Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... 

Nandhinipriya Ganeshan November 14, 2022 & 14:04 [IST]
Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... Representative Image.

புதிய Oppo Reno 9 சீரிஸ் இன் கசிவுகள் டிப்ஸ்டர் டிஜிட்டல் தளம் மூலம் வெளியாகி இருக்கிறது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியாகும் தகவல்கள் இதன்மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... Representative Image

ஒப்போ ரெனோ 9 சிறப்பம்சங்கள்:

ஒப்போ ரெனோ 9 ஸ்மார்ட்ஃபோனானது Snapdragon 778G சிப்செட், 4,500mAh பேட்டரி மற்றும் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்ஃபோனாது 64-மெகாபிக்சல் + 2-மெகாபிக்சல் என இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... Representative Image

ஒப்போ ரெனோ 9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

அதேபோல், ஒப்போ ரெனோ 9 ப்ரோ ஸ்மார்ட்ஃபோனாது Dimensity 8100-Max சிப்செட், 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பின்புற மேகராவை பொருத்தவரை, 50-மெகாபிக்சல் சோனி IMX890 முதன்மை கேமரா மற்றும் 8-மெகாபிக்சல் லென்ஸை கொண்டிருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... Representative Image

ஒப்போ ரெனோ 9 ப்ரோ+ சிறப்பம்சங்கள்:

ஒப்போ ரெனோ 9 ப்ரோ+ ஸ்மார்ட்ஃபோன் Snapdragon 8 Plus Gen 1 சிப்செட், 80W சார்ஜிங்குடன் 4,700mAh பேட்டரியை பேக் செய்யும். இதன் டிரிபிள் கேமரா அமைப்பில் OIS-இயக்கப்பட்ட 50-மெகாபிக்சல் Sony IMX890 முதன்மை கேமரா, 8-மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் ஸ்னாப்பர் ஆகியவை இருக்கும்.

Oppo Reno 9 Series: அட்டகசமான அம்சங்களுடன் களமிறங்கும் புதிய ஒப்போ ரெனோ 9 சிரீஸ்... Representative Image

ரெனோ 9, 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ+ ஆகியவை 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் வளைந்த விளிம்புகள் (curved edges) மற்றும் அண்டர்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர், 2.3 மிமீ bottom bezel ஆகியவற்றை கொண்டிருக்கும். மேலும், மூன்று போன்களும் 32 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளன. இரண்டு ப்ரோ மாடல்களின் பின்புற கேமராக்களும் MariSilicon X ISP உடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.


ரெனோ 9 மற்றும் ரெனோ 9 ப்ரோவில் அதிர்வுக்கான ரோட்டர் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும், அதேசமயம் ப்ரோ+ ஆனது எக்ஸ்-அச்சு லீனியர் மோட்டாரைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இரண்டு ஃபோன்களுமே சுமார் 7.19 மிமீ தடிமன் (thickness) மற்றும் 174 கிராம் எடை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெனோ 9 ப்ரோ+ 7.99 மிமீ மற்றும் 192 கிராம் எடையுடன் இருக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்