Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Lenskart Funding: ஐபிஓ -க்கு திட்டமிடும் லென்ஸ்கார்ட்...!!

Nandhinipriya Ganeshan August 09, 2022 & 13:30 [IST]
Lenskart Funding: ஐபிஓ -க்கு திட்டமிடும் லென்ஸ்கார்ட்...!!Representative Image.

புதுடெல்லியை சேர்ந்த டி2சி ஸ்டார்ட்அப் நிறுவனமான 'லென்ஸ்கார்ட்' Lenskart, சீரிஸ் ஐ சுற்றில் ரவி மோடி ஃபேமிலி டிரஸ்டிடமிருந்து $12.5 (சுமார் ரூ.100 கோடி) மில்லியனை பெற்றுள்ளது. மான்யவர், மோஹே மற்றும் மந்தன் போன்ற பிராண்டுகளுக்கு சொந்தமான கொல்காத்தாவை சேர்ந்த ரவி மோடி ஃபேமிலி டிரஸ்ட் வேதாந்த் ஃபேஷன்ஸின் முக்கிய ஆதரவாளராக விளங்குகிறது. 

மேலும், லென்ஸ்கார்ட் ஆல்பா வேவ் வென்ச்சர்ஸ் - $100 மில்லியன், எபிக் கேபிட்டல் - $25 மில்லியன், அவெண்டஸ் கேபிட்டல் - $28 மில்லியன் என ஒரு வருடத்தில் பல முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் $165 மில்லியனை வசூலித்தது. ஆனால், பொருளாதாரம் மந்தநிலையின் காரணமாக கணிசமான போதிய வருமானத்தை காணமுடியாமல் போனது. இதனால், $2.5 பில்லியன் முதலீடு செய்து சுமார் ஒரு வருடத்திற்கு பின்பு $315 மில்லியன் வருவாயை எட்டியுள்ளது. 

இதற்கிடையில் தான், சுமார் 400 மில்லியன் டாலர் செலுத்தி ஜப்பானிய கண்ணாடி பிரண்டான OWNDAYS ஐ வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பன்சால், அமித் சவுத்ரி மற்றும் சுமீத் கபாத்தி ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லென்ஸ்கார்ட், ஒவ்வொரு ஆண்டும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்யும் நாட்டின் மிகவும் பிரபலமான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்