Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!

Priyanka Hochumin Updated:
செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!Representative Image.

சீனாவில் நேற்று Honor 80 series அறிமுகமானது. இந்த சீரிஸில் - வெண்ணிலா Honor 80, Honor 80 Pro மற்றும் Honor 80 SE ஆகியவை அடங்கும். இதில் டாப் மாடலான ஹானர் 80 ப்ரோ Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்மார்ட்போனில் பொதுவாக இருக்கும் விஷயங்களும், விலை மற்றும் அம்சம் குறித்த முழு விவரங்களும் பார்ப்போம்.

செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!Representative Image

இதுல எதை வாங்கலாம்?

வேரியண்ட்/மாடல்

Honor 80 Pro

Honor 80

Honor 80 Pro SE

8GB RAM + 256GB ஸ்டோரேஜ்

ரூ. 40,000/-

ரூ. 31,000/-

ரூ. 27,000/-

12GB RAM + 256GB ஸ்டோரேஜ்

ரூ. 43,000/-

ரூ. 34,000/-

ரூ. 31,000/-

12GB RAM + 512GB ஸ்டோரேஜ்

ரூ. 47,000/-

ரூ. 38,000/-

-

கலர் ஆப்ஷன்

பிளாக் ஜேட் கிரீன்,

ப்ளூ வேவ்ஸ்,

பிரைட் பிளாக்,

பிங்க் மார்னிங் க்ளோரி (மொழிபெயர்க்கப்பட்டது).

பிளாக் ஜேட் கிரீன்,

ப்ளூ வேவ்ஸ்,

பிரைட் பிளாக்,

பிங்க் மார்னிங் க்ளோரி (மொழிபெயர்க்கப்பட்டது).

பிரைட் பிளாக்,

செர்ரி பிங்க் கோரல்,

ஐஸ்லாந்து பேண்டஸி,

மூன்லைட் கிரிஸ்டல் (மொழிபெயர்க்கப்பட்டது).

சீனாவில் தற்போது ஹானர் 80 சீரிஸ் விற்பனைக்கு கிடைக்கிறது. மேலும் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் சேல் ஆரம்பமாகிறது. 

செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!Representative Image

Honor 80 Pro விவரக்குறிப்புகள்:

இந்த ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் வளைந்த OLED ஷ்கிரீன், 1.5K (1,224x2,700 பிக்சல்கள்) தீர்மானம் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Adreno 730 GPU உடன் இணைந்து Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது மேஜிக் ஓஎஸ் 7.0 ஸ்கின் மூலம் ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது. கேமரா அம்சத்தை பொறுத்த வரை, 160 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைப் பெறுகிறது. 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்/மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. மேலும் 50 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது. இந்த இரண்டு கேமரா அமைப்புகளும் 4K வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை. கூடுதலாக, எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) அம்சத்தையும் உள்ளடக்கியது.

Honor 80 Pro போன் - ஆனது 163.3x74.9x7.8mm அளவு மற்றும் 188g எடையுள்ளதாக கூறப்படுகிறது. இதில் 66W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 4,800mAh பேட்டரியை பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் - டூயல் சிம் (நானோ) 5G ஸ்மார்ட்போன், 2.4GHz மற்றும் 5GHz டூயல்-பேண்ட் Wi-Fi, NFC மற்றும் புளூடூத் v5.2 வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறது. செக்யூரிட்டி விவரத்தை பார்த்தால் அண்டர் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது இந்த ஹானர் 80 ப்ரோ ஸ்மார்ட்போன். 

செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!Representative Image

Honor 80 விவரக்குறிப்புகள்:

ஹானர் 80 சீரிஸின் பேஸ் மாடல் (Honor 80) ஆனது Pro வேரியண்ட்டைப் போன்ற விவரக்குறிப்புகளைக் கொண்டுள்ளது. இது 6.67-இன்ச் வளைந்த OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் முழு-HD+ (1,080x2,400 பிக்சல்கள்) தீர்மானத்தை உள்ளடக்கியது. Adreno 642L GPU உடன் இணைந்து Snapdragon 782G SoC மூலம் இயக்கப்படுகிறது. அதே போல் 160 மெகாபிக்சல் ட்ரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவிற்கு முன்பக்கத்தில் துளை-பஞ்ச் கட்அவுட்டைக் கொண்டுள்ளது. Honor 80 ஆனது 161.6x73.9x7.7mm அளவுகள் மற்றும் 180g எடைக் கொண்டது. இதில் வைக்கப்பட்ட செல்பீ கேமரா 1080p வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. 

செம்மையா ரிலீஸ் ஆகிடுச்சு...Honor 80 Series...டாப் எண்டு மாடல் வேற லெவல்!Representative Image

Honor 80 SE விவரக்குறிப்புகள்:

ஹானர் 80 எஸ்இ ஆனது 6.67-இன்ச் வளைந்த முழு-HD+ OLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. Mali-G68 GPU உடன் இணைக்கப்பட்ட, MediaTek Dimensity 900 SoC மூலம் இயக்கப்படுகிறது. 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார், 5 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியவை அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா வைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்திலும் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா உள்ளது. 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 4,600mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் - டூயல் சிம் (நானோ) 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் வி5.1 டெக்னாலஜி ஆதரவையும் கொண்டுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்