Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

layoffs in Startups: யூனிகார்ன் கம்பெனியே இப்படி பண்ணலாமா?

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 13:00 [IST]
layoffs in Startups: யூனிகார்ன் கம்பெனியே இப்படி பண்ணலாமா?Representative Image.

Udaan Layoffs 2022: பிசினஸ்-டு-பிசினஸ் ஈகாமர்ஸ் நிறுவனமான உடான் (Udaan), பொருளாதார நெருக்கடியால் செலவுகளை குறைக்க பணிநீக்கங்களை செய்து வரும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நீண்ட பட்டியலில் இணைந்துள்ளது. அதாவது, பெங்களூரை சேர்ந்த இந்த யூனிகார்ன் நிறுவனம் சுமார் 180 ஊழியர்களை (ஜூன் 27 ஆம் தேதி) பணிநீக்கம் செய்துள்ளது. அதாவது அதன் பணியாளர்களில் 4-5 சதவீதத்தை குறைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு..

மேலும், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் வழங்கவுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு - சுய மற்றும் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீடு (தற்போதுள்ள கவரேஜ் திட்டத்தின் அடிப்படையில்), நிறுவனத்தின் கொள்கையின்படி இழப்பீட்டுத் தொகுப்பு (compensation package) மற்றும் வேலை வாய்ப்பு உதவி ஆகியவை நிறுவனத்தால் வழங்கப்பட உள்ளது.

யூனிகார்ன் ஸ்டார்ட்அப் உடான்:

2016 ஆம் ஆண்டு பிளிப்கார்ட்டின் முன்னாள் ஊழியர்களான சுஜீத் குமார், அமோத் மால்வியா, மற்றும் வைபவ் குப்தா ஆகியோரால் நிறுவப்பட்ட Udaan, இந்தியாவின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கான சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகர்கள், மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு உதவி வருகிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2018 செப்டம்பர் மாதம் சுமார் 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதியை பெற்று இந்தியாவின் யூனிகார்ன்களின் ஒன்றாக மாறியது.

இந்தியாவின் 103வது யூனிகார்னாக உருவெடுத்த பெங்களூரை சேர்ந்த SaaS ஸ்டார்ட்அப்....

 

உடனுக்குடன் செய்திகளை (Startup News Tamil) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்