Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Navratri 9th Day : நவராத்திரி 9ம் நாள் இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் சிறப்பு?

Manoj Krishnamoorthi September 24, 2022 & 15:00 [IST]
Navratri 9th Day : நவராத்திரி 9ம் நாள்  இந்த நட்சத்திரக்காரர்கள் வழிபாடு செய்தால் சிறப்பு?Representative Image.

நவராத்திரியின் 9 ஆம் நாள் (Navratri 9th Day)  நாம் வணங்க வேண்டிய இறைவி கலைமகளின் சொரூபமான ப்ராஹ்மி தேவி ஆகும். சரஸ்வதி தேவி போன்று அன்ன வாகனம் கொண்ட ப்ராஹ்மி தேவிக்கு செய்ய வேண்டிய நைவேத்தியம், செய்ய வேண்டிய அலங்காரம் முதல் எந்த திருமந்திரம் உச்சரித்து அம்மாளை எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதிப்பது என்பது வரை கீழ்க்காணும் பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

நவராத்திரி ஒன்பதாம் நாள் பூஜை (9th Day Of Navratri Puja)

கல்வியின் ஞான சொரூபமான அன்னை சரஸ்வதி தேவி அளிக்கும் கல்வி செல்வத்திற்கு  மரியாதை செய்யும் நாளான நவராத்திரி 9 ஆம் நாள் ஆயுத பூஜை ஆகும். பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் முடிந்த பிறகு வன்னி மரத்தில் மறைத்து வைத்த ஆயுதங்களை எடுத்து வழிபட்ட தினமே ஆயுத பூஜை எனவும், விஸ்வர்கமா தனது படைப்பு உதவிய கருவிகளுக்கு அபராஜிதா தேவியை எண்ணி செய்த பூஜை ஆயுத  பூஜை பல கதைகள் உள்ளது.

நவராத்திரி 9 ஆம் நாள்  வாசனைப் பொடி கோலமிட்டு தாமரை, மருக்கொழுந்து, துளசி, வெள்ளை மலர்கள் அல்லது கதம்ப மலர்கள் கொண்டு அலங்காரம் செய்தல் வேண்டும். வெற்றிலை பாக்கு தாம்பூலம் வைத்து பொன், ப்ஞ்லோகம், நவமணி போன்ற மாலைகள் சூடி  பூஜை செய்யலாம். பூஜையின் போது வசந்தா ராகம் வாசிக்க வேண்டும். 

இவ்வாறு நவராத்திரி 9 ஆம் நாள் ப்ராஹ்மி தேவியை வழிபாடு செய்வதால் நமக்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், சௌபாக்கியமான சந்ததிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆகும். 

நவராத்திரி ப்ராஹ்மி தேவி மந்திரம் (Navarathri 9th Day Mantra): 

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே

பிரஹ்மபத்ன்யை ச தீமஹி

தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்

வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் (Navratri 9th Day):  

அஸ்வினி, பரணி, மூலம்

நவராத்திரி பிரசாதம் (9th Day Of Navratri Prasadam):

மங்காத மகிழ்ச்சியான வாழ்வுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல்,ஆரோக்கியம் பெருக  வேர்கடலை, எள் உருண்டை, பொட்டுக்கடலை வைத்து   அம்மாளுக்கு பூஜிக்க வேண்டும்.

யார் யார் வணங்க வேண்டும், என்ன பிரசாதம் செய்ய வேண்டும், சொல்ல வேண்டிய மந்திரம் 

1st நாள்  4th நாள் 7th நாள்
2nd நாள் 5th நாள் 8th நாள்
3rd நாள் 6th நாள் 9th நாள்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்