Sun ,Apr 21, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆவணி 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆவணி மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், ஆவணி 18 ஆம் தேதி குருபகவான் வக்கிரமடைகிறார். அதேபோல், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் வக்கிரமடைந்து, வக்கிர நிவர்த்தியடைகிறார்கள். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆவணி மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 மகரம்:

பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உங்களுக்கு உடலில் இருந்து கழிவுகள் வெளியேறக்கூடிய இடங்களில் பாதிப்புகள் ஏற்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் பொறுமையுடன் நடந்துக் கொள்ளவும். வாழ்க்கை துணையிடம் தேவையில்லாத பிரச்சனை வர வாய்ப்புள்ளது. அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். வியாபாரிகள் தொழிலில் அதிகளவு முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே முதலீடு செய்ய வேண்டிய சூழல் வந்தாலும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வண்டி, வாகனங்களால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளுங்கள். தொலைதூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும்.

புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 கும்பம்:

வாழ்க்கைத் துணையால் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கி, திடீர் லாபம் ஏற்படும். சிலருக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொட்டது துலங்கும். இருப்பினும், மாதத்தின் இரண்டாம் பாதியில் வார்த்தையில் கவனம் தேவை. யாரிடம் பேசுவதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து பேச வேண்டும். புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் தடைகள் வரும். பங்குதாரர்களுக்கு கிடையே பண விஷயத்தில் மனச்சங்கடங்கள் ஏற்படும். இந்த மாதம் முழுவதும் யாரையும் முழுமனதாக நம்புவதை தவிர்க்கவும். கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு நச்சரிப்பார்கள். 

புதிய நபரால் காதலர்களுக்கு இடையே புதுப் பிரச்சனை தலைதூக்கும்.. | Aavani Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆவணி மாத ராசிபலன் 2023 மீனம்:

முதல் 8 நாட்கள் வரை நினைத்தது எல்லாம் நடக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகப்பலன் கிடைக்கும். அதன்பிறகு, முக்கிய பணிகளில் காரியத்தடை ஏற்படும். பண உதவி உரிய நேரத்தில் கிடைக்காது. சிலருக்கு வீட்டை மாற்றக்கூடிய சூழ்நிலை வரலாம். சுபகாரியங்களில் தாமதம் ஏற்படும். கையெழுத்து இடக்கூடிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். காதலில் ஏமாறக்கூடிய காலக்கட்டம் என்பதால், எதிலும் கவனம் தேவை. கணவன் - மனைவி எந்த சண்டை வந்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆசைக்காட்டி மோசம் செய்யும் நிலைக்கு நீங்கள் தள்ளப்படுவீர்கள். எனவே, பண விஷயத்தில் அதிக கவனம் தேவை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்