Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஜல்லிக்கட்டு அடுத்து பாரம்பரிய போட்டியான ரேக்ளா ரேஸின் வரலாறு தெரியுமா?| Rekla Race in Tamil

Priyanka Hochumin Updated:
ஜல்லிக்கட்டு அடுத்து பாரம்பரிய போட்டியான ரேக்ளா ரேஸின் வரலாறு தெரியுமா?| Rekla Race in TamilRepresentative Image.

தை பொங்கல் திருநாளில் பல வீர விளையாட்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அதில் ஒன்றான மாட்டுவண்டி போட்டி (ரேக்ளா ரேஸ்) பலருக்கும் பிடித்த விளையாட்டாகும். தமிழர்கள் பாரம்பரியத்தில் அன்று முதல் இன்று வரை நடைமுறையில் இருக்கும் இந்த விளையாடு ஆங்காங்கே கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும் ஆண்டு முழுவதும் நம்முடன் உழைக்கும் மாடுகளுக்கு உரிமையாளர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்த போட்டி நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டு அடுத்து பாரம்பரிய போட்டியான ரேக்ளா ரேஸின் வரலாறு தெரியுமா?| Rekla Race in TamilRepresentative Image

உழவர்களுக்கு மிகவும் முக்கியமாக தேவைப்படும் மாட்டுவண்டியின் கண்டுபிடிப்பு அப்போது வாழ்ந்த மக்களின் நாகரிகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது. எதை வைத்து இப்படி சொல்லப்படுகிறது என்றால், முன்பெல்லாம் கால் நடையாக செல்ல வேண்டும் என்பதால் நீண்ட தூரம் பிரயாணம் கடினமாக இருந்தது. மேலும் அதிக பாரம் சுமந்து நடைப்பயணம் செய்யவும் முடியாது. இந்த இரண்டிற்கும் ஒரே பதில் போல கண்டுபிடிக்கப்பட்டது தான் மாட்டு வண்டி. இதனால் வணிகம் அதிகரித்தது மக்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக மாறியது.

ஜல்லிக்கட்டு அடுத்து பாரம்பரிய போட்டியான ரேக்ளா ரேஸின் வரலாறு தெரியுமா?| Rekla Race in TamilRepresentative Image

இப்படி வாழ்வியலை மேம்படுத்திய மாடுகளை அவ்வப்போது விளையாட்டுகளில் ஈடுபடுத்தி மகிழ்ந்தனர். பின்னர் முதலில் இலக்கை அடைந்த மாட்டு வண்டிக்கு ஆரவாரம் செய்தனர். இந்த விளையாட்டின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட பிரியத்தால், காலப்போக்கில் பண்டிகை காலங்களில் நடத்தத் தொடங்கினர். அப்படி தான் பொங்கல் அன்று ரேக்ளா ரேஸ் நடைமுறைக்கு வந்தது. இந்த போட்டியில் கலந்துக்கொள்ளும் மாட்டு வண்டியில் உரிமையாளர் மற்றும் உதவியாளர் என்று இரண்டு பேர் மட்டும் இருக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு அடுத்து பாரம்பரிய போட்டியான ரேக்ளா ரேஸின் வரலாறு தெரியுமா?| Rekla Race in TamilRepresentative Image

பந்தயத்தில் போட்டியிடும் மாடுகளை பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு மாடுகள் என்று பிரிப்பார்கள். மாடுகளின் அளவிற்கு ஏற்ப பெரிய மாடுகளுக்கு 15 அல்லது 16 கி.மீ தூரமும், நடுத்தர மாடுகளுக்கு 12 கிமீ, கரிச்சான் மாடுகளுக்கு 10 கிமீ, பூஞ்சிட்டு மாடுகளுக்கு 7 கிமீ தூரம் என்று நீர்ணயிக்கப்படும். போட்டியின் முடிவில் எந்த வண்டி முதலில் இலக்கை அடைகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். அவர்களுக்குடன் சேர்த்து மாடுகளுக்கும் மாலை மரியாதை செய்து பரிசு வழங்கபப்ட்டு கௌரவிக்கப்படுவார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்