Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in Tamil

Gowthami Subramani Updated:
தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in TamilRepresentative Image.

அழகு என்றால் முருகன் என்று பொருள். ஆறுதலை அளிக்கும் ஆறு தலை கொண்ட முருகன். இன்னும் கோடான கோடி புகழ்களைக் கொண்டிருக்கும் முருகப் பெருமானை வணங்கினோர்க்கு எத்தகைய துன்பங்களும் நிகழாது. அறுபடை என அழைக்கப்படும் முருகப் பெருமானின் ஒவ்வொரு படை வீட்டுக்கும் ஒரு தனி வரலாறே உள்ளது. அப்படியாக மூன்றாவது படை வீடாக அமையும் பழனியைப் பற்றி அறியாதோர் எவருமிலர். பழனி கோவிலுக்கு உள்ள வரலாற்றைப் போலவே, பழனியில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் சிலைக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்தப் பதிவில், பழனி முருகன் சிலை பற்றிய ரகசியங்கள் குறித்துக் காணலாம்.

தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in TamilRepresentative Image

பழனி முருகன்

உலகில் எங்கும் காணாத அதிசயமாகவே, பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. பாத கணபதி, இடும்பன் கோவில், பழனி என்பதன் விளக்கம், தண்டாயுதபாணி காட்சி, என எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட பழனி முருகனின் பெயரைச் சொல்ல சொல்ல, மெய் சிலிர்க்கும் வகையில் அமையும். திரு ஆவினன் குடி என்ற பழமையான சிறப்புப் பெயரைக் கொண்டதே இந்த பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப் பெருமான் ஆவார்.

தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in TamilRepresentative Image

பழனி முருகன் சிலை ரகசியங்கள்

எல்லா சிலையும் ஒரே மாதிரியாக செதுக்கப்பட்டது தானே? அப்படி என்ன பழனி முருகன் சிலையில் மட்டும் அதிசயம் நிகழ்ந்துள்ளது என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். பழனி முருகன் சிலை மருத்துவ குணமிக்க சிலை ஆகும். இந்த சிலையானது நவபாஷணம் என்ற ஒன்பது வகையான மூலிகைகளால் செய்யப்பட்டது ஆகும். பழனி மலை முருகன் சிலையை வடிவமைத்தவர் போகர் சித்தர் ஆவார். இவர் தனது சீடர் புலிப்பாணி உள்ளிட்ட மற்ற சீடர்களின் உதவி கொண்டு கன்னிவாடியில் உள்ள மெய் கண்ட சித்தர் குகையில் நவபாஷண சிலையை வடிவமைத்தார்.

தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in TamilRepresentative Image

இரவில் வியர்க்கும் முருகன் சிலை

பழனி முருகன் சிலையின் மார்பில், இரவில் வட்ட வடிவ சந்தன காப்பு இடப்படும். இதே போல, நெற்றில் இரு புருவங்களுக்கும் இடையேயும் சிறிய சந்தனப் பொட்டு வைக்கப்படும். சிலை எப்போதும் உஷ்ணத்துடன் காணப்படுவதால், இரவு நேரத்தில் சந்தன காப்பு இடப்படுவதாக கூறப்படுகிறது. காலையில் கோவில் நடை திறக்கப்படும் போது, உஷ்ணத்தால் முருகனின் சிலை முழுவதும் வியர்வைத் துளிகள் காணப்படும். முருகனின் மீது வியர்த்த நீரை அபிஷேக நீருடன் கலந்து காலை நேரத்தில் இறைவனை தரிசிக்க வருபவர்களுக்கு தீர்த்த பிரசாதமாக வழங்கப்படுகிறது.

தீராத நோய்களையும் தீர்க்கும் முருகன் சிலையின் வியர்வை! ஆன்மீகமும், அறிவியல் காரணமும்.. | Palani Murugan Silai History in TamilRepresentative Image

நவபாஷாணத்தின் மகிமை

இத்தகைய சிறப்பு மிக்க ரகசியத்தைத் தெரிந்து கொண்டவர்கள், தினந்தோறும் அபிஷேக நீருக்குக் காத்திருந்து வாங்கிக் கொண்டு போவார்கள். இரவில் வியர்க்கும் தன்மை கொண்ட பழனி முருகப் பெருமானின் சிலையைப் பற்றி கேட்போர் அனைவருக்கும் மெய் சிலிர்த்து, முருகப் பெருமான் மீது இருக்கும் பக்தியினை அதிகரிக்கச் செய்கிறது.

நவபாஷண சிலையின் மீது வியர்த்த நீர் கலந்த தீர்த்தமும், திருமார்பில் இரவில் பூசப்படும் சந்தனமும் நோய்களைத் தீர்க்கக் கூடிய மருந்தாக அமைகிறது. இது பழனி முருகப் பெருமானின் சிலை ஆன்மீக ரீதியாக மட்டுமல்லாமல், அறிவியல் ரீதியாகவும் உடலுக்கு நன்மை அளிக்கும் வகையில் அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்