Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மார்கழி மாசம் பொறந்தாச்சு; தமிழக கோயில்களில் பஜனையுடன் சிறப்பு வழிபாடு!

KANIMOZHI Updated:
மார்கழி மாசம் பொறந்தாச்சு; தமிழக கோயில்களில் பஜனையுடன் சிறப்பு வழிபாடு! Representative Image.

தமிழகத்தில் உள்ள கோவில்களில், இன்று மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. மாதங்களில் நான் மார்கழி என பெருமான் கூறுவதாக ஐதீகம், குளிர் நிறைந்த மார்கழி மாதத்தில், அதிகாலை நேரத்தில் எழுந்து, நீராடி, திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வழிபாடு செய்கின்றனர்.

பிறந்தது மார்கழி: 

பக்தர்கள், கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதும்; பலர் குழுக்களாக இணைந்து, பஜனை பாடல்களை பாடி, தெருக்களில் அதிகாலை நேரத்தில் செல்வதும் வழக்கம். அதன்படி, இந்தாண்டும் கோவில்களில் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் இன்று நடக்கின்றன.

மார்கழி மாசம் பொறந்தாச்சு; தமிழக கோயில்களில் பஜனையுடன் சிறப்பு வழிபாடு! Representative Image

தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவிலில், மார்கழி சிறப்பு பூஜைகள் இன்று முதல் நடக்கிறது. கோவில் வளாகத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் பெருமாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

மார்கழி மாசம் பொறந்தாச்சு; தமிழக கோயில்களில் பஜனையுடன் சிறப்பு வழிபாடு! Representative Image

மார்கழி மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு இன்று அதிகாலை தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு சங்கர் ராமேஸ்வரர் திருக்கோயிலில் அதிகாலை 3:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி விஸ்வரூப தரிசனத்தில் காட்சியளித்தார்.
 பின்னர் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது பின்னர்4 மணிக்கு திருவனந்தலும் 5-15மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும் காலை 8 மணிக்கு கால சந்ததியும் 10 மணிக்கு உச்சகால பூஜையும் நடைபெறுகிறது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோயில்கள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் இன்று மார்கழி மாதம் ஒன்றாம் தேதி முன்னிட்டு அதிகாலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

மார்கழி மாசம் பொறந்தாச்சு; தமிழக கோயில்களில் பஜனையுடன் சிறப்பு வழிபாடு! Representative Image

போடி காமராஜர் சாலையில் அமைந்துள்ள சுமார் 700 ஆண்டுகளுக்கு பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாத சிறப்பு நடைபெற வழக்கம் இவ்வாண்டு இன்று மார்கழி மாத முதல் நாளை முன்னிட்டு பெருமாளுக்கு 18 வகையான அபிஷேகமும் சோடாபிஷேகமும் நடைபெற்றன. 

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு பதியப்பட்ட கோதண்ட இராமர் முகவை பெரிய சிவன் கோயில் ஆலயங்களில் மார்கள் முதல் நாளில் அதிகாலை ஆண்டாள் பாடிய திருப்பாவை திருப்பள்ளி எழுச்சி பாசங்கள் மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பாவை பாடல்கள் பாடப் பெற்றது சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது  ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்