Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,052.97
-436.02sensex(-0.60%)
நிஃப்டி21,857.25
-138.60sensex(-0.63%)
USD
81.57
Exclusive

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?

Vaishnavi Subramani Updated:
காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image.

 தினமும் காலையில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு ரெசிபி வரிசையில், இன்றைக்கு எந்த ரெசிபி. தினமும் புதியதாக ஒரு ரெசிபி செய்ய வேண்டும் என நினைத்தால் முந்தை நாள் மீதமான சாதம் வைத்து ஒரு ரெசிபி. அதனால் இன்று மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி. 

காலையில் எழுந்து சமைப்பதற்கு நேரம் குறைவாக தான் இருக்கும் அதனால் முந்தை நாள் மீதமான சாதம் வைத்து ஒரு ரெசிபி. இதை நீங்கள் அன்றைய நாள் மீதமான உணவை வைத்து ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியாகவும் செய்து சாப்பிடலாம். இந்த பதிவில் காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

தேவையான பொருள்கள்

✤ பழைய சாதம் – 3 கப்

✤ வெங்காயம் – 6

✤ கொத்தமல்லி – தேவையான அளவு

✤ கருவேப்பிலை – தேவையான அளவு

✤ சோயாசாஸ் – 3 டிஸ்பூன்

✤ தண்ணீர்- சிறிதளவு

✤ எண்ணெய் – தேவையான அளவு

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

✤ உப்பு – சிறிதளவு

✤ சோளமாவு – 4 டிஸ்பூன்

✤ பச்சை மிளகாய் சாஸ் – 4 டிஸ்பூன்

✤ சிவப்பு மிளகாய் சாஸ் – 4டிஸ்பூன்

✤ பூண்டு – 15 பற்கள்

✤ சீரகம் – 2 டிஸ்பூன்

✤ மிளகாய்த் தூள் – 4 டிஸ்பூன்

✤ அரிசிமாவு- 2 கப்

✤ பச்சை மிளகாய் – 4

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

செய்முறை

✤ முதலில் வெங்காயம் எடுத்துத் தோல் உரித்து நன்றாகக் கழுவவும். அதை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் நன்றாகக் கழுவி, பொடியாக நறுக்கவும்.

✤ பூண்டு தோல் உரித்து உரலில் தட்டி கொள்ளவும். கொத்தமல்லி எடுத்து நன்றாகக் கழுவிக் கொள்ளவும். அதை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

✤ மூன்று கப் பழைய சாதம் என்றால் தண்ணீர் நன்றாக வடித்து  அல்லது காலை சமைத்து மாலையில் மீதமான சாதம் எடுத்து அதை மிக்ஸி, ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

✤ அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் இரண்டு கப் அளவிற்கு அரிசி மாவு மற்றும் நறுக்கிய இரண்டு வெங்காயம் சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

✤ அதில் இரண்டு டிஸ்பூன் அளவிற்குச் சீரகம் மற்றும் நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாகப் பிசையவும்.

✤ அதில் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். அதில் இரண்டு டிஸ்பூன் அளவிற்கு மிளகாய்த் தூள் மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

✤ அதைப் பிசைந்த மாவைச் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்ட வேண்டும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் சேர்த்து அது நன்றாகச் சூடாக்க வேண்டும்.

✤ அதற்குப் பின், அதில் உருட்டிய உருண்டைகளைச் சேர்த்து நன்றாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். அந்த பொரித்த உருண்டைகளை எடுத்து தட்டில் வைத்துக் கொள்ளவும்.

✤ மற்றொரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அது சூடான பின், அதில் நறுக்கிய மீதமுள்ள வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

✤ அதில் தட்டிய பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் நான்கு டிஸ்பூன் அளவிற்குச் சிவப்பு மிளகாய் சாஸ் மற்றும் நான்கு டிஸ்பூன் அளவிற்குப் பச்சைமிளகாய் சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.

காலையில் ஒரு சுவையான ரெசிபி முந்தை நாள் மீதமான சாதத்தில் ஒரு ரெசிபி செய்வது எப்படி ?Representative Image

✤ அதில் மீதமுள்ள பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் மூன்று டிஸ்பூன் அளவிற்கு சோயா சாஸ் சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.

✤ அது நன்றாகக் கொதித்த பிறகு, அதில் பொரித்து உருண்டைகளைச் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி அளவிற்குச் சேர்த்து கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலக்கி இறக்கினால் சூடான மற்றும் சுவையான, மொறுமொறுப்பான ஒரு காலை உணவு தயார். இதை அப்படியே சாப்பிடலாம். தோசை உடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொரித்த உருண்டைகளைக் கூட மாலை ஸ்நாக்ஸ் ஆகச் சாப்பிடலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்