Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடபிள் அவல் கட்லெட்! இப்படி செய்யுங்க.| Vegetable Cutlet Recipe

Gowthami Subramani Updated:
குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடபிள் அவல் கட்லெட்! இப்படி செய்யுங்க.| Vegetable Cutlet RecipeRepresentative Image.

குழந்தைகளுக்கு மொறுமொறுப்பான திண்பண்டம் என்றால், நிறைய வெரைட்டியான உணவு வகைகள் உள்ளன. அதிலும் கட்லெட் வகை என்றால், குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். அதே போல, குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் உணவும் காய்கறிகள், பழங்கள் நிறைந்து அவர்களின் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் வகையில் அமைய வேண்டும். அந்த வகையில், குழந்தைகளுக்குப் பிடித்த வெஜ் அவல் கட்லெட் செய்வது எப்படி என்று இதில் பார்க்கலாம்.

குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடபிள் அவல் கட்லெட்! இப்படி செய்யுங்க.| Vegetable Cutlet RecipeRepresentative Image

தேவையான பொருள்கள்

உருளைக்கிழங்கு – 3 (வேக வைத்தது)

சீஸ் – ¼ கப் (துருவியது)

கேரட் - ¼ கப் (துருவியது)

அவல் – 2 கப்

கரம் மசாலா – ½ டீஸ்பூன்

மிளகுத் தூள் – ½ டீஸ்பூன்

மிளகாய் தூள் – ½ டீஸ்பூன்

சாட் மசாலா – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

இஞ்சி – 1 இஞ்ச் (பொடியாக நறுக்கப்பட்டது)

பிரட் தூள் – சிறிதளவு

மைதா – 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கப்பட்டது)

எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

குழந்தைகள் விரும்பி உண்ணும் வெஜிடபிள் அவல் கட்லெட்! இப்படி செய்யுங்க.| Vegetable Cutlet RecipeRepresentative Image

செய்முறை

✤ முதலில், அவலை எடுத்து நீரில் கழுவி நீரை வடித்து விட்டு தனியாக 10 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும்.

✤ பின், உருளைக்கிழங்குகளை வேக வைத்து. அதை துருவி அல்லது மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

✤ பின், பாத்திரம் ஒன்றில் உருளைக்கிழங்கு, ஊற வைத்த அவல், துருவிய கேரட், துருவிய பன்னீர், தேவையான அளவு உப்பு, மற்றும் மற்ற மேலே கொடுக்கப்பட்ட மிளகுத் தூள், சாட் மசாலா, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், கரம் மசாலா, கொத்தமல்லி போன்றவற்றை சேர்க்க வேண்டும். இத்துடன் சுவைக்கேற்ப எலுமிச்சைச் சாற்றினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

✤ அதன் பிறகு, பிசைந்த கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி, கட்லெட் போன்று தட்டையாக தட்டி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ அதன் பின், பௌல் ஒன்றில் மைதாவை எடுத்து, அதில் நீர் சேர்த்து பேஸ்ட் போல தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.

✤ பிறகு, எடுத்து வைத்ட கட்லெட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதை முதலில் கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, அதன் பிறகு பிரட் தூளில் பிரட்டி தட்டு ஒன்றில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

✤ பிறகு வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்ய வேண்டும். பின், பிரட் தூள் மற்றும் மாவினால் பிரட்டி வைத்த கட்லெட் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக முன்னும், பின்னும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது பொன்னிறமான சுவையான வெஜிடபிள் அவல் கட்லெட் தயார் செய்யப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்