Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image.

சூரிய நமஸ்காரம் என்பது பன்னிரண்டு சக்திவாய்ந்த யோகா தோற்றநிலைகளின் (Yoga Poses) வரிசையாகும். உங்கள் முழு உடல் அமைப்புக்கும் ஒரு முழுமையான வொர்க்அவுட்டாகும். ஆரோக்கிய நன்மைகளைத் தவிர, சூரிய நமஸ்காரம் சூரியனுக்கு நமது நன்றியைக் காட்டுவதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது. இந்த ஆசனத்தை அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது. சூரிய நமஸ்காரத்தின் ஒவ்வொரு சுற்றும் 2 செட்களைக் கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு செட்களும் 12 யோகா தோற்றநிலை கொண்டுள்ளது.  

சரியான முறையில் செய்தால், இந்த பயிற்சி உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிடும். சூரிய உதயத்தில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் உடலை புத்துயிர் பெறுவதோடு உங்கள் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்யலாம்; மதியம் உடனடி ஆற்றலைத் தருகிறது மற்றும் மாலை நேரத்தில் மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்கிறது. தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் சோலார் பிளெக்ஸஸின் அளவை மேம்படுவதோடு, படைப்பாற்றல் மற்றும் உள்ளுணர்வு திறன்களையும் 
மேம்படுத்துகிறது. சூரிய நமஸ்காரத்தின் படிகள், பெயர்கள் (surya namaskar 12 steps names in tamil), மற்றும் அவற்றின் பலன்கள் பின்வருமாறு: 

உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

1. பிரணமாசனம் | Pranamasana 

  • யோகா பாயில் நிமிர்ந்து நின்று, உங்கள் கால்களை ஒன்றாக வைத்து, இரு கால்களிலும் உங்கள் எடையை சமநிலைப்படுத்துங்கள். 
  • உங்கள் மார்பை விரிவுபடுத்தி தோள்களை தளர்த்தவும். 
  • மூச்சை உள்ளிழுக்கும்போது, கைகளை மேலே உயர்த்தி, மூச்சை வெளியே விடும்போது, உங்கள் உள்ளங்கைகளை மார்பின் முன் தொழுகை நிலையில் கொண்டு வரவும்.

நன்மைகள்:

மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதன் மூலம் நாள் முழுக்க உங்களுடைய உடலையும் மனதையும் அமைதியாக வைக்கிறது. 

உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

2. ஹஸ்த உத்தனாசனம் | Hasta Uttanasana 

  • மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக கைகளை மேலேயும் பின்புறமும் உயர்த்தவும். 
  • கைகளை உங்கள் காதுகளுக்கு அருகில் வைத்து, தண்டு மற்றும் தலையை பின்னோக்கி வளைத்து சிறிது வளைந்த நிலையில் நில்லுங்கள். 
  • இந்த நிலையின் குறிக்கோளே முழு உடலையும் நீட்டுவதே.

நன்மைகள்: 

  • இது உடலை சூடுபடுத்துகிறது, முதுகெலும்பை பலப்படுத்தி, முதுகுவலியை குறைக்கிறது.
  • தோள்களை வலுவடைய செய்கிறது.  
  • செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்று தசைகளையும் நீட்டிக்கிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

3. ஹஸ்தபாதாசனம் | Hastapadasana 

  • மூச்சை வெளியே விடும்போது, இடுப்பிலிருந்து முன்னோக்கி வளைத்து, முதுகுத்தண்டை நிமிர்ந்து வைக்கவும். 
  • உங்கள் கைகளை கால்களுக்கு அருகில் தரையில் கொண்டு வரவும்.
  • தலை முழங்கால்களை தொடும் விதத்தில் இருக்க வேண்டும்.

நன்மைகள்: 

  • முதுகின் தசைகளை பலப்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. 
  • இது வயிற்று உறுப்புகளை சுறுசுறுப்பாக்குவதோடு, முதுகெலும்பை நெகிழ்வடைய செய்கிறது. 
  • குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

4. அஷ்வ சஞ்சலனாசனம் | Ashwa Sanchalanasana 

  • மூச்சை உள்ளிழுத்து இடது காலை பின்னால் முடிந்தவரை பின்னால் தள்ள வேண்டும். 
  • உங்கள் வலது காலை முன்னோக்கி கொண்டு வந்து உங்கள் கைகளுக்கு இடையில் மடத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னால் வளைந்து முகத்தை உயர்த்தி மேலே பார்க்கவும். 

