால் மற்றும் முகத்தில் மரத்துப் போதல் அல்லது சக்தி இழத்தல்

இந்த சின்ன விஷயம் கூட பக்கவாதத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க மக்களே...Representative Image

பக்கவாதம் ஏற்பட காரணம்:

➤ ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், தலையில் அடிபடுவது தான். 

➤ அதுவே ஆண்களுக்கு வருவதற்கு மது அருந்துவது, புகைப்பிடித்தல் மற்றும் இரத்த கொதிப்பு ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

➤ பெண்களை பொருத்தவரை, சிலருக்கு பிரசவத்தின் போதும், கருக்கலையும் போதும் இரத்தம் உறையக்கூடும். அவை இரத்தநாளம் வழியாக மூளையை அடைந்து, இரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடும். இதனால் பக்கவாதம் ஏற்படும்.

➤ பொதுவான காரணம் என்று பார்த்தால், உடல் பருமன், நீரிழிவு நோய், உடல் உழைப்பின்மை, உயர் இரத்த அழுத்தம், குடும்பத்தில் யாருக்காவது பக்கவாதம் இருப்பது போன்றவையும் பக்கவாதத்தை ஏற்படுத்தும்.

இந்த சின்ன விஷயம் கூட பக்கவாதத்தை ஏற்படுத்துமாம்.. ஜாக்கிரதையா இருங்க மக்களே...Representative Image

பக்கவாதம் வராமல் தடுப்பது எப்படி?

➤ பின்னந்தலையில் அடிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பெருமூளை, சிறு மூறை, தண்டுவடம் ஆகியவற்றை இணைக்கும் பகுதியான 'மெடுலா ஆப்லங்கேட்டா' பின்னந்தலையில் தான் இருக்கிறது. இங்கு அடிப்பட்டால், உடலின் பல பகுதிகளும் பாதிக்கப்படும். 

➤ அடுத்தது மூளையை பலப்படுத்த வேண்டும். அதற்கு முதலில் மூளைநோயை ஏற்படுத்தும் டென்ஷனை குறைக்கவேண்டும். இந்த காலத்தில் டென்ஷன் இல்லாத மனிதர்களே இல்லை. இருப்பினும், நீண்ட நாள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆசைப்பட்டால் டென்ஷன் கூடவே கூடாது.

➤ வறுத்த, பொரித்த உணவுகளை அளவோடு எடுத்தக்கொள்ளுங்கள். எண்ணெய், வெண்ணெய், நெய் ஆகியவற்றை எடுத்துக்கொள்வதை அல்லது பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள வேண்டும். 

➤ அளவுக்கு மீறிய அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. மது அருந்துவது, புகை பிடிப்பது, போதை மருந்து பழக்கம் போன்றவற்றையும் கைவிடுவதன் மூலம் வாதநோய் வருவதைத் தவிர்க்கலாம்.

➤ மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு உடற்பயிற்சி, தியானம், நடைப்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. மலச்சிக்கல் வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். 

➤ டயட்டில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், முளைப்பயிர்கள் மற்றும் உலர்ந்த திராட்சை போன்றவற்றை சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான பொட்டாசியச் சத்து கிடைக்கும். இதனால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்