Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatment

Vaishnavi Subramani Updated:
செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image.

பல விழாக்கள் மற்றும் கல்யாண விழா, பார்ட்டிஸ்,விருந்துகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பல புதுவிதமான உணவுகள் சுவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதால் இந்த செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பயணம் செய்யும் போது மற்றும் வெகுதூரம் செல்லும் போது இந்த செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

வீட்டில் இருக்கும் பெண்கள் அதிகமாகச் சாப்பிடுவதாலும் மற்றும் வேலை அதிகமாகச் செய்தாலும் கூட இந்த செரிமான பிரச்சனை மற்றும் உடல் எடை அதிகரிப்பு எனப் பல பிரச்சனைகள் சரியாகாமல் இருக்கும். அதனைத் தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி என்பது அனைவரும் யோசிப்பார்கள். இந்த பதிவில் செரிமான பிரச்சனைகளை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image

வீட்டில் இருக்கும் போது ஏற்படும் செரிமான பிரச்சனைகளைச் சரிசெய்வது எப்படி

✤ நீங்கள் தினம்தோறும் காலை முதல் மாலை வரை அதிகமாக வேலை செய்தாலும் கூட இந்த செரிமான என்பது சரியாக நடக்காமல் பலருக்கும் பல தொந்தரவுகள் ஏற்படும். அத்துடன் அதிக உடல் எடையும் ஏற்படுகிறது.

✤ அதிகமாக உடல் எடை இருந்தாலும் இந்த செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதனை எப்படிச் சரிசெய்வது என்பதைப் பார்க்கலாம்.

✤ உடலில் ஏற்படும் மலச்சிக்கலை நீக்குவதற்கு, தினத்தோறும் 1லிட்டர் அளவிற்குத் தண்ணீர் குடித்தால் சரியாகும் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரிசெய்வதற்கு உதவியாக இருக்கும்.

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image

 தினம்தோறும் காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் மற்றும் மனம் அமைதியாகவும் இதைச் செய்வதால் செரிமான பிரச்சனைகள் இருந்தால் விரைவில் சரியாகும் மற்றும் மீண்டும் வராமல் தடுக்க உதவும். உடலில் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் எளிதில் சரியாகும்.

✤ உடலில் உள்ள வாயு பிரச்சனை மற்றும் கழிவுகள் நீங்குவதற்கும், செரிமானம் அடைதற்கும் இந்த எலுமிச்சை சாறு தினம்தோறும் குடித்து சரிசெய்யலாம்.

✤ நீங்கள் உணவு சாப்பிடும் போது எளிதில் செரிக்கும் உணவுகள் சாப்பிட்ட பிறகு, கடினமான மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது மற்றும் இது போன்ற உணவுகளை நன்றாக வாயில் அரைத்துச் சாப்பிடுவது செரிமான செய்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

✤ தயிர் சாப்பிடுவது உடல் சூட்டைத் தனிக்கும் மற்றும் செரிமான செயல்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் உள்ள பாக்டீரியாஸ் உடலின் ஆரோக்கியம் சீராகவும் மற்றும் பாதுகாப்பாகவும் இருக்கும்.

✤ தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது நீர்சத்துகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்த உணவான திராட்சை, செர்ரி, தானியங்கள் மற்றும் பருப்பு வகை உணவுகள் சாப்பிடுவது நல்லது.

✤ தினமும் சமைக்கும் உணவுகளில் கல் உப்பு, மிளகு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி போன்றவை சேர்த்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும். இதனால் செரிமான பிரச்சனைகளை அதிகளவில் குறைக்கலாம்.

