Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image.

கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், இந்த நேரத்தில் உடல் நிறைய ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இதனால், உடலில் எடை அதிகரிப்பது, மார்பக பகுதிகளில் மாற்றங்கள் ஏற்படுவது, முடி மற்றும் தோல் பளபளப்பாக மாறுவது போன்றவை நிகழ்கின்றன. இருப்பினும், இவற்றை தாண்டி இன்னும் பல மாற்றங்கள் உள்ளன. அதாவது, உங்கள் யோனி (பிறப்புறுப்பு) பகுதியிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன.

இந்த யோனி மாற்றங்கள் கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் அவ்வளவாக தெரியாது. ஆனால், கர்ப்பத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கவனிக்கலாம். கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் யோனியின் தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள் மிகவும் பொதுவான ஒரு விஷயம். சரி வாங்க கர்ப்ப காலத்தில் ஏற்படும் சில யோனி மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

யோனி வீங்குதல்:

கர்ப்ப காலத்தில் யோனி பகுதியில் வீங்கி வலிக்கிற நரம்புகள் வெளியில் தெரியும். சுமார் 10 சதவீத பெண்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இதற்கு காரணம் அந்த பகுதியில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகமாக இருப்பது தான். எனவே, கர்ப்பிணிப் பெண் நீண்ட நேரம் உட்காருவதையோ நிற்பதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், அதிகளவு தண்ணீர் குடிப்பதை அதிகரிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

pH அளவில் மாற்றம்:

கர்ப்ப காலத்தில் உடலின் பாகங்களுக்கு அதிகளவு இரத்த ஓட்டம் இருக்கும். இதில் கருப்பை மற்றும் பிறப்புறுப்பும் அடங்கும். அதிகளவு இரத்த ஓட்டம் கருப்பை மற்றும் யோனி பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையை மாற்றுகிறது. இதனால், கர்ப்பிணியின் யோனியில் ஒருவிதமான மாவு வாசனை ஏற்படும். இருப்பினும், அதற்கு மாறாக துர்நாற்றம் வீசினால், அது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், பிறப்புறுப்பு பகுதியில் உள்ள இரசாயனங்களின் pH சமநிலையில் மாற்றம் ஏற்படும் போது, யோனியில் சுவை மாற்றமும் ஏற்படுகிறது. அதாவது, யோனி பகுதியில் உலோகம் மற்றும் உப்பு கரிப்பது போன்ற சுவை இருக்கும். 

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

நிறமாற்றம்:

பொதுவாக, யோனியின் நிறம் இளஞ்சிவப்பாக இருக்கும். ஆனால், ஹார்மோன் மாற்றங்களுடன் இரத்த ஓட்டமும் அதிகரிப்பதால் யோனியின் நிறத்தில் மாற்றம் ஏற்படுகிறது. பிரசவத்தை எதிர்கொள்ளும் தாயிக்கு நிறமி (பிக்மென்டேஷன்) என்பது பொதுவானது தான். இது லேபியா மற்றும் வுல்வாவை பாதிக்கிறது. அந்த சமயத்தில் யோனியின் நிறம் ஊதா அல்லது நீல நிறமாக மாறுகிறது. இருப்பினும், இந்த நிற மாற்றங்கள் பிரசவத்திற்கு நான்கு வாரங்களுக்கு முன்பே ஏற்படத் தொடங்குகின்றன.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

வெள்ளைப்படுதல்:

பெரும்பாலான பெண்கள் கர்ப்ப காலத்தில் மட்டுமே வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. கர்ப்பக் காலத்தில் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களால், லேபியாவில் (Labia) மாற்றங்களை ஏற்படுத்தும். இது லுகோரியா எனப்படும் பால் போன்ற திரவத்தை உருவாக்க யோனி சுவர்கள் தூண்டப்படும். இது தான் யோனி பகுதியில் எந்த தொற்றுநோய்களும் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. எனவே, வெள்ளைப்படுதல் வழக்கத்தை விட அதிகமாக இருந்தால் பயப்பட வேண்டாம்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

அதிகமான முடி வளர்ச்சி:

அதிகப்படியாக வெள்ளைப்படுதல், pH அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பிற மாற்றங்கள் உங்களுடைய யோனி பகுதியில் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். அரிப்பும் ஏற்படும். அரிப்பு என்பது கர்ப்பத்தின் பொதுவான அறிகுறியே. ஆனால் இந்த அரிப்பு தொடர்ந்து நீடித்தால் உடனே மருத்துவரை அணுகவும். மேலும், இரத்த ஓட்டத்தில் ஈஸ்ட்ரோஜனின் அதிக அளவு அந்தரங்க முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கூடியவை. இதனால் தான், மாதம் ஒருமுறை மருத்துவரை அணுகும்போது முடியை நீக்கி விடுகிறார்.

கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்பில் ஏற்படும் மாற்றங்கள்.. | Vaginal Changes During Pregnancy in TamilRepresentative Image

பெண்ணின் பிறப்புறுப்பு:

ஒரு பெண்ணின் பிறப்புறுப்பு கர்ப்ப காலத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கர்ப்ப காலத்தில், யோனி பகுதியில் ஏற்படும் சில மாற்றங்கள் விசித்திரமாகக்கூட தோன்றலாம். ஆனால் அவை முற்றிலும் இயல்பானவையே. இந்த மாற்றங்கள் எதுவும் நீண்ட காலம் நீடிக்காது, அத்தோடு அவை உங்க கர்ப்பத்தை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், உங்க பிரசவம் முடிந்த பிறகு (குழந்தை பிறந்த பிறகு) உடல் பாகங்கள் அனைத்தும் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பவிடும். இருப்பினும், இந்த மாற்றங்கள் உங்க அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டால், அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்வது நல்லது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்