Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்

Priyanka Hochumin October 20, 2022 & 21:00 [IST]
இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image.

இமயமலையில் இருக்கும் இரண்டு முக்கிய மாநிலங்கள் தான் ஜம்மு & காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ். இதில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருக்கும் முக்கிய நகரம் மணாலி மற்றும் ஜம்மு & காஷ்மீரில் இருப்பது லே லடாக். இந்த இரண்டு முக்கிய நகரங்களை இணைக்கும் ரோடு தான் gata loops. இது சுமார் 21 ஹேர்பின் பெண்ட் கொண்ட அதிபயங்கரமான பாதை. மிகவும் மோசமான கரடு முரடான பாதியில் மக்கள் நம்பப்படும் அமானுஷ்ய விஷயம் என்ன

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image

அங்க பேய் இருக்கு...

அந்த பாதையில் செல்லும் போது 18வது ஹேர்பின் பெண்ட் பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அங்கு செல்லும் வாகனங்களை வழி மறித்து தண்ணீர் கேட்பதாக சொல்லப் படுகிறது. ஆனால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கேட்டால் அந்த இடத்தில் மனிதர்கள் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை, அது ஒரு பேய் என்று கூறுகின்றனர். இது உண்மையா? இல்ல கிராமத்தை சேர்ந்தவர்களின் மூடநம்பிக்கையா? என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image

எதனால் இந்த கதை!

மக்கள் இவ்வாறு சொல்வதற்கான பின்னணி என்னென்னு பாக்கலாம். இமயமலையில் இருக்கும் அந்த அமானுஷ்ய பாதையானது ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு அமைதியான பகுதியாகும். அங்கு வெறும் பனிக்கட்டிகளை தாண்டி எதுவும் இருக்காது. மேலும் அந்த gala loops ரோடு எல்லா நாட்களும் வாகனங்கள் செல்ல முடியாது. அதிக பனி காரணாமாக சில மாதங்கள் அந்த ரோட்டில் வாகனங்கள் செல்லாத வகையில் இரண்டு பக்கமும் அடைத்து விடுவார்கள். பனி எல்லாம் குறைந்த பிறகு தான் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்படும்.

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image

நடுவில் மாட்டிக்கொண்ட நபர்....

அப்படி இருக்கையில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு லாரி அந்த பாதையை கடக்க வந்தது. அப்பொழுது பனி அதிகமாக இருப்பதால் இரண்டு பக்கமும் ரோட்டை அடைத்துவிட்டனர். பின்னர் அந்த 18வது ஹேர்பின் பெண்ட் வரும் போது அந்த லாரி செயலிழந்து நின்றுவிட்டது. அந்த லாரியில் இருக்கும் டிரைவர் மற்றும் கிளீனர் முயற்சித்து பாக்குறாங்க எதுவும் வேலைக்கு ஆகல. சுத்தி உதவிக்கு ஆட்கள் யாராவது கிடைப்பங்களான்னு தேடுறாங்க யாருமே இல்ல.

அதுனால டிரைவர், கிளீனரை அங்கையே விட்டுவிட்டு உதவிக்கு ஆள தேடி பல மணி நேரமா நடக்குறார். கடைசில ஒரு கிராமத்துல போய் உதவி கேட்டு கெளம்புறாரு. அதான் ரோடு அடைக்கப்பட்டதால் அவரும் அந்த கிராமத்தில் தங்கியுள்ளார். சுமார் ஒரு வாரம் கழித்து பனி குறைந்த பிறகு ரோடு திறக்கப்பட்டது.

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image

ஆவியாக மாறிய மனிதன்....

டிரைவரோ பதறி போய் அந்த கிளீனர் எப்படி இருக்கான்னு பாக்க கிளம்புறாரு. கடைசில அந்த இடத்துக்கு போய் பாத்தா அந்த பையன் பனியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டான். பிறகு அவனுக்கு யாரும் இல்லாததால் அந்த டிரைவர் கிராமத்தில் இருப்பவர்களின் உதவியோடு காரியம் செய்து அவரின் உடலை அடக்கம் செய்துள்ளார்.

அதற்கு பிறகு அந்த வழியாக எந்த வாகனம் செல்லும் போதும், அந்த பையன் இறந்த இடம் அதாவது 18வது ஹேர்பின் பெண்ட் இடத்தில் ஒருவர் கிழிந்த ஆடையுடன் தண்ணீர் கேட்பதாக கூறப்படுகிறது. இதைப் பற்றி கிராமத்து மக்கள் அப்படி இருக்க வாய்ப்பே இல்லை, நீங்கள் பேய்-க்கு தான் தண்ணீர் கொடுத்து இருக்கிறீர்கள் என்று சொல்ல ஆரம்பிக்கின்றனர். இது எந்த அளவிக்ரு உண்மை என்று யாருக்கும் தெரியாது.

இந்தியாவின் அமானுஷ்ய பகுதியான...gata loops பற்றி கூறப்படும் மர்மம்! பகீர் உண்மைகள்Representative Image

பேய்-க்கு கோவில்!

ஆனால் இந்த கட்டுக் கதை ஆரம்பித்த பிறகு அப்பகுதியில் இருக்கும் மக்கள், அந்த இளைஞன் தாக்கத்தால் தான் இருந்திருப்பார் அதனால் ஆவியாக மாறி இப்படி செய்வதாக நம்புகின்றனர். அதனால் அந்த இளைஞன் இறந்து இடத்திற்கு பக்கத்தில் மண்டை ஓடு ஒன்றை வைத்து அதை சுற்றி செங்கல் வைத்து வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் அதை தாண்டி செல்பவர்கள் தண்ணீர் தராமல் போனால் அந்த உருவம் துரத்திட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பாதையை கடக்க நினைப்பவர்கள் அந்த கோவிலில் தண்ணீர் பாட்டில் ஒன்றை வைத்து விட்டு வணங்கி செல்வதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் இருக்கும் ஒரு பாட்டில் கூட திறக்காமல் தான் இருக்குமாம்.

இதை அங்கிருப்பவர்கள் மட்டும் நம்ப வில்லை, சுற்றுலா பயணிகள் வந்தாலும் இந்த பழக்கத்தை பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்