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image

பயணம் மற்றும் விழாக்களுக்குச் செல்லும் போது செரிமான பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி

✤ விழாக்களுக்குச் சென்றால் நம் அந்த வரிசையில் வைத்திருக்கும் அனைத்தும் உணவு வகைகளுக்கும்  சாப்பிடவேண்டும் என ஆசைப்படுவோம். வயிற்றுக்குத் தேவையான அளவிற்கு மட்டும் எப்பொழுது உணவு சாப்பிட வேண்டும்

✤ அதற்கு அதிகமாகச் சாப்பிட்டால் அந்த உணவு செரிமான அடைவதற்கு வெகுநேரம் ஆகும். அதனால் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் ஏப்பம் மற்றும் வயிற்றுக் கனமாக இருப்பது எனப் பல பிரச்சனைகள் ஏற்படும்.

✤ பயணம் செய்யும் போது உடலில் செரிமான சுழற்சி மாற்றம் ஏற்படுவதற்கு, இரண்டு காரணங்கள், தூக்கம், நேரத்திற்கு தேவையான அளவிற்கு உணவு சாப்பிடுவது இது சரியாக இருந்தால் அந்த பயணம் மிகவும் சந்தோசமாகவும், அழகாகவும் இருக்கும்.

✤ பயணம் செய்வதற்கு முதல் நாள் நன்றாகத் தூங்குவது மற்றும் நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியம். பயணத்திற்குச் செல்லும் போது முடிந்த வரை வீட்டிலிருந்து சமைத்த உணவுகளை எடுத்து செல்லவது நல்லது.

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image

✤ பயணத்தில் காலை சரியான நேரத்திற்குப் புறப்பட்டு செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லும் போது கடைகளில் இருக்கும் உணவு பண்டங்கள் மற்றும் நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்க்கவும்.

✤ பயணத்தில் அசைவ மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிடுவது என்பது செரிமானத்தில் பிரச்சனைகள் ஏற்படுத்தும் அதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக நீரேற்றம் அதிகமாக உள்ள பழச்சாறுகள் மற்றும் சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.

✤ பயணத்தில் கடைகளில் சாப்பிடும் போது எளிமையாக செரிக்கும் உணவுகள் இருந்தால் சாப்பிடுவது நல்லது.  பயணத்தில் ஜங்க் உணவுகள் அதிகமாக சாப்பிட்டால் செரிமான ஆகாமல் வாந்தி போன்ற பிரச்சனைகள் வருவதற்கு, வாய்ப்புகள் உள்ளது.

✤ முடிந்த வரை பயணத்தில் நேரத்திற்கு உணவுகள் சாப்பிடுவது நல்லது. அப்படி முடியவில்லை என்றால் நேரம் தாண்டி சாப்பிட்டால் அதிகமாகச் சாப்பிடாமல் அளவாக மற்றும் எளிதில் செரிமான அடையும் உணவுகள் சாப்பிடலாம்.

செரிமானப் பிரச்சனைகளை தவிர்ப்பது மற்றும் சரிசெய்வது எப்படி | digestion problem treatmentRepresentative Image

✤ பயணத்தில் வாந்தி பிரச்சனை வரும் என்றால் பயணத்திற்கு முன்பாக, வாந்தி மாத்திரைகளை எடுத்து செல்லவது நல்லது.

✤ நீங்கள் சாப்பிடும் போது அந்த உணவில் சத்துகள் உள்ளதா அல்லது இல்லையா என்பது குடல் அறிந்து மூளைக்குச் சொல்லும் அதனால் வயிறு என்பது “இரண்டாவது மூளை” என்று அழைக்கப்படுகிறது. குடலில் பல நியூரான்கள் செரிமான அமைப்பின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும்.

✤ பயணத்தின் போது அதிகமாகக் காப்பி மற்றும் சாக்லேட் போன்ற பல இனிப்பு பொருள்களைத் தவிர்ப்பது நல்லது.

✤ இது போன்ற பல பிரச்சனைகளை வராமல் தவிர்ப்பதற்கு முதலில் நீங்கள் உங்கள் உடல் மீது கவனம் செலுத்தினால் மட்டும் எந்த விதமான பிரச்சனைகள் வராமல் அந்த பயணம் மிகவும் சந்தோசம் மற்றும் அழகாகவும், பாதுகாப்பாகவும் அமையும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்