Fri ,Mar 01, 2024

சென்செக்ஸ் 73,745.35
1,245.05sensex(1.72%)
நிஃப்டி22,338.75
355.95sensex(1.62%)
USD
81.57
Exclusive

How to Worship Lord Muruga at Home: தமிழ் கடவுள் கந்தனை வீட்டில் வைத்து பூஜை செய்யும் முறை இதுவா?  இப்படி செய்தால் இவ்வளவு நன்மையா....!

Manoj Krishnamoorthi May 26, 2022 & 12:05 [IST]
How to Worship Lord Muruga at Home: தமிழ் கடவுள் கந்தனை வீட்டில் வைத்து பூஜை செய்யும் முறை இதுவா?  இப்படி செய்தால் இவ்வளவு நன்மையா....!Representative Image.

சர்வத்தின் பரம்பொருள் ஆதிசங்கரரின் நெற்றிக்கண்ணில் உதித்த ஆறுமுகன் அழகின் திருவுருவமாகும், பக்தர்களின் துயரைத் துடிக்கும் கார்த்திகேயன் தமிழ் கடவுளும் ஆவார். அறுபடை வீடு கொண்ட கந்தனுக்கு காவடி எடுத்து தைப்பூசத் திருநாளில் நாம் அவவை தரிசிக்க அவன் சன்னதி சென்றாலும், அவனை நம் வீட்டில் வைத்து பூஜிப்பது எப்படி (How to Worship Lord Muruga at Home)  என்ற கேள்விக்கான பதில் இவ்வாசகத்தில் கிடைக்கும்.

How to do Murugan Pooja at Home?

முருக பெருமானை  ஆலயம் சென்று தினமும் பார்க்க முடியாத போதிலும், நாம் இருக்கும் இடத்திலிருந்து அவனை மனமார வணங்கினாலும் கந்தன் கருணை உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வான்.  வீட்டில் ஐசுவரியம் பொங்கவும் குடும்பத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கக் கந்தன் வழி செய்வான் என்பது மறுக்க முடியாத உண்மையென முருகனின் பக்தர்கள் கூறுவர், அதை நம்பாதவருக்கு நற்பலனை அளிப்பதே முருக பெருமானின் கருணையாகும்.

முருகன் வழிபாடு செய்ய உகந்த நாள் (Which Day to Worship Lord Muruga)

தைப்பூசத் திருநாள் விரதம் காவடி எடுத்து முருக பெருமானைக் காண்போம், தினசரி வழிபாடு என்பது சிறந்த வழிபாடு முறையாகும். முக்கியமாக வாரத்தின் ஏழு நாட்களில் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு செய்ய உகந்த நாளாகும்.  

மேலும் படிக்க: தமிழ் கடவுள் முருகனின் பெயர்க் காரணம் தெரியுமா! அதைப் பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

வீட்டில் முருகன் வழிபாடு (How to Worship Lord Muruga at Home)

தேவர்களின் அதிபதி இந்திரனின் மருமகனான  முருகன் பக்தர்களின் உண்மையான பக்திக்கு மனமயங்கும் மழலையைப் போன்றவன், எப்படிப்பட்ட பிரச்சனைக்கும் தீர்வு வழங்கும் முருகனை வணங்குவதால் நீண்ட நாள் துயராக இருக்கும் திருமணத் தடை, நோயால் அவதிப்படுதல், குழந்தை பாக்கியம் இல்லாமல் மன வருத்தம் அடைதல் போன்ற பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் முருகன் வழிபாடு பூர்த்தி செய்யும்.

வீட்டில் முருகனுக்கு பூஜை செய்வது சரியா? எனப் பலர் யோசிப்பர். ஆனால் இறைவனை மனமார பூஜை செய்வதற்கு இடம் பொருள் என்பது தேவையில்லை என்பதுதான் ஆத்மார்த்த உண்மையாகும்.  கீழ்க்காணும் வழிபாட்டை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் செய்வது நன்மை அளிக்கும்.

அதிகாலையில் குளித்து விரதம் வீட்டில் செய்ய வேண்டிய வழிபாடுகள், 

  • முதலில் நம் வீட்டில் இருக்கும் முருகன் சிலையோ அல்லது முருகன் படத்தையோ சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து கொள்ள வேண்டும்.

  • சிகப்பு அரளி அல்லது வெள்ளை அரளி பூஜையில் சேர்த்து வேறு எதாவது வாசனை மலர்களும் சேர்த்து அலங்காரம் செய்தல் வேண்டும்.
  • முருகன் படம் அல்லது திருவுருவத்துக்கு அருகில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில்  சிறிய அளவு வெட்டி வேர்  வைக்கவும்,  எலுமிச்சை பழத்தை முருகனுக்கு முன்னால் வைக்கவும்.
  • ஒரு மாவிலை வைத்து அதன்மேல் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றிய கணமே வழிபாடு தொடங்கியதாகும், முருகனை நினைத்து கண்களை மூடி 5 நிமிடம் பிரத்தனையில் இருக்க வேண்டும். 
  • பூஜை முடிந்த பிறகு வெட்டிவேர் தீர்த்தத்தைப் பருகி விரதத்தை முடித்து உணவு உட்கொள்ள வேண்டும்.
  • பூஜையில் இருக்கும் எலுமிச்சை பழத்தைப் பூஜை முடிந்த 3வது நாளில் வீட்டைச் சுற்றி திருஷ்டி கழிப்பது நற்பலன் அளிக்கும். 

இதுபோன்ற ஆன்மிக செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்