Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 23 - மே 28]...

Nandhinipriya Ganeshan May 29, 2022 & 16:05 [IST]
Weekly Funding Galore: இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 23 - மே 28]...Representative Image.

Weekly Funding Galore: இந்த வாரம் 30 இந்திய ஸ்டார்ட்அப்கள் நிதி திரட்டியுள்ளன. அதில் 29 நிறுவனங்களின் மொத்த மதிப்பு $251 மில்லியன் பெற்றுள்ளன. ஆனால், ஒரு நிறுவனம் மட்டும் தனது நிதியுதவி தொகையை வெளியிடவில்லை. இந்த வாரம் Country Delight நிறுவனம் தான் அதிக நிதியை திரட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து Seclore மற்றும் BluSmart முறையே $27 மில்லியன் மற்றும் $ 25 மில்லியன் நிதியை திரட்டியுள்ளன. கடந்த வாரத்தை பொறுத்த வரை மொத்தம் 28 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் $ 438.07 மில்லியன் மதிப்புள்ள நிதியை திரட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வாரத்தின் ஒப்பந்தங்கள்:

பால் மற்றும் மளிகைப் பொருட்களை நேரடியாக விநியோகிக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனமான Country Delight வென்டூரி பார்ட்னர்ஸ், டெமாசெக், எஸ்டபிள்யூசி குளோபல், ட்ரிஃபெக்டா கேபிடல் மற்றும் பலவற்றிலிருந்து தொடர் D சுற்றில் கடன் மற்றும் பங்குகளின் அடிப்படையில் $108 மில்லியனை திரட்டியது.

என்ட்டர்பிரைஸ் டெக் ஸ்டார்ட்அப் Seclore நிறுவனம், Oquirrh வென்ச்சர்ஸ் மற்றும் Origami Capital தலைமையிலான தொடர் C நிதி சுற்றில் $27 மில்லியனை திரட்டியுள்ளது.  

எலெக்ட்ரிக் ரைடு-ஹெய்லிங் பிளாட்பார்ம் BluSmart ஆனது, BP வென்ச்சர்ஸ், Green Frontier Capital, Stride Ventures, Alteria Capital, BlackSoil மற்றும் UCIC ஆகியவற்றிலிருந்து தொடர் A சுற்றில் $25 மில்லியன் திரட்டியது.

கிரானா ஸ்டோர்களுக்கான ஆன்லைன் தளமான 1K Kirana, ஆல்பா வேவ் வென்ச்சர்ஸ், இன்ஃபோ எட்ஜ் வென்ச்சர்ஸ் மற்றும் கே கேபிடல் தலைமையிலான தொடர் B நிதிச் சுற்றில் $25 Mn திரட்டியுள்ளது. 

EV ஃபைனான்சிங் ஸ்டார்ட்அப்  Three Wheels United, டெல்டா கார்ப் ஹோல்டிங்ஸ் தலைமையில் ஒரு தொடர் A சுற்றில் டெக்ஸ்டார்ஸ், கிரிப் இன்வெஸ்ட் மற்றும் பிற முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் $10 மில்லியன் திரட்டியது.

சப்ளை செயின் ஃபோகஸ்டு ஃபின்டெக் ஸ்டார்ட்அப் NAKAD நிறுவனம்,  Accel, Matrix Partners India, AdvantEdge Founders மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து ஒரு விதை சுற்றில் $7 மில்லியனை திரட்டியது.

Instant EMI ஸ்டார்ட்அப் ShopSe நிறுவனம், BEENEXT, Chiratae வென்ச்சர்ஸ் மற்றும் வைட் வென்ச்சர் கேபிட்டல் ஆகியவற்றிலிருந்து தொடர் A சுற்றில் $6.1 மில்லியன் திரட்டியது.

வெளிப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் (Undisclosed deals): விங் ஹைப்ரிட் நிறுவனம் அதன் நிதி விவரங்களை வெளியிடவில்லை.

இந்த வார Acquisitions:

மாதத்தின் கடைசி வாரத்தில் மூன்று டஜன் நிதி திரட்டல்களை தவிர, மூன்று கையகப்படுத்தல்களும் (acquisitions) காணப்பட்டன. 

Krishi Network நிறுவனம் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான Rocket Skills -வையும், Southco நிறுவனம் Darshna Industries -வையும்,  Infinity Learn நிறுவனம் WizKlub -வையும் ($10 மில்லியன்) வாங்கியுள்ளன. 

இந்த வாரம் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிதி குவிப்பு முழுவிபரம் [மே 16 - மே 21]...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்