நன்மைகள்: 

  • முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுவாக்கும். 
  • இடுப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் வலுப்படுத்துகிறது.  
  • மார்புத் தசைகளை நீட்டி, அதன் மூலம் நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. 
  • முதுகெலும்பை நீட்டுகிறது, எனவே முதுகின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

 5. கும்பகாசனம் | Kumbhakasana  

  • மூச்சை உள்ளிழுத்து, இரண்டு கால்களையும் பின்னோக்கி வைத்து, முழு உடலும் புஷ்அப் பொசிஷன் போல நேர்கோட்டில் வைத்துக் கொள்ளவும்.
  • உங்கள் கைகள் மற்றும் கால்விரல்களில் உடல் எடையை தாங்குமாறு இருக்க வேண்டும்.

நன்மைகள்: 

  • கைகள், மணிக்கட்டுகள் மற்றும் தோள்களின் தசைகளை பலப்படுத்துகிறது. 
  • தசைகளை உறுதிப்படுத்திகிறது. 
  • சகிப்புத்தன்மையை வளர்ப்பதற்கும் உதவுகிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

6. அஷ்டாங்க நமஸ்காரம் | Ashtanga Namaskara 

  • உங்கள் முழங்கால்களை தரையில் வளைத்து இடுப்பை மேலே உயர்த்திக் கொள்ளவும். 
  • பின்னர், கன்னம் மற்றும் மார்பை தரையில் தாழ்த்திக் கொள்ளுங்கள். 
  • மார்பு, கன்னம், முழங்கால்கள், கைகள் மற்றும் பாதங்கள் ஆகிய எட்டு உடல் உறுப்புகளும் தரையைத் தொட வேண்டும். 

நன்மைகள்: 

  • மார்பு மற்றும் அதன் தசைகளை பலப்படுத்துகிறது. 
  • கைகள் மற்றும் கால்களின் தசைகளை வலுப்படுத்துகிறது. 
  • முதுகு மற்றும் முதுகெலும்புகளின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

 7. புஜங்காசனம் | Bhujangasana  

  • முன்னோக்கி படுத்து உங்கள் மார்பை மேலே உயர்த்தி நாகப்பாம்பு போல் உடம்பை அமர்த்துங்கள். 
  • உங்கள் முழங்கைகளை தரையில் வைத்துக் கொள்ளவும்.
  • மேலே பார்த்தப்படி, நீங்கள் உள்ளிழுக்கும்போது, மெதுவாக மார்பு பகுதியை முன்னோக்கி தள்ளுங்கள்; நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, மென்மையாக வயிறு பகுதியை கீழே தள்ள முயற்சி செய்யுங்கள். 

நன்மைகள்: 

  • உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 
  • முதுகுவலியை போக்குகிறது மற்றும் முதுகுத்தண்டுக்கு நல்ல நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. 
  • அடிவயிற்றை உறுதியடைய செய்து செரிமானத்தை எளிதாக்குகிறது.
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

8. அதோ முக்தா ஸ்வானாசனம் | Adho Mukha Svanasana  

  • மூச்சை வெளியே விட்டபடி, இடுப்பு மற்றும் விலா எலும்பை மேலேயும் பின்புறமும் உயர்த்தவும், மார்பு கீழ்நோக்கி தலைகீழாக ‘V’ நிலையில் இருக்கவும். 
  • உங்கள் தலையை கீழே பார்த்தப்படியும் மற்றும் தோள்பட்டையை பின்னால் வைத்தபடியும், காலின் முட்டிப்பகுதியை தரையில் தள்ள முயற்சிக்கவும். 

நன்மைகள்: 

  • தலைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 
  • செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. 
  • தோள்பட்டை, வயிறு, கைகள், கால்கள், முதுகுத்தண்டு ஆகியவற்றை பலப்படுத்துகிறது. 
  • தலைவலி, முதுகுவலி, தூக்கமின்மை ஆகியவற்றை நீக்குகிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

9. அஷ்வ சஞ்சலனாசனம் | Ashwa Sanchalanasana  

  • மூச்சை உள்ளிழுத்து இடது காலை பின்னால் முடிந்தவரை பின்னால் தள்ள வேண்டும். 
  • உங்கள் வலது காலை முன்னோக்கி கொண்டு வந்து உங்கள் கைகளுக்கு இடையில் மடத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின்னால் வளைந்து முகத்தை உயர்த்தி மேலே பார்க்கவும். 

