Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பங்குனி உத்திரம் பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்.. | Panguni Uthiram Special In Tamil

Gowthami Subramani Updated:
பங்குனி உத்திரம் பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்.. | Panguni Uthiram Special In TamilRepresentative Image.

மாதந்தோறும் உத்திரம் நட்சத்திரம் இருப்பினும், தமிழ் மாதமான பங்குனி மாதத்தில் வரக்கூடிய உத்திர நட்சத்திரத்திற்கென தனிச்சிறப்பு உள்ளது. இதுவே பங்குனி உத்திரம் என அழைக்கப்படுகிறது.  இந்த சிறப்பு தினத்தில், அனைத்து முருகன் கோவில்களிலுமே சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நன்னாளில் பக்தர்கள் விரதம் இருந்து சிறப்பாக வழிபடுவார்கள். தமிழ் மாதத்தில் கடைசி மாதமான 12 ஆவது மாதம் பங்குனி மாதம். அதே போல, நட்சத்திரங்கள் வரிசையில் 12 ஆவது நட்சத்திரமாக வருவது உத்திரம். பன்னிரண்டாவது இடத்தில் உள்ள இவை இரண்டும் இணைந்து வரக்கூடிய சிறப்பான நாளே பங்குனி உத்திரம் என அழைக்கப்படுகிறது. இந்த தினத்திற்கான சிறப்புகளைப் பற்றி இதில் காணலாம்.

பங்குனி உத்திரம் பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்.. | Panguni Uthiram Special In TamilRepresentative Image

பங்குனி உத்திரம் சிறப்புகள்

27 நட்சத்திரங்களில் 12 ஆவது நட்சத்திரமானது உத்திரம் ஆகும். அதே போல, 12 மாதமாக அமைவது பங்குனி மாதம் ஆகும். இவை இரண்டும் சேர்ந்ததே பங்குனி உத்திரம் ஆகும்.

இந்த மாதத்தில் உத்திரம் நட்சத்திரத்திற்கென தனி ஒரு மகத்துவமே உள்ளது. ஏனெனில், உத்திரம் நட்சத்திரத்திலேயே தெய்வத் திருமணங்கள் நடைபெறும் என புராணங்களில் கூறப்படுகிறது.

இந்த தினத்தில், மதுரையில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு சிவன் மற்றும் அன்னை பார்வதி தேவி இருவரும் மணக்கோலத்தில் அருள் தந்த தினம் இந்த தினத்தில் தான்.

பங்குனி உத்திரம் பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்.. | Panguni Uthiram Special In TamilRepresentative Image

அதே போல, அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து, மீனாட்சி சுந்தரரேஸ்வரராக காட்சி அளித்த நன்னாளும் இந்த பங்குனி உத்திரம் தினத்தில் தான்.

இந்த நன்னாளில் எடுக்கும் விருத்தத்தினைத் திருமண விருத்தம், கல்யாண விருத்தம் எனக் கூறுவர்.

பங்குனி உத்திரம் தினத்தன்றே, தமிழ்க் கடவுளான முருகப் பெருமான், தெய்வானையை திருமணம் புரிந்து கொண்டார்.

சிவன், முருகப்பெருமான் மட்டுமல்ல, ஸ்ரீரங்க மன்னர் மற்றும் ஆண்டாளுக்குத் திருக்கல்யாணம் நிகழ்ந்த நன்னாள் இந்த சிறப்பான நாளில் தான்.

 

பங்குனி உத்திரம் பற்றி நீங்கள் அறியாத சிறப்புகள்.. | Panguni Uthiram Special In TamilRepresentative Image

பங்குனி உத்திரம் தினத்தில் தான், மகாலட்சுமி ஸ்ரீ மகா விஷ்ணுவின் மார்பில் உறையும் பாக்கியம் பெற்ற நாள்.

மேலும், அனைவருக்கும் செல்வத்தை அள்ளித் தரும் மகாலட்சுமி அவதரித்த நன்னாளும் பங்குனி உத்திரம் நன்னாளிலே.

தசரத மைந்தர்களான ஸ்ரீராமன்- சீதை, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி, லட்சுமணன்-ஊர்மிளா போன்றோரின் திருமணங்களும் இந்த சிறப்பு தினமான பங்குனி உத்திரத்தில் தான்.

இது போன்ற எண்ணற்ற சிறப்புகளைக் கொண்ட நன்னாளே இந்த பங்குனி உத்திர திருவிழா ஆகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்