Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Edtech Startup Udayy Shuts Down: தனது அத்தனை ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்கி, கடையை மூடிய பிரபல எட்டெக் ஸ்டார்ட்அப்... !! மோசமாகி வரும் எட்டெக் துறையின் நிலைமை..

Nandhinipriya Ganeshan June 04, 2022 & 17:45 [IST]
Edtech Startup Udayy Shuts Down: தனது அத்தனை ஊழியர்களையும் வேலையிலிருந்து நீக்கி, கடையை மூடிய பிரபல எட்டெக் ஸ்டார்ட்அப்... !! மோசமாகி வரும் எட்டெக் துறையின் நிலைமை..Representative Image.

Edtech Startup Udayy Shuts Down: உதய், மழலையர் முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களை மையமாகக் கொண்ட ஒரு எட்டெக் ஸ்டார்ட்அப். சௌமியா யாதவ், கரண் வர்ஷ்னி மற்றும் மஹாக் கர்க் ஆகியோரால் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, இந்த ஸ்டார்ட்அப் பிப்ரவரி மாதத்தில் அமெரிக்காவை தளமாக கொண்ட நார்வெஸ்ட் பார்ட்னர்களிடமிருந்து 10 மில்லியன் டாலர்களையும், அதேபோல் கடந்த ஆண்டு விதை சுற்று ஒன்றில் 2.5  மில்லியன் டாலர்களையும் திரட்டியுள்ளது.

120 ஊழியர்கள் பணிநீக்கம்:

ஆனால், கொரோனா தொற்றுக் கட்டுப்பாடு விலகி மாணவர்கள் மீண்டும் பள்ளிகளுக்கு செல்ல ஆரம்பித்ததால், எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாபெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், எட்டெக் ஸ்டார்ட்அப் இதுவும் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. அதன்படி, பொருளாதார இழப்பீடுகளை சமாளிக்க முடியாமல் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த 100-120 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்து, தனது செயல்பாடுகளை (startups shuts down in 2022) நிறுத்தியுள்ளது. 

முதலீடுகள் திருப்பி ஒப்படைப்பு:

இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் சௌமியா யாதவ், "கோவிட் 19 கட்டுபாடுகள் நீங்கியதால், எங்களால் வணிகத்தில் லாபத்தை காண முடியாமல் போனதால் தான் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், எங்களிடம் முதலீடு செய்த $8-$8.5 மில்லியன் முதலீடுகளை முதலீட்டாளர்களுக்கே திருப்பி கொடுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

லிடோ ஸ்டார்ட்அப்:

மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஆஃப்லைனில் கல்வி கற்பிக்க ஆரம்பித்துவிட்டனர், ஆனால் எங்களால் அது முடியாது என்பதும் இந்த செயல்பாடுகளை நிறுத்த ஒரு காரணம் என யாதவ் கூறினார். இதோபோல், மற்றொரு ஆன்லைன் லேர்னிங் ஸ்டார்ட்அப்பான லிடோ லேர்னிங் நிறுவனமும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 10 மில்லியன் டாலர் திரட்டியது, ஆனாலும் ஜனவரி மாதத்தில் 1,200 பேரை பணிநீக்கம் செய்தது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் தனது செயல்பாடுகளை மூடவும் செய்தது. இருப்பினும், ரிலையன்ஸ் இந்த ஸ்டார்ட்அப்பை வாங்கிவிட்டதால், தற்போது மீண்டும் செயல்பாட்டை தொடங்கியுள்ளது. 


இந்திய ஸ்டார்ட்அப்களின் இந்த மாசத்தோட நிதியை கேட்டிங்கனா ஷாக் -ஆகி போய்டுவீங்க... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்