நன்மைகள்: 

  • முழங்கால் மற்றும் கணுக்கால்களை வலுவாக்கும். 
  • இடுப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் வலுப்படுத்துகிறது.  
  • மார்புத் தசைகளை நீட்டி, அதன் மூலம் நுரையீரல் திறனை அதிகரிக்கிறது. 
  • முதுகெலும்பை நீட்டுகிறது, எனவே முதுகின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

 10. ஹஸ்தபாதாசனம் | Hastapadasana

  • மூச்சை வெளியே விடும்போது, இடுப்பிலிருந்து முன்னோக்கி வளைத்து, முதுகுத்தண்டை நிமிர்ந்து வைக்கவும். 
  • உங்கள் கைகளை கால்களுக்கு அருகில் தரையில் கொண்டு வரவும்.
  • தலை முழங்கால்களை தொடும் விதத்தில் இருக்க வேண்டும்.

நன்மைகள்: 

  • முதுகின் தசைகளை பலப்படுத்துகிறது, நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது மற்றும் சரியான இரத்த ஓட்டத்தை பராமரிக்கிறது. 
  • இது வயிற்று உறுப்புகளை சுறுசுறுப்பாக்குவதோடு, முதுகெலும்பை நெகிழ்வடைய செய்கிறது. 
  • குறிப்பாக, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்கிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

 11. ஹஸ்த உத்தனாசனம் | Hasta Uttanasana 

  • மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக கைகளை மேலேயும் பின்புறமும் உயர்த்தவும். 
  • கைகளை உங்கள் காதுகளுக்கு அருகில் வைத்து, தண்டு மற்றும் தலையை பின்னோக்கி வளைத்து சிறிது வளைந்த நிலையில் நில்லுங்கள். 
  • இந்த நிலையின் குறிக்கோளே முழு உடலையும் நீட்டுவதே.

நன்மைகள்: 

  • இது உடலை சூடுபடுத்துகிறது, முதுகெலும்பை பலப்படுத்தி, முதுகுவலியை குறைக்கிறது.
  • தோள்களை வலுவடைய செய்கிறது.  
  • செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்று தசைகளையும் நீட்டிக்கிறது. 
உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

12. பிரணமாசனம் | Pranamasana 

  • யோகா பாயில் நிமிர்ந்து நின்று, உங்கள் கால்களை ஒன்றாக வைத்து, இரு கால்களிலும் உங்கள் எடையை சமநிலைப்படுத்துங்கள். 
  • உங்கள் மார்பை விரிவுபடுத்தி தோள்களை தளர்த்தவும். 
  • மூச்சை உள்ளிழுக்கும்போது, கைகளை மேலே உயர்த்தி, மூச்சை வெளியே விடும்போது, உங்கள் உள்ளங்கைகளை மார்பின் முன் தொழுகை நிலையில் கொண்டு வரவும்.

நன்மைகள்:

மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைப்பதன் மூலம் நாள் முழுக்க உங்களுடைய உடலையும் மனதையும் அமைதியாக வைக்கிறது. 

உடலுக்கு வலிமை தருவதோடு, பல பிரச்சனைகளை போக்கும் சூரிய நமஸ்காரம்.. | Surya Namaskar Yoga Benefits in TamilRepresentative Image

சூரிய நமஸ்காரத்தின் நன்மைகள்:

  • சூரிய நமஸ்காரத்தை வேகமாகச் செய்வது ஒரு சிறந்த இருதய பயிற்சியாகச் செயல்படுகிறது. 
  • அதிக எடையை குறைக்க உதவுகிறது மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. 
  • மேலும், உங்கள் முழு உடலையும் தசைகளையும் வலுப்படுத்த உதவுகிறது. 
  • உங்களை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க வைக்கிறது. 
  • உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 
  • பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது. 
  • ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களில் சீரான மாதவிடாய் சுழற்சியை ஊக்குவிக்கிறது. 
  • இத்தகைய நன்மைகள் நிறைந்த சூரிய நமஸ்காரத்தை முறையான வழிமுறைகளுடன் சரியான முறையில் செய்தால் உடலுக்கு மிகவும் நல்லது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்