Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Temple For Magam Natchathiram : சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!

Manoj Krishnamoorthi October 06, 2022 & 16:15 [IST]
Temple For Magam Natchathiram : சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!Representative Image.

யாரும் எதிர் நின்று வீழ்த்த முடியாத குணம் கொண்ட மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்போதும் மற்றவர்கள் கீழ் அடிபணிந்து வேலை செய்வதைக் காட்டிலும் தன் முயற்சியில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். தன் மனதிற்கு சரியெனப்பட்ட விஷயத்தை நேரடியாக சொல்லும் தைரிய குணம் கொண்ட மகத்தில் பிறந்தவர்கள் எந்த கோவில் சென்றால் சிறப்பு என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Temple For Magam Natchathiram : சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!Representative Image

மகம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் (Magam Natchathiram Kovil)

"மகத்தில் பிறந்தவர் ஜெகத்தை ஆள்வார்" என்பது நாம் கேட்கும் சொல் தான், இதற்கு காரணம் மகம் நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஒரு சமநிலைவாதி ஆவார். எனவே இவர்கள் எப்போது இருக்கும் இடத்தில் முதன்மை வகுத்து கொண்டுதான் இருப்பார். 

ஞானகாரகனான  கேது பகவான் நட்சத்திரத்தின் அதிபதியாக இருப்பதால் மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை வலம் அதிகம் கொண்டு கவி பாடுவது , ஆராய்ச்சி போன்ற கலையில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலம் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஆகும். அடிக்கடி செல்ல முடியாத மக நட்சத்திரக்காரர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த திருத்தலத்திற்கு செல்ல வேண்டும். 

Most Read: கம்பீரமான சிம்ம ராசியை மயக்கும் 5 ராசிகள்

Temple For Magam Natchathiram : சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!Representative Image

தல சிறப்பு (Magam Natchathiram Kovil)

இராமாயண காலத்தில் வாழ்ந்த பரத்வாஜ் முனிவர் வழிபட்ட தலம் அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் கோவிலாகும். பரத்வாஜ் முனிவர் மதுரை மீனாட்சி தேவியைப் பிரதிஷ்டை செய்த 5 முனிவர்களில் ஒருவர் ஆகும். இந்த தலத்தில் பரத்வாஜ் முனிவர் ஒரு தவமேடை அமைத்து  மனதை நிலையில் நிறுத்தி சிவனை வழிபட்டார். சிவனை நினைத்து மனதை ஒடுக்கி வழிபட்ட தவமேடை தவசி மேடை என்ற பெயரில் அழைக்கப்பட்டுவருகிறது. 

ஏன் இந்த ஸ்தலம் மகம் நட்சத்திரத்திற்கு உரிய ஸ்தலமாகக் கருதப்படுகிறது?' என்ற  கேள்வி நம் மனதில் வரும். பரத்வாஜ் முனிவர் மக நட்சத்திரத்தில் பிறந்தவர், சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் பாதம் தன் மீது படவேண்டும் என்பதற்காக பரத்வாஜ் முனிவர் கோவிலில் முகப்பில் இரண்டு பீடமாக இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் பரத்வாஜரை குருவாகக் கொண்டு மாத சிவராத்திரி, மகம், பஞ்சமி, சஷ்டி, ஏகாதேசி, பிரதோஷம் போன்ற தினத்தில் ஈசனுக்கு அபிஷேகம் நடக்கும்.  முக்கியமான சிறப்பாக இத்திருத்தலத்தில்  சிவராத்திரி ஒட்டி 30 நாட்களும் சூரிய ஒளி காலையில் மூலவரான சிவன் மீது , மாலையில் பைரவர் மீது படும். 

Temple For Magam Natchathiram : சிறப்பான வாழ்க்கை பெற மகம் நட்சத்திரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும்..!Representative Image

எப்படி செல்வது? (Magam Natchathiram Temple Route)

அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் செல்ல நாம் திண்டுக்கல் வர வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் வழியில் சுமார் 12 கி.மீ தொலைவில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இந்த இடத்தில் இருந்து 2 கி.மீ வந்தால் மேலும் பயணித்தால் ஆலயத்தை அடையலாம். 

கோயில் நேரம்:- காலை 6:00 மணி- மாலை 6:00 மணி வரை

தொடர்புக்கு:- 91 95782 11659, 93624 05382


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்