Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on Saturday

Nandhinipriya Ganeshan Updated:
சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image.

நீதிகாரகனான சனிபகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை. இந்த நாளில் தவறுதலாக கூட இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைக்கும் மேல் பிரச்சனையாய் வரும் என்று சாஸ்திரம் சொல்கிறது. சனிபகவான் எந்த ராசியினரிடம் மகிழ்ச்சி அடைகிறாரோ, அவருடைய அதிர்ஷ்டம் பிரகாசிக்க அதிக நேரம் எடுக்காது. அதுவே, ஒருமுறை சனிபகவானுக்கு பிடிக்காதது ஏதாவது செய்து அவருடைய கோபத்திற்கு ஆளாகிவிட்டால் அவருடை தண்டனையில் இருந்து யாராலும் தப்பிக்கவே முடியாது. எனவே, சனிபகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் இந்த 5 தவறுகளை தெரியாமல் கூட செய்து விடாதீர்கள்.

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

இரும்பு:

சனிக்கிழமைகளில் தவறுதலாக கூட இரும்பு அல்லது இரும்பால் செய்யப்பட்ட பொருட்களை வாங்கக் கூடாது. இது அசுப செயலாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். இருப்பினும், இரும்பு தானம் செய்வதன் மூலம் தீராத கடன்கூட தீரும். 

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

கருப்பு எள்:

கருப்பு எள்ளுடன் கடுகு எண்ணெய் சனிக்கிழமைகளில் தானம் செய்வது நல்லது. இருப்பினும், இந்த இரண்டு பொருட்களை சனிக்கிழமை நாளே வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், விருட்ச பலன்களுக்குப் பதிலாக சனிபகவானின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். ஒருவேளை நீங்க சனிக்கிழமைகளில் எள் தீபம் போட வேண்டும் என்று நினைத்தால், 2 நாட்களுக்கு முன்பாகவே வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. 

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

செருப்பு:

சனிக்கிழமைகளி ஏழை, எளியோருக்கு செருப்புகளை தானம் செய்தால் சனி தோஷங்கள் நீங்கும். அதுவே, காலணிகளை பரிசாக எடுத்துக் கொண்டால் சனி தோஷம் ஏற்படும். அதேபோல், இந்த நாளில் முதியோர்கள், ஏழைகளை தெரியாமல் கூட அவமதித்து விடாதீர்கள். இல்லையென்றால், சனிபகவானின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். 

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

கடுகு எண்ணெய்:

சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயில் தீபம் ஏற்றுவார்கள். ஆனால், இதற்காக சனிக்கிழமையன்றே கடுகு எண்ணெய் வாங்கக் கூடாது. அதற்கு பதிலாக வீட்டில் ஏற்கனவே வைத்திருக்கும் கடுகு எண்ணெயைப் பயன்படுத்தலாம். அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். 

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

பயணம் செய்யக்கூடாது:

சாஸ்திரங்களின் படி, சனிக்கிழமைகளில் வடக்கு அல்லது கிழக்கு திசையில் பயணம் செய்ய கூடாது. மிகவும் அவசியமாக இருந்தால் மட்டுமே இந்த திசையில் பயணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் இந்த திசைகளில் பயணம் செய்தால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படும்.

சனிக்கிமைகளில் இந்த பொருட்களை தெரியாம கூட வாங்கிடாதீங்க | Things not to Buy on SaturdayRepresentative Image

உப்பு:

உப்பை எப்பொழுதும் சனிக்கிழமையில் வாங்காதீர்கள். வெள்ளிக்கிழமைகளில் வாங்குவதுதான் சிறப்பு. சனிக்கிழமையில் உப்பு வாங்கினால் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் நஷ்டங்களை சந்திப்பீர்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்