Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காரடையான் நோன்பு கொண்டாடுவதற்கான காரணம் இது தான் தெறிஞ்சிக்கோங்க | Karadaiyan Nombu 2023 Story in Tamil

Priyanka Hochumin Updated:
காரடையான் நோன்பு கொண்டாடுவதற்கான காரணம் இது தான் தெறிஞ்சிக்கோங்க | Karadaiyan Nombu 2023 Story in TamilRepresentative Image.

பல விசேஷங்களைக் கொண்ட மாசி மாதம் முடிய போகிறது. பங்குனி மாதத்தின் தொடக்கத்திலையே மிகவும் மங்களகரமான நோன்பு  கொண்டாடப்படும். அது தான் சுமங்களிக்கான "காரடையான் நோன்பு". எதற்காக இந்த நோன்பு பாரம்பரியமாக நடைபெறுகிறது என்பதைப் பற்றி பாப்போம்.

காரடையான் நோன்பு கொண்டாடுவதற்கான காரணம் இது தான் தெறிஞ்சிக்கோங்க | Karadaiyan Nombu 2023 Story in TamilRepresentative Image

மந்திரத்தின் பலன்

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அஸ்வபதி மன்னன் மக்களுக்காக பல நன்மைகளை செய்து வந்தார். இருப்பினும் மன்னன் அஸ்வபதி மற்றும் மகாராணி மாலதி தேவைக்கும் பல வருடங்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் மிகுந்த கவலையடைந்த ராணி மாலதி விரதமிருந்து வஷிஸ்ட மகரிஷியிடம் குழந்தை பாக்கியம் வேண்டி சென்றார். அவர் ராணிக்கு உதவ விரும்பினார், எனவே வேத மாதாவாக விளங்கும் சாவித்திரி தேவியின் ‘ஆராதனா மந்திரத்தை’ மாலதி தேவிக்கு உபசரித்தார்.

அவரின் உபசாரணையை ஏற்ற மாலதி தேவிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. சாவித்ரி தேவியின் அருளால் அந்த குழந்தை பிறந்ததால் அவர்கள் அந்த பெண் குழந்தைக்கு சாவித்ரி என்று பெயர் சூட்டினர். பின்னர் திருமண வயதை நெருங்கிய சாவித்ரிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தனர். விதியின் விளையாட்டால் சாவித்ரி சத்தியவானை சந்தித்தார். கண்பார்வையை இழந்த பெற்றோர்களை சத்தியவான் பார்த்துக்கொள்வதை கண்ட சாவித்ரி அவனை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தால்.

காரடையான் நோன்பு கொண்டாடுவதற்கான காரணம் இது தான் தெறிஞ்சிக்கோங்க | Karadaiyan Nombu 2023 Story in TamilRepresentative Image

தன்னுடைய பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை கூறி சம்மதமும் பெற்றால். ஆனால் திருமணம் நெருங்கி வரும் நேரத்தில் நாரதர் சாவித்ரியிடம் சத்தியவான் அற்ப ஆயுள் உடையவன் [இளம் வயதில் இறந்துவிடுவார்கள்] என்னும் உண்மையை கூறினார். இந்த உண்மையை தெரிந்துக்கொண்ட சாவித்ரியின் பெற்றோர்கள் அந்தத் திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர். ஆனால் சாவித்ரி தன்னுடைய முடிவில் இருந்து மாறாமல் அனைவரின் எதிர்ப்பையும் மீறி சத்தியவானை திருமணம் செய்துக் கொள்கிறாள். மாசி மாதத்தின் கடைசி நாளன்று விறகு வெட்டச் சென்ற சத்தியவானை எமதர்மன் தனது பாசக்கயிற்றை வீசி உயிரைப் பறித்துவிட்டார்.

காரடையான் நோன்பு கொண்டாடுவதற்கான காரணம் இது தான் தெறிஞ்சிக்கோங்க | Karadaiyan Nombu 2023 Story in TamilRepresentative Image

தந்திரத்தால் எமனையே முறியடித்துவிட்டால்

சாவித்ரி பத்தினி என்பதால் எமதர்மனை அவளால் பார்க்க முடிந்தது. தன்னுடைய கணவனின் உயிரை திரும்பக் கொண்டு வர பல போராட்டங்களை சந்திக்கிறாள் சாவித்திரி. இவளின் இந்த முயற்சியைப் பார்த்து மனமுறுகிய எமன், சாவித்ரியின் முன் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்று கூறுகிறார். அதற்கு சாவித்ரி தனக்கு 100 குழந்தைகளும், அதனை என்னுடைய மாமனார், மாமியார் பார்த்து ரசிக்கவும் வேண்டும் என்று மிகவும் சாதுர்யமாக வரத்தைக் கேட்கிறாள். தன்னுடைய கணவன் இல்லாமல் எப்படி சாவித்ரியால் 100 குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும், எனவே எமதர்மராஜனால் இறந்து போன சத்தியவானை மீண்டு உயிர் பெறச் செய்தால் சாவித்ரி. இதனின் பின்பு தான் அந்நாளில் திருமணமான பெண்கள் தன்னுடைய கணவனின் உயிரைக் காக்கவும், அவர்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் என்றும் விரதமிருந்து வழிபாடு செய்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்