Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Update Aadhar Card: ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா? அதுக்கு தான் இது இருக்கே!

Priyanka Hochumin May 15, 2022 & 15:30 [IST]
Update Aadhar Card: ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா? அதுக்கு தான் இது இருக்கே!Representative Image.

Update Aadhar Card: இப்பொழுது இந்தியாவில் எது இருக்கிறதோ இல்லையோ ஆதார் கட்டாயமாக தேவைப்படுகிறது. ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆதார் எண்ணை தட்டினால் போதும், முழு விவரங்களும் தெரிந்துகொள்ளலாம். நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்தாலோ, மாத வருவாய் வாங்கினாலோ, மற்றவர்களுக்கு பணம் அனுப்பினாலோ, இப்படி எது செய்தாலும் அது ஆதாருடன் தான் இணைகிறது. இப்படி மக்களின் செயல்களை கண்காணிக்கும் விதமாக இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

உங்களின் ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றங்கள், உதாரணமாக பெயர், பிறந்த தேதி, ஆண்டு போன்ற விவரங்கள் பிழையாக இருந்தாலும் நாம் ஏதேனும் சென்டருக்குச் சென்று அந்த திருத்தங்களை சரி செய்துகொள்வோம். ஆனால் அதை மிகவும் எளிமையான முறையில் நீங்களே மாற்றக் கொள்ளும் வழி இதோ. இதை நீங்கள் ஆன்லைன் அல்லது ஏதேனும் வெப்சைட் உதவியுடன் செய்ய முடியாது. இதை  mAadhaarApp மூலம் மட்டுமே செய்ய முடியும். எனவே, ஆதார் கார்டில் உங்களின் பெயரில் இருக்கும் பிழை, பிறந்த தேதி, முகவரி போன்ற குறிப்புகளை மாற்ற இது உதவும். இப்பொழுது எப்பொழுது திருத்தங்களை மாற்றுவது மற்றும் மாற்றிய திருத்தங்களை எப்படி புதுப்பிப்பது என்று பார்ப்போம். 

  • இது ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு, இரண்டு மாடலுக்கும் செல்லுபடியாகும். முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் பிலே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து mAadhaarApp-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும். 
  • பின்பு Register My Aadhaar என்பதை கிளிக் செய்து உங்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிடவும். 
  • இதன் பின்பு உங்களின் மொபைல் போனுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு mAadhaarApp இல் உள்நுழையலாம். 
  • நீங்கள் உள்ளே நுழைந்த பிறகு, பயன்பாட்டில் இருக்கும் உங்கள் ஆதரவு பக்கத்தில் (support page) காணலாம். அங்கு உங்களின் பெயர் மற்றும் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்க எண்ணைக் காண்பீர்கள். 
  • பிறகு "எனது ஆதார்" என்பதை கிளிக் செய்து, ஆதார் அப்டேட் ப்ரோகிராமை காணலாம். 
  • அதை கிளிக் செய்த பிறகு, Captcha-ஐ சரியாக உள்ளிடுங்கள். இப்பொழுது Request OTP என்பதை கிளிக் செய்யவும்.
  • உங்களின் மொபைல் எண்ணுக்கு OTP வந்தவுடன், உங்களின் அப்டேட் ஷ்கிரீன் ஓபன் ஆகும்.
  • இங்கு நீங்கள் மாற்ற நினைக்கும் பெயர், பிறந்த தேதி, ஆண்டு, முகவரி போன்றவற்றை மாற்றலாம். இதற்கு வெறும் ரூ. 50/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  

உடனுக்குடன் செய்திகளை (Technology News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

 

Representative Image.  ஆடை இல்லாமல் போட்டோ அனுப்பு..? ஹேமந்த் மீது புகார்.. !

Representative Image.  ஸ்பைடன்மேன், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் போல படமெடுக்க திட்டம்.!

Representative Image.  இத பண்ணுங்க. முடி வெடிச்சது சரியாகி அதிகமாக வளரும்….!

Representative Image.  அட்டகாசமான சம்பளத்தில் இந்திய ராணுவத்தில் வேலை

Representative Image.  ஆதார் கார்டு எப்படி அப்டேட் செய்யணும்னு தெரிலையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்