Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!

Manoj Krishnamoorthi October 07, 2022 & 16:15 [IST]
Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!Representative Image.

27 நட்சத்திரத்தில் 11வது நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் இளம்வயதிலே சுக்கிர திசை வந்துவிடும், எனவே சுகபோக வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவர். வசீகரிக்கும் அழகிற்கு சொந்தக்காரரான பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஸ்தலம் எதுவென்று தெரியுமா...? அது பற்றி அறிய இந்த பதிவை பின்தொடரவும்.

Most Read: திருவாதிரையில் பிறந்த நீங்க கோவில் போன இவ்வளவு நன்மையா…?

Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!Representative Image

பூரம் நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில் (Temple For Pooram Natchathiram)

புகழ் மீது அதிகம் நாட்டம் கொண்ட பூரம் நட்சத்திரம் எப்போது தங்களை பெருமையாக பேசி கொள்ளும் குணம் கொண்டவர்கள். பெருமை கொள்ளும் விதம் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். தெளிவான திட்டங்கள் வகுத்து புத்திக்கூர்மையால் எதையும் முடிக்கும் திறன் கொண்ட பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதுக்கோட்டையில் உள்ள அருள்மிகு தீர்த்தேஸ்வரர் கோவிலுக்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும். 

பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார், ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால் சுகபோக வாழ்வை எளிதில் அமையும். கலைகள் கற்பதில் ஆர்வம் கொண்ட பூர நட்சத்திரக்காரர்கள்  வேளாண்மை துறையில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். செய்யும் செயலில் முதன்மை பெற்று எளிதில் புகழடையும் அதிர்ஷ்டக்காரர்கள் ஆவர்.  பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆடிப்பூரம், பிறந்த நாள், மாதாந்திர நட்சத்திர நாள் தினங்களில் இத்திருத்தலம் செல்வது நன்மை ஆகும். 

Also Read: கிருத்திகை நட்சத்திரக்காரர் செல்ல வேண்டிய கோவில்..!

Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!Representative Image

தல சிறப்பு (Pooram Nakshatra Kovil)

புதுக்கோட்டை மாவட்ட திருவரங்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவ ஆலயத்தின் மூலவர் சுயம்பு மூர்த்தியாகும். கிழக்கு நோக்கி அமைந்துள்ள ஈசனின் திருக்கோயில் தீவர சிவபக்தன் சோழ மன்னன் கல்மாஷபாதனால் கட்டப்பட்டது.

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத மன்னன் கல்மாஷபாதன் வருந்தி அகத்திய முனிவரை அடைந்தான். திருவரங்குளம் சென்று அங்கு இருக்கும் சிவலிங்கத்தீற்கு பூஜை செய்தால் குழந்தை பேறு உண்டாகும் என அகத்திய முனிவர் கூறினார். திருவரங்குளம் சென்ற மன்னன் லிங்கத்தை தேடினான். பின்னர் அங்குள்ள மனிதர்கள் யார் பூஜை பொருள் கொண்டு சென்றாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் விழும் என்று சொல்லிய தகவலை வைத்து பூழியில் தோண்டி சிவ லிங்கத்தை கண்டறிந்தான். 

 

Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!Representative Image

மன்னன் இறைவனை கண்டறிந்தது பூர நட்சத்திரத்தில் தான், சிவ பக்தனான சோழ மன்னன் சிவனுக்கு ஆலயம் உருவாக்கினான். அகத்திய முனிவரின் வாக்குப்படி மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. 

ஈசனின் தலையில் இருந்து உருவாகும் இத்தல தீர்த்தம் ஹர தீர்த்தம் என அழைக்கப்படும், இந்த கோயில் பூர நட்சத்திரத்திற்கு உரிய கோயிலாகும். இதற்கு காரணம் பூர தீர்த்தம் என்னும் அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தத்தின் சொரூபமாக இத்தல தீர்த்தம் இருப்பதாகும். பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து  சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி பூஜித்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். 

Temple For Pooram Natchathiram : பூரத்தில் பிறந்த நீங்க இந்த கோயிலுக்கு போன எட்டுத்திக்கும் உங்க புகழ் தான்...!Representative Image

எப்படி செல்வது? (Pooram Natchathiram Temple Route)

இந்த திருக்கோயிலுக்கு வர முதலில்  புதுக்கோட்டை வர வேண்டும். புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கீ.மீ பயணித்தால் திருவரங்குளத்தில் உள்ள அருள்மிகு தீர்த்தேஸ்வரர் கோவிலை அடையலாம்.

கோயில் நேரம்:- காலை 7 மணி - மதியம் 12:00 மணி;  மாலை 5 மணி - இரவு 7:30 மணி 

தொடர்புக்கு:-  91 97519 56198, 98430 55146, 94436 04207 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்