Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.... ?

Manoj Krishnamoorthi October 31, 2022 & 18:30 [IST]
Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.... ?Representative Image.

இன்று சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை (1.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் சில ராசிகள் நல்ல கோச்சார அடிப்படையில் நற்பலன்களை பெறுகிறது. இன்று 1.11.22 அன்று நிம்மதியாக இருக்கும் அதிர்ஷ்டமான ராசிகள் எது என்று அறிய இந்த பதிவை பின்தொடரவும். 

Also Read: நவம்பர் தினத்தின் ராசிபலன் (1.11.2022, செவ்வாய்)

Today Lucky Rasi : இன்றைய தினத்தின் அதிர்ஷ்டக்காரர்கள் யார்.... ?Representative Image

இன்றைய அதிர்ஷ்ட ராசிகள்

மேஷம் 

உங்களுக்கு சாதகமான நாளாக இன்றைய தினம் அமையும், தொழிலில் நற்பெயர் கிடைக்கும். திறமைக்கு ஏற்ற வெகுமதி கிடைக்கும். நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். காதல் வாழ்வில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவில் நட்பான அணுகுமுறை இருக்கும். குடும்பத்தினர் உடன் சந்தோஷமாக பொழுது செல்லும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெற்றி!

மகரம் 

இன்று அதிர்ஷ்டமான நாளாக இருக்கும், பணியிடத்தில் வேலைகள் சுமுகமாக நடக்கும்.  மனம் அமைதியாக இருக்கும், வியாபாரத்தில் தெளிவான முடிவுகள் பல பிறக்கும். சிறப்பான பணப்புழக்கம் உண்டு. திருமண பந்தத்தில் தயக்கமான தருணங்கள் இனிமையாகும். வீட்டில் பெரியவரின் அறிவுரை நல்ல பலன் அளிக்கும். கல்வியில் சிறப்பான வளர்ச்சி இருக்கும். உடல்நலத்தில் சிறிய அசௌகரியம் உண்டாகும்.  ஆக்கம்!

கும்பம் 

இன்று அலுவலகத்தில் குறித்த வேலையை முடிப்பது எளியதாக இருக்கும். உங்கள் சுறுசுறுப்பான நடத்தை நன்மதிப்பை கொடுக்கும். பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். போட்டி தேர்வு பயிலும் மாணவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். செல்வ நிலையில் திட்டமிடல் வேண்டும்.  குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். காதல் வாழ்வில் பொறுமையாக இருக்க வேண்டும்,  முக்கிய முடிவு எடுப்பீர்.  ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும், ஓய்வு தேவைப்படும். பெருமை!

மீனம் 

இன்றைய தினம் மனநிறைவான நாளாகும், பணியிடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்கும்.  நிதி வளர்ச்சி நன்றாக இருக்கும். குடும்ப வாழ்வில் சந்தோஷம் கூடும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும், மறக்க முடியாத நாளாக இருக்கும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை. நிறைவு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்