Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Sai Baba History in Tamil Part 11: இரவிலும் தூங்காமல், சாய்பாபாவின் அற்புதத்தைக் காண சென்ற ஷீரடி மக்கள்…! இதற்கு சாய்பாபா என்ன செய்தார் தெரியுமா..?

Gowthami Subramani August 24, 2022 & 17:40 [IST]
Sai Baba History in Tamil Part 11: இரவிலும் தூங்காமல், சாய்பாபாவின் அற்புதத்தைக் காண சென்ற ஷீரடி மக்கள்…! இதற்கு சாய்பாபா என்ன செய்தார் தெரியுமா..?Representative Image.

Sai Baba History in Tamil Part 11: கடந்த வாரம், சாய் பாபா தியானத்திற்குச் செல்வதாகவும், மூன்று நாள்களுக்குள் திரும்பி வரவில்லை எனில், அடக்கம் செய்து விடு என்றும் அவரது நண்பர் மகசஸ்பதியிடம் கூறியதைப் பார்த்தோம். அது மட்டுமல்லாமல், சாய்பாபா உயிர் பிரிந்ததாக எண்ணிய ஷீரடி மக்களுக்கு 3 நாள்களுக்குப் பிறகு மீண்டும் எழுந்த அதிசயத்தை நிகழ்த்தியதைப் பற்றிக் கண்டோம். இதன் தொடர்ச்சியை இந்தப் பதிவில் காணலாம்.


Representative Image. Sai Baba History in Tamil Part 10: பாபாவின் உயிர் பிரிந்ததாக எண்ணிய ஷீரடி மக்கள்… அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?


எளிமையான இருக்கை

சாய்பாபா உடுத்திய உடை மட்டும் எளிமையானது அல்ல. இருக்கக் கூடிய இடத்தையும் எளிமையாக இருக்கும் படியே எண்ணினார். ஷீரடியில், பாபா தங்கியிருந்த இடத்தில், தூசியும் தும்புமாக இருக்கும். இவற்றைத் தட்டி விட்டு கந்தல் துணி விரித்து படுப்பதை வழக்கமாய் கொண்டுள்ளார். இவர் இருக்கும் இடத்தை யாரையும் சுத்தம் செய்ய விட மாட்டார். இது போன்ற எளிமையான வாழ்க்கையையே சாய்பாபா விரும்பினார்.

பக்தர் வழங்கிய மரப்பலகை

சாய்பாபாவின் பக்தர் ஒருவர், இவரின் எளிமையான இருப்பிடத்தைக் கண்டு அவர் படுப்பதற்காக, ஒரு மரப்பலகையைக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், பாபா அதனை கீழே போட்டுப் படுத்துக் கொள்ளவில்லை. அந்தப் பலகையை ஒரு உத்திரத்தில் கயிறு போட்டுக் கட்டி அதன் மேல் ஏறிப்படுத்துக் கொண்டு விட்டார்.


Representative Image. Sai Baba History in Tamil Part 9: காலரா நோயினைக் குணப்படுத்த சாய்பாபா செய்த அதிசயம் என்ன தெரியுமா..?


ஆச்சரியத்தில் பக்தர்கள்

இதனைக் கண்ட பக்தர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில் அந்தப் பலகை மிகவும் பழையதாகவும், கயிறுகள் நைந்து போயும் காணப்பட்டது. இப்படி இருக்கும் போது, எப்படி அந்த மரப்பலகை இவரைத் தாங்கியது என எல்லோரும் ஆச்சரியத்தில் திகைத்தனர்.

அது மட்டுமல்ல, அந்தப் பலகையின் நான்கு ஓரத்திலும் விளக்கேற்றி வைத்திருப்பார். பலகை ஆடாது இருப்பதுடன் அந்த விளக்குகளும் அணையாதிருக்கும். மேலும், இந்தப் பலகையை உயரமாக கட்டி வைத்திருப்பார். இப்படி இருக்கும் பட்சத்தில், சாய்பாபா எப்படி அந்த உயரமாக இருக்கும் பலகையில் ஏறுகிறார்? எப்படி இறங்குகிறார்? என்பதை யாரும் பார்த்ததில்லை. பக்தர்களுடன் ஒரு சில நேரம் கீழே படுத்திருப்பார். திடீரென பார்த்தால், உயரத்தில் உள்ள பலகையில் படுத்திருப்பார். இதைக் கண்ட அனைவருக்கும் ஆச்சரியம் தாங்காமல் திகைத்துக் கொண்டிருந்தனர்.

அற்புதத்தைப் பார்ப்பதற்காக கூடிய மக்கள்

சாய்பாபாவின் இந்த அற்புதத்தைக் காண்பதற்காக, இரவு நேரத்தில் மசூதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இதனால், மக்களுக்குத் தூக்கம் தடைபட்டது. இதனை விரும்பாத சாய்பாபா, ஒரு நாள் அந்தப் பலகையை உடைத்துப் போட்டு விட்டு தரையிலேயே துணியை விரித்துப் படுத்துத் தூங்கத் தொடங்கி விட்டார்.


Sai Baba History in Tamil Part 8: பாபாவின் எளிமையான தோற்றத்திற்கு இது தான் காரணமா….?


இவ்வாறு, பாபா தன் அற்புத சக்திகளை வெளிக்காட்ட முயற்சிக்காத போதிலும், பக்தர்கள் அதை உணரத் தொடங்கினர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Sai Baba History in Tamil | Sai Baba History in Tamil Part 11 | Shirdi Sai Baba History Tamil | Sai Baba Story Tamil Language | Sai Baba Life History Tamil | Sai Baba History in Tamil Wikipedia | Shirdi Sai Baba Temple History in Tamil | Akkaraipatti Sai Baba Temple History in Tamil | Sai Baba Temple History in Tamil | Shirdi Sai Baba History Tamil | Shirdi Sai Baba History | Original Sai Baba History | Sai Baba Viratham book in Tamil | Sai Baba Viratham Murai | Sai Baba Viratham Story in Tamil | Sai Baba Darshan timings | Sai Baba Vratham Procedure | Sai Baba Fasting Rules | Sai Baba Thursday Fast Procedure | Sai Baba Fasting Procedure | Shirdi Sai Baba Viratham Tamil | Sai Baba Thursday Fast Rules | Sai Baba How to pray | Sai Baba Vrat How to Do | Sai Baba Viratham Rules in Tamil | Sai Baba Fasting Rules in English | Sai Baba Fasting Rules | Sai Baba Fast Rules | Sai Baba Fasting Rules in Tamil | Sai Baba temple Darshan timings


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்