Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Urea Import in India after 2025: 2025 இறுதிக்குள் யூரியா இறக்குமதி இனி இந்தியாவில் இருக்காது? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

Gowthami Subramani July 08, 2022 & 13:15 [IST]
Urea Import in India after 2025: 2025 இறுதிக்குள் யூரியா இறக்குமதி இனி இந்தியாவில் இருக்காது? மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!Representative Image.

Urea Import in India after 2025: வரும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள், யூரியாவை இறக்குமதி செய்வதற்கான அவசியம் இருக்காது மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

யூரியா இறக்குமதி

தற்போது, இந்தியாவில் யூரியாவின் உற்பத்தி வழக்கமாக 260 லட்சம் டன்களாக உள்ளது. அதே நேரத்தில் நமது உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சுமார் 90 லட்சம் டன்கள் அளவிலான யூரியா இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில், மத்திய ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சரான மன்சுக் மாண்டவியா அவர்கள், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் யூரியா இறக்குமதி செய்வதற்கான அவசியம் நம் நாட்டில் இருக்காது எனக்கூறியுள்ளார்.


A picture containing text, grass, outdoorDescription automatically generatedநானோ யூரியா என்றால் என்ன? முக்கியத்துவம், பயன்பாடுகள், குறித்த முழு விவரங்கள். இந்த யூரியாவால், லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா..?


நானோ யூரியா என்றால் என்ன?

நானோ தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு பயிர்களின் ஊட்டச்சத்து திறனை மேம்படுத்துவதற்காக உற்பத்தி செய்யப்படும் யூரியாவை நானோ யூரியா என அழைப்பர். இந்த நானோ யூரியா திரவம், வழக்கமாக தேவைப்படும் யூரியா அளவை மாற்றும். அதன் படி, இது வழக்கமான தேவையைக் குறைந்தபட்சம் 50 சதவீதம் அளவில் குறைக்கக் கூடிய தன்மை கொண்டதாக அமைகிறது.

பாதிக்கும் அதிகமான

இந்த வழக்கமான யூரியாவுக்காக சுமார் 60 லட்சம் டன் உற்பத்தி திறன் சேர்க்கப்படுகிறது. அதன் படி, நானோ யூரியாவின் உற்பத்தி ஆண்டுக்கு 44 கோடி பாட்டில்கள் அதாவது ஒவ்வொரு பாட்டிலும் 500 மில்லி உயரும் என கூறினார். இந்த உற்பத்தியே வழக்கமாக நாம் பெறப்படும் 200 லட்சம் டன்களுக்குச் சமமாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

நானோ யூரியாவைப் பயன்படுத்துவதால், பாதிக்கும் அதிகமான வழக்கமான தேவை குறைக்கப்படுகிறது.

A picture containing text, grass, outdoorDescription automatically generated

நானோ யூரியாவின் பயன்பாடுகள்

இது மண்ணின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும் பெருமளவில் பயன்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த நானோ யூரியா விவசாயிகளால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று மாண்டவியா கூறியுள்ளார்.

மேலும், இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம், யூரியா இறக்குமதியைத் தடுக்க முடியும். இவ்வாறு இறக்குமதி குறைவால், அரசுக்கு ஆண்டு தோறும் ஏற்படக்கூடிய ரூ.40,000 கோடி அன்னிய செலவு சேமிக்கப்படும்.

விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும்

இந்த நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகளின் வருமானம் ஒரு ஏக்கருக்கு, சராசரியாக ரூ.4,000 அதிகமாகக் கிடைக்கும் என மதிப்பிட்டுள்ளது.

இவ்வாறு நானோ யூரியாவைப் பயன்படுத்துவதன் மூலம், அந்நிய செலவாணியை மீதப்படுத்துவதுடன், விவசாயிகளின் வருமானமும் பெருகும். மேலும், இதனைப் பயன்படுத்துவதால் போக்குவரத்து செலவு குறைவதுடன், சிறு / குறு விவசாயிகள் பெரிதும் பயனடைவர் எனக் கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்