Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வேற லெவல் ரிலீஸ் போங்க...இதுக்கு மேல ஒரு போன்...பட்ஜெட்குள்ள வாங்கவே முடியாது!

Priyanka Hochumin Updated:
வேற லெவல் ரிலீஸ் போங்க...இதுக்கு மேல ஒரு போன்...பட்ஜெட்குள்ள வாங்கவே முடியாது!Representative Image.

ரியல்மி 10 சீரிஸ் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்பட உள்ளது. இந்த சீரிஸில் Realme 10 Pro மற்றும் Realme 10 Pro+ ஆகியவை அடங்கும். இந்த பதிவில் இரண்டு மாடல்களின் விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களை பாப்போம்.

வேற லெவல் ரிலீஸ் போங்க...இதுக்கு மேல ஒரு போன்...பட்ஜெட்குள்ள வாங்கவே முடியாது!Representative Image

Realme 10 Pro விவரக்குறிப்புகள்

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் எல்சிடி HD+ பேனல் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றை கொண்டுள்ளது. கேமரா அம்சத்தை பார்க்கையில், பின்புறத்தில் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஸ்னாப்பர் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால் பயன்பாட்டிற்கு போனின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பஞ்ச்-ஹோல் இடத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் 8GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் கொண்டு வருகிறது. மேலும் Android 13 OS உடன் சமீபத்திய Realme UI 4.0 உடன் வருகிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இதில் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் - டூயல் சிம் ஆதரவு, 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, NFC மற்றும் USB-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

வேற லெவல் ரிலீஸ் போங்க...இதுக்கு மேல ஒரு போன்...பட்ஜெட்குள்ள வாங்கவே முடியாது!Representative Image

Realme 10 Pro+ விவரக்குறிப்புகள்

இது வளைந்த எட்ஜ் AMOLED FHD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz-ன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. செக்யூரிட்டிக்காக அண்டர்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் டைமென்சிட்டி 1080 சிப்செட் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் அமைப்புடன் வருகிறது. Android 13 OS உடன் சமீபத்திய Realme UI 4.0 உடன் வருகிறது. நீண்ட நாட்கள் பயன்பாட்டிற்கு 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இதில் இருக்கும் இணைப்பு விருப்பங்கள் - டூயல் சிம் ஆதரவு, 5G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, NFC மற்றும் USB-C போர்ட் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்