Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
0.00sensex(0.00%)
நிஃப்டி22,502.00
0.00sensex(0.00%)
USD
81.57
Exclusive

0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!

Priyanka Hochumin October 25, 2022 & 19:00 [IST]
0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!Representative Image.

முதலில் நாகரீகம் என்றால் என்ன? மிகவும் மேம்பட்டதாகக் கருதப்படும் மனித சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி மற்றும் அமைப்பின் நிலையை தான் நாகரீகம் என்று சொல்கிறோம். நம்முடைய இந்த பிரபஞ்சமானது மிகவும் பெரியது. அதில் இருக்கும் இந்த observable universe 93 மில்லியன் ஒளியாண்டு டயாமீட்டர் அளவுடையது.

இந்த பேரண்டத்தில் நம்முடைய milky way galaxy போல் பல கோடி கேலக்சிகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றையும் சுற்றி கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருப்பதாகவும், அவற்றில் 40 பில்லியன் கிரகங்களில் உயிரினங்கள் வாழலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர். அவற்றுள் மனிதர்களாகிய நம்மை போலவோ அல்லது நம்மை விடவோ அறிவில் மேம்படுத்தப்பட்ட ஜீவராசிகள் வாழலாம் என்று குறிப்பிடுகின்றனர். 

0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!Representative Image

கர்தாஷேவ் அளவுகோல்...

1964 ஆம் ஆண்டு ரஷ்யன் வானியல் இயற்பியலாளர் (astrophysicist) நிகோலாய் கர்தாசேவ் என்பவர் உயிரினங்களின் நாகரிகத்தை அவர்கள் பயன்படுத்தும் சக்திகளைக் கொண்டு வகைப் படுத்தியுள்ளார். அதாவது எந்த ஒரு உயிரினம் மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பத்தில் முன்னேற்றத்தில் உள்ளது மற்றும் மாற்று சக்திகளை எப்படி தனக்காக உபயோகிக்கிறது என்பதன் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். இதனை அளப்பதற்காக கர்தாஷேவ் அளவுகோல் (kardashev scale) என்பதை உருவாக்கியுள்ளார். 

இவர் அதைக் கொண்டு மொத்தம் மூன்று வகையான (Type 1, Type 2, Type 3) நாகரீகம் இருக்கலாம் என்று கூறுகிறார். இதில் மனிதர்கள் ஆகிய நாம் Type 0.72 இல் இருக்கிறோம். நாம் இன்னும் Type 1-ஐ கூட நெருங்கவில்லை என்று கூறுகிறார். 

0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!Representative Image

Type 1 Civilization

இதனை Planetary civilization என்று குறிப்பிடறாங்க. இந்த நாகரீகத்தை சேர்ந்த ஜீவராசிகள் வாழ்வதற்கு இயற்கையை சாராமல், nuclear எனர்ஜியை பிரதானமாகக் கொண்டு வாழ்வார்கள். பூமியில் வாழும் நாம் nuclear எனர்ஜி பெற nuclear fission reaction-ஐ பயன்படுத்துவோம். அனால் டைப் 1 இல் இருப்பவர்கள் nuclear fusion reaction-ஐ பயன்படுத்துவார்கள். இது மிகவும் பாதுகாப்பானது, தூய சக்தியை பல கோடி வருடங்களுக்கு தரும். நாம் இதை எதிர்காலத்தில் பயன்படுத்தினால் சூரிய குடும்பத்தில் இருக்கும் எந்த கிரகத்திற்கு வேண்டுமானாலும் போக முடியும். நாம் டைப் 1 civilization ஆக மாற 3000 ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிடுகின்றனர். 

0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!Representative Image

Type 2 Civilization

இதனை Stellar Civilization என்று குறிப்பிடறாங்க. இந்த நாகரீகத்தில் வாழும் உயிரங்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும் நட்சத்திரத்தில் இருந்து சக்தியை எடுத்து பயனப்டுத்துவர்களாம். Freeman Dyson என்னும் தத்துவார்த்த இயற்பியலாளர் (theoretical physicist) - dyson sphere என்னும் கருத்தை உருவாக்கியுள்ளார். அதனை பயன்படுத்தி ஒரு நட்சத்திரத்தில் இருந்து நமக்கு தேவையான சக்திகளை எடுக்க முடியும். ஆனால் விண்வெளியில் ஒரு நட்சத்திரத்தை சுற்றி அப்படியான ஒரு வடிவமைப்பு செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. 

மனிதர்கள் இந்த Type 2 Civilization-க்கு வரும் போது எனர்ஜி சம்மந்தமான அனைத்து பிரச்னையும் தீரும். சோலார் சிஸ்டத்தில் இருக்கும் மற்ற கிரகத்திற்கு போய் குடியேற முடியும் என்று கூறுகின்றனர். மேலும் உடல்ரீதியான பிரச்சனை இருந்தால் ஜெனெடிகள் முறையில் எளிமையாக குணப்படுத்தலாம். நாம் இந்த நாகரீயகத்தை நெருங்க சுமார் 1 லட்சம் வருடங்கள் ஆகலாம். 

0.72 வளர்ச்சிக்கு தான் வந்திருக்கோம்...இன்னும் மேல வர...3000 ஆண்டுகள் ஆகுமாம்!Representative Image

Type 3 Civilization

இதனை Galactic Civilization என்று குறிப்பிடுகின்றனர். இந்த நாகரீகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய கேலக்சியில் இருக்கும் எந்த நட்சத்திரத்தின் எனர்ஜியையும் எடுத்து பயன்படுத்தும் அளவிற்கு இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தை நீட்டிற்கும் திறனுடையவ்வர்களாக இருப்பார்கலாம். 

நிகோலாய் கர்தாசேவ்வின் கூற்றுப் படி, ஒரு உயிரினத்தால இந்த அளவிற்கான வளர்ச்சியைத் தான் அடைய முடியும், இதற்கு மேல செல்ல வாய்ப்பே இல்லை என்று கூறுகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்