Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi November 05, 2022 & 13:30 [IST]
Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image.

Nalaya Rasi Palan

சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை (6.11.2022) தினத்தின் கிரக நிலை மாற்றத்தால் 12 ராசிகள் அடையும் பலன் பற்றி வேண்டுமா இந்த பதிவில் மேஷம்- கன்னி வரை 6 ராசியின் தினசரி பலன், அதிர்ஷ்ட நிறம், அதிர்ஷ்ட எண் போன்றவை  கொடுக்கப்பட்டுள்ளது,

ராசிபலன் 

மேஷம்- வரவு

ரிஷபம்- தாமதம்

மிதுனம்- வெற்றி

கடகம்-  ஆதரவு

சிம்மம்- நற்சொல்

கன்னி- எதிர்ப்பு

நல்ல நேரம்

காலை: 6:15- 7:15 வரை

மாலை: 3:15- 4:15 வரை 

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

மேஷம் (Mesham Nalaya Rasi Palan)

இன்றைய தினம் வளமான நாளாக இருக்கும், அலுவலக வேலையில் அழுத்தம் இருக்காது. தொழில் சுமுகமாக செயல்படும். நல்ல பணப்புழக்கம் இருக்கும், சேமிக்க முடியும். 

இல்லற வாழ்வில் சந்தோஷம் அதிகமாகும்.  நட்பு வட்டாரம் விரிவடையும். உடல்நலத்தில் பிரச்சனை இல்லை, தியானம் அல்லது உடற்பயிற்சி மீது ஆர்வம் இருக்கும். வரவு!

அதிர்ஷ்ட நிறம்:  சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 3

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

ரிஷபம் (Rishabam Nalaya Rasi Palan)

இன்று வேலையில் சிறிய சோம்பல் இருக்கும். வேலையின் மீது ஆர்வம் இருக்காது, பொழுதுபோக்கு அம்சத்தில் நேரம் செலவிட நினைப்பீர். பண வரத்து குறையும். சேமிப்பு செலவாகும். 

குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்கும். மாணவர்களுக்கு திட்டமிட்ட படி செயல்பட முடியாது, தடுமாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வயிறு சார்ந்த தொல்லைகள் ஏற்பட்டு மறையும். தாமதம்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 7

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

மிதுனம் (Mithunam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் கை வைக்கும் இடமெல்லாம் வெற்றி தான், வியாபாரத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். தொழிலில் சாதனை படைப்பீர். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், பெரிய முதலீட்டில் கவனம் தேவை. 

கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும், எதிர்கால தேவை குறித்த கலந்துரையாடல் இருக்கும். ஆன்மீக ஸ்தலம் செல்ல நினைப்பர். புத்துணர்ச்சியான  உடல்நலம் இருக்கும். வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்:  வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 5

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

கடகம் (Kadagam Nalaya Rasi Palan)

உத்தியோகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும், ஆனால் வேலையில் அதிகமான பொறுப்பு இருக்கும்.  கல்வி ஸ்தானத்தில் ஆர்வம் அதிகமாகும். செல்வ நிலை செலவுதான் ஓங்கி இருக்கும். 

குடும்ப வாழ்வு இயல்பாக இருக்கும், குடும்ப உறுப்பினர் ஆலோசனை இருக்கும். காதல் வாழ்வில் அதிகமான உணர்ச்சிவசத்தால் விரிசல் ஏற்படும். திடீரென உடல் குறை ஏற்படும். ஆதரவு!

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 1

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

சிம்மம் (Simmam Nalaya Rasi Palan)

இன்றைய தினம் நன்மை அதிகமாக இருக்கும், தெளிவான மனநிலை இருக்கும். பணியிடத்தில் சகஜமான சூழல் இருக்கும். புதிய ஞானம் பெற ஆசை உதிக்கும். செலவு வழக்கம்போல் இருக்கும், வருமானத்தை உயர்த்த ஆராய்வீர். 

வீட்டில் இன்பமான சூழல் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான உறவு இருக்கும். சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் உண்டு. ஆரோக்கியத்தில் குறைபாடு இருக்காது, இழந்த சுறுசுறுப்பு கிடைப்பதுபோல தோன்றும்.  நற்சொல்!

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 6

Nalaya Rasi Palan: ஆசுவாசமாகப் பொழுதை கழிக்கும் ராசிகள்... 6.11.2022 ராசிபலன்!Representative Image

கன்னி (Kanni Nalaya Rasi Palan)

உங்களுக்கு இறை வழிபாடு தேவையான நாளாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவு இருக்காது. பணம் அதிகமாக செலவாகும். மாணவர்களின் கல்வி நிலையில் கவனக் குறை உருவாகும், நேரத்தை விரையம் ஆக்குவர்.

குடும்பத்தினர் உடன் கருத்து மோதல் ஏற்படும், பொறுமையாக இருப்பது உறவில் வருத்தத்தை அளிக்காது. காதலர்களுள் சுற்றத்தார் மூலம் வாக்குவாதம் வரும். ஆரோக்கியத்தில் கண் எரிச்சல், உஷ்ணம் சார்ந்த தொல்லை வரும். எதிர்ப்பு!

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட எண்: 8

Part 2 : துலாம்- மீனம் ராசிபலன் (6.11.2022, ஞாயிறு)


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்