Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Redmi K60 Pro விலை என்னமோ அவ்வளவு..? இருக்கும் வசதியோ..? 

Manoj Krishnamoorthi Updated:
Redmi K60 Pro விலை என்னமோ அவ்வளவு..? இருக்கும் வசதியோ..? Representative Image.

புத்தாண்டு வருவதால் செல்போன் நிறுவனங்கள் தங்களின் புது மாடல்களை அள்ளி தெளித்து கொண்டு இருக்கிறது. குறைந்த விலையில் ஏராள வசதிகள் கொண்ட Xiaomi Redmi உருவாக்கி உள்ள Redmi K60 Pro மொபைலின் விலை, சிறப்பு அம்சங்கள், பர்ஃபாமன்ஸ் போன்றவை கீழே பார்ப்போம். 

Redmi K60 Pro விலை என்னமோ அவ்வளவு..? இருக்கும் வசதியோ..? Representative Image

Redmi K60 Pro பர்ஃபாமன்ஸ்

Octa core (3.2 GHz) சிஸ்டத்தில் இயங்கும் Redmi K60 Pro போன் 8GB RAM கொண்டது. 64 பிட் 4nm ஃபேப்ரிக்கேஷனில் உருவாகியுள்ள இதற்கு Qualcomm Sanapdragon 8 Plus Gen 1 பார்சஸர் தான் பொருத்தப்பட்டுள்ளது. Redmi K60 Pro மொபைலின் பக்காவான பர்ஃபாமன்ஸ் இதை நிச்சயம் கேமிங் போனாக மாற்றும். ஆண்ட்ராய்டு v11  ஆப்ரேட்டிங் சிஸ்டம் இந்த போனிற்கு இன்றைய காலத்திற்கு ஏற்ற பர்ஃபாமன்ஸ் அளிக்கும்.

Redmi K60 Pro விலை என்னமோ அவ்வளவு..? இருக்கும் வசதியோ..? Representative Image

Redmi K60 Pro சிறப்பு

இந்த போனையை வாங்க முக்கிய காரணமாக இதன் டிசைனை கூறலாம், 6.67 இன்ச் AMOLED டிஸ்பிளே நிச்சயம் நம்மை வாங்க தூண்டும். 64 mp ரியர் கேமரா மிகவும் க்ளாரிட்டியான பிச்சர் அளிக்கும், அதே நேரம் 16mp செல்ஃபி கேமரா உள்ளது. இதன் AMOLED டிஸ்பிளேக்கு ஏற்ற 5500 mAh பேட்டரி அதிக நேரம் பேட்டரி பேக் அப் தரும் என நம்பப்படுகிறது.

128 GB ஸ்டோரேஜ் வசதி மற்ற மாடலை போல தான் உள்ளது. குறிப்பாக இதன் ஆப்டிக்கள் ஃபிங்கர்பிரிண்ட் ஸென்சார் மற்றும் கொரிலா க்ளாஸ் 5  பாதுகாப்பான அம்சமாக உள்ளது. மேலும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, USB Type C ஆடியோ ஜாக், v 5.0 ப்ளுடூத் போன்றவை நமக்கு மற்ற ஸ்மார்ட் போனில் இருக்கும் பேசிக் ஆப்சனும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.  

5g தொழில்நுட்ப சேவைக்கு செயல்படும் திறன்கொண்ட Redmi K60 Pro மொபைலின் விலை 32,999 ரூபாய் ஆகும். மூன்று அசத்தலான கலரில் கிடைக்கும் இந்த மொபைல் 2023 ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்