Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How To: வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு' ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?

Nandhinipriya Ganeshan Updated:
How To: வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு' ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?Representative Image.

இந்த காலத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. ஏனென்றால், தன் யூசர்ஸ் வேற எந்தவொரு மெசேஜிங் ஆப் பக்கமும் திரும்பிவிட கூடாது என்பதற்காக பல அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திவருகிறது வாட்ஸ்அப். இதனாலையே, நம்மில் பலரும் மற்ற ஆப்களை உபயோகப்பதில் ஆர்வம் காட்டுவதே கிடையாது. அதுவும், வீடியோ ஸ்டேட்டஸ் வைக்கும் அப்டேட் வந்ததிலிருந்து வாட்ஸ்அப்பின் மதிப்பி எங்கையோ சென்றுவிட்டது தான் என்று சொல்ல வேண்டும். 

How To: வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு' ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?Representative Image

அதுமட்டுமல்லாமல், சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில், கிரியேட் போல்ஸ் (create polls) என்ற அம்சமும் அறிமுகமானது. ஒரு குறிப்பிட்ட தலைப்பை பற்றி கருத்துக்கணிபுகளை நிகழ்த்தி, அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வர உதவும் இந்த அம்சம் உண்மையில் பலரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து வாட்ஸ்அப் தற்போது வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு (Whatsapp contact card) என்ற புதிய அப்டேட் அறிமுகமாகியுள்ளது. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த அப்டேட் சில அதிர்ஷ்டசாலி யூசர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. 

நீங்க விண்டோஸ் மூலம் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவர்களாக இருந்தால் உங்களுக்கு இந்நேரம் இந்த அப்டேட் வந்திருக்கலாம். அதாவது, இந்த புதிய அப்டேட்டின் மூலம் உங்க அட்ரெஸ் புக்கில் காண்டாக்ட்களை மிகவும் எளிதாக சேர்க்க முடியும். 

How To: வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு' ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?Representative Image

இந்த புதிய ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?

நீங்க முதலில் உங்க வாட்ஸ்அப்பை விண்டோஸ் வெர்ஷனில் அதாவது, உங்க லேப்டாப்பில் ஓபன் செய்துக்கொள்ளுங்கள். ஸ்கிரீனில் இடதுபுறத்தின் கீழே உள்ள எண்ட்ரி பாயிண்ட்டில் 'காண்டாக்ட்ஸ்' (contact) என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.

அதாவது, ஃபைல் (file), ட்ராயிங்(drawing), போல் (poll) ஆப்ஷன்களுக்கு இடையே காண்டாக்ட்ஸ் என்ற ஆப்ஷன் இருக்கும். தற்போது அதை கிளிக் செய்தால், ஷேர் காண்டாக்ட் என்ற விண்டோ தோன்றும், அதில் சேர்ச் (search) செய்வதற்கான சேர்ச் பாக்ஸ் இருக்கும்.

How To: வாட்ஸ்அப்பில் 'வாட்ஸ்அப் காண்டாக்ட் கார்டு' ஆப்ஷனை பயன்படுத்துவது எப்படி?Representative Image

அதில் விருப்பப்படும் காண்டாக்ட் பெயரை டைப் செய்ய தொடங்கியதுமே, அது தொடர்பான விவரங்கள் உங்களுக்கு கிடைக்கும். அவ்வளவு தான் அதை கிளிக் செய்து, ஷேர் செய்துக்கொள்ளலாம்.

மேலும், நீங்க அனுப்பும் மெசேஜ் போலவே, இதுவும் என்ட்-டு-என்ட் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நீங்க ஷேர் செய்யப்படும் மொபைல் நம்பர்களின் பாதுகாப்பிற்கு எந்த குறையும் இருக்காது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்