Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in Tamil

Priyanka Hochumin Updated:
இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

செப்டம்பர் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்:

செப்டம்பர் மாதத்தில் மேஷ ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன் மற்றும் புதன், கன்னி ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, கும்பம் ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் செப்டம்பர் 17 ஆம் தேதி சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், செப்டம்பர் 04 ஆம் தேதி குரு பகவான் வக்கிர நிலைக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் செப்டம்பர் மாதத்தில் துலாம், விருச்சகம், தனுஷ் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 துலாம்:

புதிய முயற்சிகள் நல்ல பலனை தரும். நிம்மதியாக வேலை செய்யும் சூழல் அமையும். திருமணம் ஆகாமல் வரன் தேடுபவர்களுக்கு தடை தாமதங்கள் வந்து போகும். உயர்கல்வி தொடர்பான மாணவர்களின் எண்ணம் ஈடேறும். கால், எலும்பு மற்றும் தலைவலி போன்ற உடல் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் சில முரண்பாடுகள் வந்து நீங்கும். பெண்களுக்கு மதிப்பு கிடைக்கும் சூழல் அமையும். தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 விருச்சகம்:

வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். துணிச்சலுடன் முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனிப்பு எடுத்துக்கொள்ளவும். இழுபறியாக இருந்து வந்த திருமண விஷயங்கள் கைகூடும். போட்டித் தேர்வில் எளிதாக வெற்றி காண்பீர்கள். உடற் சோர்வு போன்ற உணர்வுகள் வரலாம். பணம் கொடுக்கல், வாங்கலில் சாமர்த்தியமாக நடந்து கொள்ளுங்கள். காதல் திருமணங்கள் சாதகமாகும். வீடு, மனை வாங்கும் வாய்ப்புள்ளது.

இந்த ராசியினருக்கு காதல் திருமணம் சக்சஸ் ஆகும்..!| September Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

செப்டம்பர் மாத ராசிபலன் 2023 தனுஷ்:

எதிர்காலம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரம் மற்றும் முதலீடு தொடர்பான விஷயம் அமோகமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். நீண்ட நாட்களாக குழந்தை வரன் வேண்டி காத்திருந்த தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். காதல் திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது. மாணவர்ளுக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்மறையாக இருந்தவர்கள் நட்பு பாராட்டுவார்கள். அதிக உணவு எடுத்துக்கொள்வதால் செரிமான கோளாறு வந்து நீங்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்