Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,952.94
-53.00sensex(-0.07%)
நிஃப்டி22,513.60
11.60sensex(0.05%)
USD
81.57
Exclusive

Captcha Code Latest News: இனிமே இந்த நச்சு புடிச்ச வேல இல்ல...எதை பற்றின்னு தெரிஞ்சிக்கோங்க!

Priyanka Hochumin June 21, 2022 & 19:00 [IST]
Captcha Code Latest News: இனிமே இந்த நச்சு புடிச்ச வேல இல்ல...எதை பற்றின்னு தெரிஞ்சிக்கோங்க!Representative Image.

Captcha Code Latest News: உங்களிடம் ஐபோன் உள்ளதா, அப்ப இனிமேல் நீங்கள் கேப்ட்சா கோட் (Captcha Code) பற்றி கவலை பட வேண்டாம்.

இப்பொழுது மக்கள் அதிகம் தெரிந்துகொள்ள நினைக்கின்றனர், ஆனால் அதனை கற்றுத்தேர்ந்தவர்களிடம் இருந்து தெரிந்துகொள்ள மறந்து விடுகின்றனர். உடனே போன் இருக்கும், இதில் யார் உண்மை கூறி இருக்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது. ஆனால் அதனை படித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டோம். இப்படி ஒவ்வொரு வெப்சைடிற்குள் நுழையும் பொழுது, ஒரு சில வெப்சைட்களில் நம்முடைய பாஸ்வோர்ட் அல்லது நமக்குத் தெரியாமல் ஹேக் செய்ய என்று நிறைய இருக்கின்றன. அதில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளவே உருவாக்கப்பட்டது இது.

நம்புங்க நா அது இல்ல

ஒரு சாப்ட்வேர் மூலம் இந்த திருட்டு செயல்கள் நடப்பதால், அதனை கண்டறிய உருவாக்கப்பட்டதே கேப்ட்சா கோட். இந்த கேப்ட்சா கோட்களை நீங்கள் ஒரு சில நேரங்களில் செய்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. இது எதற்காக என்றால் நாம் மனிதர்கள் தான் ரோபோட் கிடைக்கையாது என்பதை நிரூபிக்கவே இந்த பயன்பாடு.  இது நிஜமாகவே நம்முடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயல்படும் ஒரு அம்சமாகும். இருப்பினும் இதனை அடிக்கடி செய்வது மிகவும் கடுப்பான ஒன்று.

இந்த இம்சையில் இருந்து பயனர்களை விடுவிக்க முதன்மை நிறுவனமான ஆப்பிள் iOS 16 வெலிஓயாக ஒரு புது அப்டேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களுக்கு தெரிந்திருக்கும், ஜூன் 6 ஆம் தேதி நடந்த உலகளாவிய டெவலப்பர் மாநாட்டில், ஐபோன்களுக்கான ஐஓஎஸ் 16 அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் நாம் கேப்ட்சா கோட் இல் இருந்து எஸ்கேப் ஆகும் வழியும் அடங்கும் என்று கூறப்படுகிறது. ஆப்பிளின் ஆல்-நியூ ஆப்ரேட்டிங் சிஸ்டமான ஐஓஎஸ் 16-இல், ஆப்ஸ் மற்றும் வெப்சைட்களில் கோரப்படும் கேப்ட்சா செயல்முறையை தவிர்ப்பதற்கான ஆதரவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கேட்கும் பொழுது உங்களுக்கு எவ்ளோ மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிகிறது.


Password Manager: பாஸ்வோர்ட் திருடுபோச்சுனா...அடுத்த செகண்ட்...அலெர்ட் மெசேஜ்!


இது எப்படி வேலை செய்யும்

இந்த அம்சம் எங்கு கிடைக்கும்? இந்த அம்சம் செட்டிங்ஸ் ஆப்பில் ஆக்சஸ் செய்ய கிடைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த அம்சம் இயக்கப்படும் பொழுது, ஆப்பிள் ஐக்ளவுட் ஆனது தானாகவே மற்றும் தனிப்பட்ட முறையில் உங்கள் டிவைஸ் மற்றும் உங்கள் ஆப்பிள் ஐடி அக்கவுண்ட்டை, பேக்கிரவுண்டில் சரிபார்க்குமாம்.

இந்த விஷயத்தின் ஆணி வேர் வரை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். இல்ல சும்மா மேலோட்டமா தெரிஞ்சா போதும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து படியுங்கள். நீங்கள் உங்களின் ஐபோனை பயன்படுத்தும் போது ஆப்பிளின் சிஸ்டம் உங்களின் டிவைஸ் மற்றும் ஆப்பிள் ஐடி அக்கவுண்ட் சீரான முறையில் இருக்கிறதா என்று சரிபார்க்கும். பின்பு கேப்ட்சா கோட் இல்லாத குறிப்பிட்ட ஆப் அல்லது வெப்சைட்டிற்கு பிரைவேட் அக்செஸ் டோக்கன் (Private Access Token) என்கிற பெயரின் கீழ் அணுகலை வழங்கும்.


Apple iOS 16: ஐபோனில் வந்துள்ள புதிய iOS 16 அப்டேட்! என்னென்ன புதுசா இருக்க பாருங்க!


ஏதேனும் பாதிப்பு இருக்குமா?

சரி நம்மல ஸ்பேம் கிட்ட இருந்து காப்பாத்த தான் கேப்ட்சா கோட் பயன்படுத்துறாங்க. இப்ப அதுவும் இல்லாம போச்சே! இதுனால ஏதேனும் ஆபத்து இருக்குமா, என்று நினைத்தால் இதோ உங்களுக்கான பதில். பிரைவேட் அக்செஸ் டோக்கன் அம்சத்தை கேப்ட்சா கோட் உடன் கம்பர் செய்து பார்த்தால், இது கொஞ்ச சேஃப் தான். ஏனெனில் நீங்கள் லாகின் செய்யும் பொழுது அல்லது ஒரு புதிய அக்கவுண்ட்டை உருவாக்கும் போது, மேம்படுத்தப்பட்ட மற்றும் சிறந்த யூசர் எக்ஸ்பீரியன்ஸை இது உங்களுக்கு வழங்குகிறது. இருப்பினும் பாதுகாப்பாக இருக்குமா என்று வரும் நாட்களில் தெரிந்துகொள்ளலாம்.

Captcha Code Latest News, Latest News on Captcha code, no more Captcha code

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்