Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?

Nandhinipriya Ganeshan Updated:
சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?Representative Image.

வீரத்தையும் ஞானத்தையும் தந்தருள்பவர் அனுமன் என்று புராணம் கூறுகிறது. இறைவன் அனுமனை வழிபாடு செய்ய செய்ய, ஒருவருக்கு வலிமையும் உறுதியும் கொண்ட மனத்துடன் காரியமாற்றலாம். காரியம் அனைத்தையும் ஜெயமாக்கிக் கொடுப்பவர் அனுமன். அனுமன் என்றாலே சக்திக்கு உதாரணம் என்பர். அதேபோல், பக்திக்கும் உதாரண புருஷராக திகழ்பவர். அதேபோல், பக்தியில் சிறந்த பக்தி அனுமன் பக்தி என்பார்கள். அனுமனை வழிபட்டால், ஸ்ரீராமரின் பேரருளையும் பெறலாம். 

சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?Representative Image

நீதி பகவானாக பார்க்கப்படும் சனி பகவானின் ஆதிக்கம் தான், நம் வாழ்க்கையின் சகலத்துக்கும் காரணம். ஒருவர் தன் கடமை, நேர்மையில் இருந்து தவறும் போது அதற்கான தண்டனையை, சனி பகவான் ஏழரை சனி வரும்போது கடுமையாக தண்டிப்பார். அதனால் தான் சனிப்பெயர்ச்சி என்றாலே நாம் பயப்படுகிறோம். என்ன ஆகுமோ, எப்படி இருக்குமோ? என்ற நடுங்குவோம். ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்களின் நெஞ்சங்களிலும் பயத்தை கொடுப்பவர் சனி பகவான். ஆனால், அனுமனின் பக்தர்கள், சனி பகவானின் பெயர்ச்சி பற்றியோ, சனி பகவான் என்ன செய்வாரோ என்பது பற்றியெல்லாம் கவலையே படத்தேவையில்லை. அனுமனின் அருளிருந்தால், சனி பகவானின் தாக்கம் அதிகமாக இருக்காது. இதற்கு ஒரு புராணக்கதையே உள்ளது.
 

சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?Representative Image

அனுமன் தன் கல்வியை கற்று முடித்த பிறகு தனது குருவான சூரிய பகவானிடம் குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு சூரிய பகவான் எதுவும் வேண்டாம் என்று சொல்ல, அனுமன் வற்புறுத்தியுள்ளார். பின்னர், சூரிய பகவான் குரு தட்சணையாக தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொண்ட அனுமன் சனி லோகத்திற்கு சென்று சனி பகவானை பார்த்து அவரது வழிகளை திருத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், சனி பகவான் கோபம் கொண்டு இறைவன் அனுமனின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் ஒன்றாக சேர்த்து அனுமனை தாக்க முயற்சித்தார்.

சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?Representative Image

இதைக் கண்ட அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ள, தோளின் மீது இருந்த சனிபகவான் மேற்கூரையில் இடித்து நசுங்கிப் போனார். அது அவருக்கு அளவில்லாத வலியை கொடுத்தது. யாராலும் தப்பிக்க முடியாததாக கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்துப்போனது. அவர் இறைவன் அனுமனிடம் மன்னிப்புக் கேட்டு, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிக்கமாட்டேன் என்று வரத்தை அளித்தார்.

அதனால் தான் சனிக்கிழமைகளிலும் சனி ஓரையிலும் அனுமனை வழிபாடு செய்ய சொல்வார்கள். அனுமனை வழிபட்டு பிராத்தனை செய்துவந்தால், சகல எதிர்ப்புகளும் தவிடுபொடியாகும். இன்னல்கள் அனைத்தும் மறைந்துப்போகும். 

சனி பகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க அனுமனை வழிபட சொல்வதற்கான காரணம் தெரியுமா?Representative Image

அனுமன் வழிபாடு: 

சனிக்கிழமை தோறும் அனுமனுக்கு வெற்றிலை மாலையும் துளசி மாலையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வேண்டுவதெல்லாம் தந்தருள்வார். சனி பகவானின் கோபத்தில் இருந்தும் உங்களை காத்தருள்வார். 

பின்னர், வெண்ணெய் காப்பு செய்து வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் துன்பங்கள் அனைத்தும் வெண்ணெய் போலவே உருகிப்போய்விடும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்