Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பூமியில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் சனி பகவான் என்ன செய்துள்ளார் தெரியுமா? | Importance of Shani Dev

Priyanka Hochumin Updated:
பூமியில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் சனி பகவான் என்ன செய்துள்ளார் தெரியுமா? | Importance of Shani DevRepresentative Image.

இந்த பிரபஞ்சத்தில் பூமி உருவாவதற்கு முன்னர் என்ன தான் இருக்கும் அல்லது நடந்திருக்கும் என்று நம்முள் நிறைய கேள்விகள் எழும். ஆனால் நம்முடைய சாஸ்திரம் மற்றும் புராணங்களின் படி ஒரு படைப்பு உருவாவதற்கு முன்னர் எந்த ஒரு பொருள், உண்மை, பொய் என்று எதுவும் இல்லை. அப்போது இருந்தது ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியானது பிரம்மம் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. அதுவே முக்கண் கொண்ட மகா சக்தி சிவபெருமானாகும். பிறகு அந்த சக்தியால் உருவானது எண்ணம் மற்றும் ஒளி. அதற்கு பின்பு அந்த எண்ணம் வடிவமாக உயிர் பெற்றது அதுவே நாம் நாராயணர் என்று அழைக்கப்படும் மகா விஷ்ணு ஆவார். பிறகு படைப்புகளுக்கு ஆதியாக ஒரு இறை வடிவம் நாராயணரின் நாபியில் இருந்து உருவானவர் தான் பிரம்மா.

பூமியில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் சனி பகவான் என்ன செய்துள்ளார் தெரியுமா? | Importance of Shani DevRepresentative Image

மஹாதேவர் இப்பிரபஞ்சத்தில் புதிய படைப்புக்களை உருவாக்க முடிவு செய்திருந்தார். அந்த படைப்புக்களை தேவர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா அல்லது அசுரர்கள் ஆட்சி செய்ய வேண்டுமா என்பதை தீர்மானித்து ஒரு முடிவை கூறுமாறு தெரிவித்தார். இதனை தேவரிஷி நாரதர் தலைமை தாங்க, இரு தரப்பினரும் தங்களுக்காக வாதாட பிரதிநிதிகளை தீர்மானிக்குமாறு கூறியுள்ளார். எனவே, தேவர்களுக்கு ஆதரவாக சூரிய பகவானும், அசுரர்களுக்கு ஆதரவாக சனி பகவானும் மோதிக்கொண்டனர்.

பூமியில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் சனி பகவான் என்ன செய்துள்ளார் தெரியுமா? | Importance of Shani DevRepresentative Image

சூரிய பகவானோ மனிதர்களை தேவர்கள் தான் ஆட்சி செய்ய வேண்டும் என்றார். காரணம் என்ன தான் தேவர்கள் மற்றும் அசுரர்கள் மும்மூர்த்திகளின் பிள்ளைகளாக இருந்தாலும் அனைத்து முக்கிய பொறுப்புகளையும் தேவர்களுக்குத் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நல்ல எண்ணம் கொண்ட தேவர்கள் தான் பூமியின் வாழும் உயிரினங்களை ஆட்சி செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் சனி பகவானோ எந்த பார பட்சமும் காண்பிக்காமல் வாக்குவாதத்தை துவங்கினார். உருவாகப்போகும் பூமியில் வாழும் மனிதர்களிடம் தேவரின் குணம் மற்றும் அசுரர்களின் குணமும் இருக்க வேண்டும். அவற்றுள் தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும். அதற்கு பின்னர் அவர்களின் செயலால் ஏற்படும் வினைகளுக்கு அவர்களின் கர்மமே பொறுப்பாகும். இவரின் இந்த வாதம் தேவரிஷியை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இருப்பினும் அதனை ஏற்காத தேவர்கள் அசுரர்களுடன் யுத்தம் புரிய தொடங்கினர்.

பூமியில் மனிதகுலத்தின் உருவாக்கத்தில் சனி பகவான் என்ன செய்துள்ளார் தெரியுமா? | Importance of Shani DevRepresentative Image

இதனைக் கண்டு கோபமடைந்த ஈசன் அவதரித்து அவர்களை நிறுத்தினார். இந்த விவாதம் அமைதியாக நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டும் இப்படி நடந்துக் கொள்கிறீர்கள் என்று கடும் கோபத்தில் இருந்தார். பின்னர் இந்த சபையில் சனி ஒருவரே எந்த பாரபட்சமும் இன்றி பேசினார். எனவே, அவரின் எண்ணப் படியே பூமியும், அதில் வாழப்போகும் மனிதர்களின் படைப்பு இருக்கும் என்று தெரிவித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்