Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேமராவுக்காகவே Infinix Zero சீரிஸ்...போனை வாங்கணும் போலையே...பின்ன 200MP கேமரால்ல!

Priyanka Hochumin Updated:
கேமராவுக்காகவே Infinix Zero சீரிஸ்...போனை வாங்கணும் போலையே...பின்ன 200MP கேமரால்ல!  Representative Image.

Infinix நிறுவனம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி தங்களின் கை வசத்தில் இருக்கும் Infinix Zero சீரிஸை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் Infinix Zero 20 மற்றும் Infinix Zero Ultra ஆகிய இரண்டு மாடல்கள் அடங்கும். மேலும் 200MP கேமரா அம்சத்திற்காகவே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இந்த போனுக்கு உள்ளது. அதனால் வெளியாவதற்கு முன்னரே பலரின் கவனத்தை ஈர்த்து இந்த ஆண்டின் சூப்பர் விற்பனை பட்டியலில் இடம்பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த மாடல்களின் விலை, அம்சங்கள் போன்ற விவரங்களை இந்த பதிவில் பாப்போம்.

கேமராவுக்காகவே Infinix Zero சீரிஸ்...போனை வாங்கணும் போலையே...பின்ன 200MP கேமரால்ல!  Representative Image

Infinix Zero Ultra அம்சங்கள்:

இந்த மாடல் போன் 6.8 இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வழங்கப்பட்டது. கேமராவைப் பொறுத்த வரை முன்பே கூறியது போல, 200 எம்பி சாம்சங் ஹெச்பி1 பிரைமரி கேமரா மற்றும் 13 எம்பி அல்ட்ராவைட் யூனிட் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் உடன் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் போனின் ஸ்பெஷல் அம்சமாக பார்க்கப்படுகிறது. மிகவும் சக்தி வாய்ந்த MediaTek Dimension 920 SoC சிப் கொண்டு இந்த மாடல் இயங்குகிறது. மேலும் அதிக சேமிப்பிற்காக 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டு வருகிறது. வீடியோ கால் மற்றும் செல்பீ பயன்பாட்டிற்காக முன்புறத்தில் 32 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. நீண்ட நேரம் தடையில்லா பயன்பாட்டிற்காக 4,500mAh பேட்டரியும் அளிக்கப்பட்டுள்ளது.

கேமராவுக்காகவே Infinix Zero சீரிஸ்...போனை வாங்கணும் போலையே...பின்ன 200MP கேமரால்ல!  Representative Image

Infinix Zero 20 அம்சங்கள்:

இந்த போன் ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.7-இன்ச் FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அல்ட்ரா மாடலைப் போலவே இதுவும் 4,500mAh பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் தரமான செயல்பாட்டிற்கு MediaTek Helio G99 SoC செயலியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 108 MP Samsung ISOCELL HM2 பிரைமரி சென்சார், 13 MP அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 2 MP டெப்த் சென்சார் என்று ட்ரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. என்ன தான் மத்த அம்சங்களில் முன்னும் பின்னுமாய் இருந்தாலும் செல்பீ கேமராவில் 60 MP செல்ஃபி கேமரா அம்சம் கொண்டு முதன்மையாக திகழ்கிறது. அதே போல் சேமிப்பு விவரத்தில் 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் அமைப்பைப் பெறுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்