Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!

Gowthami Subramani October 04, 2022 & 04:30 [IST]
Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image.

நவகிரகங்களுடனும், வைணவ சேத்திரங்களுடனும் தொடர்புடையவையே நவ திருப்பதிகள் என அழைக்கப்படுகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் வீற்றிருக்கும் பெருமாளையே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நவ திருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாகப் போற்றப்படும் கேது பகவான் அரவிந்த லோசனரைப் பற்றி இதில் காண்போம்..

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image

அருள்மிகு அரவிந்த லோசனர்

நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியாக விளங்குபவர் இரட்டைத் திருப்பதிகளுள் ஒருவரான அரவிந்த லோசனர் ஆவார். நவகிரகத் தலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தளம் கேது பகவானுக்குரிய சிறப்பு வாய்ந்த தளமாகும். இத்திருத்தலம் தூத்துக்குடியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த திருத்தலத்தில் மூலவராக அரவிந்த லோசனரும், அம்மனாக கருந்தடங்கண்ணியும் காட்சி தருகின்றனர்.

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image

தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பு

தென்திருப்பேரைக்கு அருகிலேயே இருக்கும் இந்த திருத்தலத்தில், இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டுமே இரட்டைத் திருப்பதி என போற்றப்படுகிறது. இது ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்த கோவில் அடர்ந்த காட்டிற்குள் அமைந்ததால், இந்த கோவிலுக்கு அருகே வீடுகள் அதிகம் இல்லை. இது நவகிரகங்களில் ராகு கேது என இரு கிரகங்களுக்கும் உரிய தலமாக அமைகிறது.

இந்த திருத்தலம், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 84 ஆவது திவ்ய தேசமாகும். மேலும், நவ திருப்பதிகளில் ஒன்பதவாது திருப்பதியாகும். அதாவது இரட்டைத் திருப்பதியில் இரண்டாவது திருப்பதியாகப் போற்றப்படுபவர் இந்த கேது பகவான் தலமாகும்.

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image

தலம் திறக்கப்படும் நேரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொலைவிலிமங்கலம் பகுதியில் உள்ள இந்த திருத்தலம் காலை 8.00 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 1 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image

அரவிந்த லோசனார் தலத்தின் முகவரி

அருள்மிகு அரவிந்த லோசனார் திருக்கோவில்,

நவதிருப்பதி (இரட்டைத் திருப்பதி)

திருத்தொலைவில்லி மங்கலம்,

தூத்துக்குடி,

தமிழ்நாடு - 628 752

தொடர்பு கொள்ள வேண்டிய எண்: +91 4639 273 607

Nava Tirupathi: நவ திருப்பதி கேது பகவானை வணங்கிட அனைத்து யோகங்களும் கூடி வரும்..!Representative Image

பிரார்த்தனை செய்தல்

இரட்டைத் திருப்பதிகளுள், ஒன்பதாவது திருப்பதியான கேது பகவானை வணங்கிட, திருமணத்தடை, குழந்தை பாக்கியம் பெறுவர். மேலும், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் இந்த தலத்தில் உள்ள பகவான் விளங்குகிறார்.

 

 

நவதிருப்பதி கோவில்கள் விவரங்கள்:

நவதிருப்பதி கோவில் 1: ஸ்ரீ வைகுண்டநாதர் கோவில்

நவதிருப்பதி கோவில் 2: நத்தம் விஜயாஸனர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 3: திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 4: திருப்புளியங்குடி பூமிபாலகர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 5: ஆழ்வார் திருநகரி ஆதிநாதன்

நவதிருப்பதி கோவில் 6: மகரநெடுங் குழைக்காதர் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 7: வேங்கட வாணன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 8: ஸ்ரீநிவாசன் திருக்கோவில்

நவதிருப்பதி கோவில் 9: அரவிந்தலோசனார் திருக்கோவில்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்