Thu ,May 02, 2024

சென்செக்ஸ் 74,482.78
-188.50sensex(-0.25%)
நிஃப்டி22,604.85
-38.55sensex(-0.17%)
USD
81.57
Exclusive

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of Justice

Priyanka Hochumin Updated:
சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image.

இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் கர்ம பலனை அளிப்பதற்கு முன்பு சனி பகவான் என்னென்ன சோதனைகளைக் கடந்து வந்திருக்கிறார் தெரியுமா? அதாவது நமக்கு சோதனைகளை தரும் சனீஸ்வரர் எவ்ளோ சங்கடங்களைக் கடந்து வந்திருக்கிறார் என்று தெரிந்துக் கொள்ளலாம்.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

சூரிய பகவானின் மனைவி சந்தியா தேவி அவரின் வெப்பத்தை தங்குவதற்காக கடுமையாக தவத்தை மேற்கொள்ள செல்ல விரும்பினார். எனவே, அவரின் நிழலுக்கு உயிர் கொடுத்து தன்னுடைய குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் படி சொல்லி விட்டு செல்கிறார். அந்த காலக் கட்டத்தில் நிழல் சாயா மற்றும் சூரிய பகவானுக்கு பிறந்தவர் தான் "சனி". இவர் தான் சூரிய புத்திரர் என்று இந்த பிரபஞ்சத்திற்கு தெரிய வந்து, பின்பு அனைவரிடமும் நீதிக்காக போராடி வந்தார்.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

அப்போது சனியின் பாட்டனார் விஸ்வகர்மாவின் இடத்திற்கு சென்ற போது இந்திரன் மற்றும் சுக்ராச்சாரியாரின் சூழ்ச்சியில் சனியின் தாயார் மாட்டிக்கொண்டார். அந்த கொடூரமான சக்ரவியூகத்தில் இருந்து தாயை காப்பாற்ற சனி பகவானுக்காக தயாரித்த ஆயுதத்தை பயன்படுத்தி காப்பாற்றி விட்டார். அப்போது முதல் கர்ம பலன் அளிக்கும் சக்தியாக சனி பகவான் திகழ் ஆரம்பிக்கிறார். ஆனால் அந்த சமயத்தின் போது தேவி சந்தியா அவரின் தவத்தை நிறைவு செய்யும் தருணத்தில் இருந்துள்ளார். எனவே, தேவி சாயாவின் உடல் சற்று கருமையுற்றே இருந்தது.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

அப்போது தேவ லோகத்தில் "தர்மா" பதவிக்கு தேவர்களின் பிள்ளைகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. சனியோ தன்னுடைய தாயை காப்பற்ற அதில் பங்கேற்காமல் மஹாதேவரை சந்திக்க முடிவெடுத்தார். ஆனால் இந்த சந்திப்பு நடக்க கூடாது என்று மும்மூர்த்திகளும் அறிவர். இருப்பினும் சிவா பெருமான் "ஈசன்" என்பதால் தன் மீது பற்றுக் கொண்டு வரும் பக்தர்களை சந்திக்கலாம் இருக்க மாட்டார். எனவே, பகவான் விஷ்ணு தன்னுடைய விளையாட்டை ஆரம்பித்தார்.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

சனி பகவான் சுக்ராச்சாரியாரின் உதவியோடு கைலாய மலையின் பாதையை தெரிந்துகொண்டு பயணத்தை தொடங்கினார். விஷ்ணுவோ இந்திர தேவரை பயன்படுத்தி இதனை தடுக்க உத்தரவிட்டார். அவரும் அதனை ஒப்புக்கொண்டு தேவர்கள் அனைவரின் உதவியுடன் செயல் புரிய ஆரம்பித்தார். ஆனால் சனி பகவானின் தூய்மையான எண்ணத்தாலும், அவரின் நம்பிக்கையாலும் இவர்களின் முயற்சி தோல்வியுற்றது. இறுதியாக பகவான் விஷ்ணு தானே அந்த செயலை முடிக்க களமிறங்கினார்.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

மனிதர் ரூபத்தில் வந்த விஷ்ணு சனி பகவானுக்கு அவரின் கடமையை பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்த பலவகையில் முயற்சித்தார். ஆனால் சனீஸ்வரரின் பேச்சாற்றலால் அவரை மெய்சிலிர்க்க வைத்துவிட்டார். ஈசனை பார்க்க செய்யும் பாதையில் அக்னி தேவனை பயன்படுத்தி தீயில் சனி பகவானை மாட்டிவிட இந்திரர் முயற்சித்தார். ஆனால் அதில் காகம் சனியை காப்பாற்ற தன்னை தியாகம் செய்தது. எனவே, சிவா பெருமானை சந்தித்த சனி பகவானுக்கு ஒரே ஒரு வரம் மட்டுமே கிடைக்கும், அதில் ஒன்று காகம் அல்லது அவரின் தாய் ஆகிய ஒருவரின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டார்.

சங்கடங்களை தீர்க்கும் சனீஸ்வரர் மேற்கொண்ட சோதனைகளைப் பற்றி தெரியுமா? | Shani Dev God of JusticeRepresentative Image

இந்த பரிட்சையானது சனி பகவான் உண்மையாக கர்ம பலன் அளிக்கும் பதவிக்கு தகுதியானவரா என்பதை தீர்மானிக்க சிவனின் திருவிளையாடலாகும். இறுதியாக தனக்காக தியாகம் செய்த காகத்திற்கு உயிர் தருமாறு வேண்டிக்கொண்டார். இதனைக் கண்டு மகிழ்ந்தனர் பிரம்மர் மற்றும் மஹாவிஷ்ணு. ஆனால் சனி பகவான் தன்னுடைய பற்றின் காரணமாக என்னுடைய தாயை காப்பாற்றுங்கள் என்று கேட்கிறார். சற்று குழப்பத்தில் இருந்த மூவேந்தர்களை பிரம்மிக்க வைத்து விட்டார் சனீஸ்வரர். தன்னுடைய தாயின் உயிரை காப்பாற்ற நான் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து படைப்புகளின் சாட்சியாக மும்மூர்த்திகளிடம் கூறுகிறேன் "நான் என்னுடைய கடமையை ஆற்ற இறுதி வரை பற்றற்று இருப்பேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறுகிறார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்