Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

upGrad Funding: எட்டெக் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகையில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மட்டும் குறையவே இல்ல...

Nandhinipriya Ganeshan August 09, 2022 & 10:35 [IST]
upGrad Funding: எட்டெக் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகையில், இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மட்டும் குறையவே இல்ல...Representative Image.

upGrad Funding: இடிஎஸ் குளோபல், போதி ட்ரீ, கெய்சென் மேனேஜ்மென்ட் அட்வைசர்ஸ் ஆகியோரிடம் இருந்து Ronnie Screwvala -வின் எட்டெக் யூனிகார்ன் நிறுவனமான 'அப்கிரேட்' upGrad, $210 மில்லியனை (சுமார் ரூ.1,670 கோடி) பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல், நரோதம் சேக்சாரியா (அம்புஜா சிமெண்ட்ஸ்), ஆர்டியன் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (லக்ஷ்மி மிட்டல்) ஆகியவற்றின் குடும்ப அலுவலகங்களும், தற்போதுள்ள முதலீட்டாளர்களான டெமாசெக், ஐஎஃப்சி மற்றும் ஐஐஎஃப்எல் ஆகியோரும் இந்த சுற்றில் பங்கேற்றன.

TANSEED 4.0 

அதுமட்டுமல்லாமல், நிறுவனர் குழுவும் இந்த சுற்றில் $12.5 மில்லியனை முதலீடு செய்து, அப்கிரேடில் தங்களின் >50% உரிமையைத் தக்க வைத்துள்ளது.  இதனடிப்படையில் நிறுவனமானது FY23 இல் $400 Mn - $500 Mn வருடாந்திர மொத்த வருவாயைப் பதிவு செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில், கொரோனா கட்டுபாடு நீங்கி மீண்டும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டதால் பல எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நஷ்டத்தை கண்டு வருகின்றன. இதனால், பெரிய நிறுவனங்கள் கூட தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்த கசப்பான காலத்தில் இந்த எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் இவ்வளவு மதிப்புடைய நிதியை திரட்டியிருப்பது மற்ற பிரபல ஆன்லைன் வகுப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் அதுர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

2025 ஆம் ஆண்டிற்குள் 10.4 பில்லியன் டாலராக உயர தயாராக இருக்கும் இந்திய எட்டெக் துறை, சமீபத்தில் நிறைய பணிநீக்கங்களை கண்டுவருகிறது. இதனை சமாளிக்க அனாகாடமி, பைஜூஸ் போன்ற பிரபல யூனிகார்ன் நிறுவனங்கள் ஆஃப்லைன் சந்தையில் நுழைந்துள்ளன. 

அந்த வகையில், அப்கிரேடும் சில பணிநீக்கங்களை செய்துள்ளது. இருப்பினும் அதன் Program completion rate 80% -க்கும் மேல் ஏற்றத்துடன் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த நிதி திரட்டலுக்குப் பிறகு, 170+ முழுநேர ஆசிரியர்கள், 1,600+ ஆசிரியர்கள் மற்றும் 5K ஒப்பந்த பயிற்சியாளர்கள் என அதன் பணியாளர்களை 4,800 லிருந்து 7,600 ஆக அதிகரிக்க உள்ளது. இதனடிப்படையில், பலருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்