Wed ,Apr 17, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

Vastu Plants for Home in Tamil: இந்த செடிகள் வீட்டில் இருந்தால் செல்வ அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..!!

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 15:45 [IST]
Vastu Plants for Home in Tamil: இந்த செடிகள் வீட்டில் இருந்தால் செல்வ அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..!!Representative Image.

Vastu Plants for Home in Tamil: வீட்டில் செல்வ வளத்தை அதிகரிப்பதற்காக ஒவ்வொரு இடத்திலும் பல வகை செடிகள் வளர்க்கப்படுகின்றன. அந்தவகையில், நமது நாட்டின் திசைகள் மற்றும் காலநிலைக்கு ஏற்றவாறு அதிர்ஷ்டம் தரும் செடிகள் என சிலவகை செடிகள் இருக்கின்றன. இவற்றை நம்முடைய வீடு, அலுவலங்கள், மற்றும் தொழில் செய்யும் இடங்களில் வளர்க்கும்போது, அது நமக்கு செல்வ வளத்தையும் மகிழ்ச்சியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கின்றன.

பொதுவாக எல்லாச் செடிகளும் ஆக்ஸிஜனை வெளிவிட்டு நமது வீட்டை சுற்றி நல்ல அமைதியான சூழலை ஏற்படுத்துகின்றன. ஆனால். வாஸ்து, ஜோதிடம் என்று வரும்போது திசைகள் மிகவும் முக்கியமானது, அதில் வகுக்கப்பட்ட சாஸ்திரங்களை கடைப்பிடித்தால் வீட்டில் செல்வம் பெருகும். அதன்படி, எந்த செடிகள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும், எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும், இதனால் என்ன பயன் என்பதை பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

துளசி செடி:

துளசி செடி பெருமாளுக்கு உகந்த ஒரு செடியாகும். துளசி செடி இல்லாத வீடு கோபுரம் இல்லாத கோவில் போன்றது என்று பெரியவர்கள் சொல்வார்கள். நாம் பலரும் பார்த்திருப்போம், பிரம்மமுகூர்த்தில் பெண்கள் குளித்துவிட்டு, இந்த செடியை வழிபடுவார்கள். இதற்கு காரணம் விடியற்காலையில் துளசி செடியை சுற்றி வருவதால் தூய்மையான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல், துளசி செடி வீட்டில் செழிப்பாக பசுமையாக வளர்கிறது என்றால் அந்த வீட்டில் லட்சுமிதேவி சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது ஐதீகம்.

எனவே, துளசி செடியினை முறையாக பராமரித்து வணங்கி வந்தால், கடவுளின் அனுகிரம் எந்த பாரபட்சமும் இல்லாமல் கிடைக்கும். அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும் துளசியை செடியை வீட்டின் முன்புறம், பின்புறம், பால்கனி என எந்த பகுதியில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால், நல்ல சூரிய ஒளி கிடைக்கும் இடங்களில் வைக்க வேண்டியது அவசியம்.

Most Read: தோஷம் நீக்கும் செடிகள்… ஆனா இந்த செடிய மட்டும் வீட்டின் முன்பக்கம் வைக்கக்கூடாது..!!

தொட்டால் சிணுங்கி:

சாதாரணமாக ரோட்டோரங்களில் வளர்ந்து கொண்டிருக்கும் செடி தொட்டால் சிணுங்கி, இதில் அப்படி என்ன அதிர்ஷ்டம் என்று தானே கேட்கிறீர்கள். இதை சாதாரண செடி என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். இந்த செடியை வீட்டில் வளர்த்தால் பணவரவு அதிகரிக்குமாம். இதனால், நமது ஊரிலேயே பலரும் இந்த செடியை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அதுமட்டுமல்லாமல், அதிகாலையில் தொட்டால் சிணுங்கி இலைகளை நம்முடைய 10 விரல்கள் தொடும்போது நமது உடலில் காந்த ஆற்றல் அதிகரிக்குமாம். மனதில் நேர்மறை எண்ணங்கள் உருவாகும். இதை வீட்டின் எத்திசையில் வேண்டுமானாலும் வளர்க்கலாம். ஆனால், முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும்.

செண்பக பூ செடி:

உண்மையை சொன்னால், அதிர்ஷ்டம் உள்ளவர்களால் மட்டுமே இந்த செடியை வீட்டில் வளர்க்க முடியும். இந்த பூ கைகளில் கிடைத்தால் நல்ல நேரம் பிறக்கப்போகிறது என்று அர்த்தம். அதாவது வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த கஷ்டங்களுக்கும், வேதனைகளுக்கும் தீர்வு கிடைக்கப்போகிறது. அதுமட்டுமல்லாமல், செண்பக பூ செடியை வீட்டில் வளர்ப்பதால் உங்களுக்கு சுக்கிர யோகம் அடிக்கப்போகிறது என்று அர்த்தம். மகாலட்சுமிக்கு செண்பக பூக்களை கொண்டு அர்ச்சனை செய்தால் செல்வ வளம் பெருகும்.

குறிப்பாக, வெள்ளிகிழமைகளில் வரும் சுக்கிர ஹோரையில் காலை 6-7 மணிக்குள் மகாலட்சுமி, சுக்கிரபகவானை நினைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால், வீட்டில் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

Most Read: இந்த டிப்ஸ மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ரோஜா செடி என்ன; ரோஜா தோட்டமே வெக்கலாம்… அதுவும் கொத்து கொத்தான ரோஸ் பூக்களோட..

செம்பருத்தி செடி:

அக்காலத்தில் அனைவரது வீட்டிலுமே இந்த செடியை சர்வ சாதாரணமாக காணமுடியும். ஆனால், இன்று அது அரிதாகவே உள்ளது. இதனால், தான் மங்களகரமான நிகழ்வுகளில் தடை ஏற்படுகிறது. குறிப்பாக, செவ்வாய்தோஷம் இருப்பவர்கள் தங்களது வீட்டில் செம்பருத்தி செடியினை வளர்த்து வருவதன் மூலம் தோஷத்தின் தாக்கம் குறைவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் மட்டும் தான் வளர்க்க வேண்டும் என்று கிடையாது. வீட்டில் மகிழ்ச்சி, செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்க வேண்டும் என்று என்னுபவர்கள் அனைவரும் வளர்க்கலாம்.

Most Read: 6+ மாத குழந்தைக்கு வீட்டிலேயே சத்து மாவு தயாரிப்பது எப்படி?

Tags:

Lucky plants for home | Lucky plants for home in india | Vastu plants for home in tamil | Vastu shastra plants for home in tamil | Lucky vastu plants for home | Vastu plants for money


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்