Thu ,May 16, 2024

சென்செக்ஸ் 73,663.72
676.69sensex(0.93%)
நிஃப்டி22,403.85
203.30sensex(0.92%)
USD
81.57
Exclusive

காரமடையான் நோன்பு உப்பு அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Uppu Adai Recipe in Tamil

Gowthami Subramani Updated:
காரமடையான் நோன்பு உப்பு அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Uppu Adai Recipe in TamilRepresentative Image.

காரடையான் நோன்பு விரதத்தில் அம்மனுக்கு இனிப்பு அடை மற்றும் உப்பு அடை படைப்பது வழக்கம். இந்த காரடையான் நோன்பானது பங்குனி மாதம் பிறக்கும் போது வழிபாடு செய்யப்படுகிறது. 

இதில், உப்பு அடை தயார் செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம்.

காரமடையான் நோன்பு உப்பு அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Uppu Adai Recipe in TamilRepresentative Image

உப்பு அடை செய்யத் தேவையானவை

அரிசி மாவு - 1 கப்
தேங்காய், பற்கள் நறுக்கியது - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
காராமணி - 1/4 கப்
கருவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 2
பெருங்காயம் - 1 சிட்டிகை

காரமடையான் நோன்பு உப்பு அடை ரெசிபி.! | Karadaiyan Nombu Uppu Adai Recipe in TamilRepresentative Image

காரடையான் நோன்பு உப்பு அடை செய்வது எப்படி?

✤ முதலில் அரிசியை 2 மணி நேரம் என்ற கணக்கில் ஊற வைக்க வேண்டும்.

✤ பின்னர், அதை சுத்தமான துணி கொண்டு உலர்த்தவும்.

✤ காராமணி எடுத்து அத்துடன் இதர நவதானியங்களையும் (அரிசி தவிர) சேர்த்து சிறிது நேரம் மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

✤ அதன் பின்னர், அதனை நீரில் ஊற வைக்கவும். இவ்வாறு, ஊற வைத்தால் காராமணி தனியாக வேக வைக்க வேண்டிய அவசியமில்லை. கொதிக்க வைத்தாலே வெந்து விடும்.

✤ அரிசி நன்றாக உலர்ந்த பிறகு, அதனை மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இந்த மாவை சலித்துக் கொள்ளலாம்.

✤ இந்த சலித்த மாவை, வெறும் வாணலி ஒன்றை எடுத்து அதில் லேசாக வறுக்கவும். இவற்றை ஆவி வரும் வரை வறுத்தால் போதுமானது. சிவக்கும் வரை வறுக்க வேண்டாம்.

✤ பிறகு தனியாக வாணலி ஒன்றை எடுத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போன்றவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.

✤ இத்துடன் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றைச் சேர்த்து உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 

✤ பின், காராமணியைச் சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். இத்துடன் மாவைக் கொட்டி அதனை மிதமான தீயில் கிளறி விடவும்.

✤ இதில் தேங்காய் பற்கள் சேர்த்து கிளறி, மாவு கெட்டியானவுடன் இறக்கி மூடி வைத்து விட வேண்டும்.

✤ இந்த மாவு ஆறிய பிறகு, கைகளில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்து பின் சமமான உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

✤ பின், அதனை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் அடைகளாக தட்டி நடுவில் ஓட்டை போட்டு அடுக்கவும்.

✤ இதனை இட்லி பானையில் வைத்து, 5 முதல் 8 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும்.

இவற்றை உருகாத வெண்ணெயுடன் சேர்த்து கடவுளுக்கு நெய்வேத்தியம் படைக்கலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்