Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Watermelon Kulfi Recipe: கோடை வெயிலுக்கு வித்தியாசமான முறையில் குளு குளு குல்ஃபி.... இப்படி செஞ்சிப்பாருங்க..!

Nandhinipriya Ganeshan April 28, 2022 & 07:45 [IST]
Watermelon Kulfi Recipe: கோடை வெயிலுக்கு வித்தியாசமான முறையில் குளு குளு குல்ஃபி.... இப்படி செஞ்சிப்பாருங்க..!Representative Image.

Watermelon Kulfi Recipe: சம்மர் சீசன் வந்துவிட்டாலே நாம் தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் போன்ற நீர்ச்சத்து அதிகம் காணப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவது வழக்கம். வெயில் காலங்களில் உடலில் உள்ள நீர்ச்சத்து விரைவில் குறைந்து, உடல் வறண்டு போய் விடுகிறது. அதை ஈடுகட்ட தான் இம்மாதிரியான உணவு பொருட்களை சாப்பிடுகிறோம். அந்த வகையில், இந்த பழங்களை அப்படியே சாப்பிடாமல், ஜூஸ் போட்டும் குடிக்கும்போது அதன் சுவை இரட்டிப்பாகிறது.

இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடவே சாப்பிடாதீங்க... உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்....! 

அதன்படி, எளிமையான முறையில் தர்பூசணி பழத்தை வைத்து குல்ஃபி ஒன்றை செய்யலாம். வாங்க..! இதற்கு ரொம்ப நேரம் செலவிட தேவையில்லை. இதற்கு நீங்க அடுப்பையும் பயன்படுத்த தேவை இருக்காது. வாங்க... அருமையான டேஸ்ட்டியான தர்பூசணி குல்ஃபி (homemade kulfi recipe) எப்படி செய்வது என்று பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்:

  • முலாம்பழ விழுது - ஒரு கப்
  • தர்பூசணி விழுது - ஒரு கப்
  • வெள்ளரிக்காய் விழுது - அரை கப்
  • சாட் மசாலா - அரை டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
  • சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
  • உப்பு - கால் டீஸ்பூன்
  • க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

தினமும் ஒரு கிளாஸ் கரும்பு ஜூஸ் குடிப்பதால் இத்தன நன்மைகளா…?

எப்படி செய்வது?

  • முதலில் ஒரு பவுளில் முலாம்பழ விழுது, தர்பூசணி விழுது, வெள்ளரிக்காய் விழுது மூன்றையும் ஒன்றாக கொட்டி கலக்கிக் கொள்ளவும்.
  • மேலும், அதில் சாட் மசாலா, உப்பு, சர்க்கரை, மற்றும் எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
  • அந்த கலவையை குல்ஃபி அச்சு அல்லது டம்பளர்களில் ஊற்றி ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் வைத்து 3 லிருந்து 4 மணி நேரம் வைக்கவும்.
  • பின்னர், கட்டியானது அச்சிலிருந்து எடுத்து க்ரீம் சேர்த்து சுவைக்கவும்.
  • வெயிலுக்கு ஜில்லுனு தர்பூசணி குல்ஃபி (watermelon ice cream in tamil) ரெடி...!

​​​​​​​வெயில் தாங்க முடியாம ஐஸ் வாட்டர் குடிக்கிறீங்களா..? இந்த பிரச்சனைகளை சந்திக்க ரெடியா இருந்துக்கோங்க...!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்க ளில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்