Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் மகரம், கும்பம், மீனம் ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம். 

இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மகரம்:

உங்க ராசிக்கு 8ம் இடத்தில் சூரியன் வரப்போகிறார். அதனால், உடல்நலத்தில் குறிப்பாக, முதுகு தண்டு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. இந்த காலக்கட்டத்தில் அப்பா, மகனுக்கு இடையே தேவையில்லாத வாய்ச்சண்டை வரும். நிதானம் தேவை. மனைவி வழி பந்தங்களிடம் பேசும்போது வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உயர்அதிகாரியிடம் கணிவான பேச்சு அவசியம். இருப்பினும், இரவு நேரத்தில் பணிபுரியும் நபர்களுக்கு அற்புதமாக இருக்கும். 

இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கும்பம்:

லக்னத்திலேயே சனி வக்ரம் பெற்றிருப்பதால், முக்கியமான மாதமாக இந்த ஆகஸ்ட் மாதம் இருக்கும். வீட்டு பெரியவர்களின் உடல்நிலைகளில் பாதிப்பு ஏற்படும். எண்ணங்களில் தெளிவு இருக்காது. நினைத்த காரியம் நடக்காமல் போகும். அதனால் டென்ஷன், பிரஷரோடே இருப்பீர்கள். வண்டி, வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை. அண்ணன், தம்பி இடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அடிவயிறு, நரம்பு சம்பந்தபட்ட பிரச்சனைகளை சந்திப்பீர்கள். 

படிப்புகளில் தடை ஏற்படலாம். அனைவரிடமும் எரிந்து விழுவீர்கள். வாழ்க்கை துணையின் வார்த்தை சரியானதாக இருந்தாலும், நீங்க சொல்வது தான் சரி என்று செயல்படுவீர்கள். இருவருமே அனுசரித்து நடந்துக்கொள்ள வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலையாட்களால் பிரச்சனைகள் வரும். கடன் கொடுத்தவர்கள் வீடு தேடி வருவார்கள். இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும்.

இந்த காலக்கட்டத்தில் சொந்தக்காரர்களிடம் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 மீனம்:

உங்க ராசிக்கு 12ம் இடத்தில் சனி வக்ரம் பெற்றிருப்பதால், எதிர்பாராத செலவுகள் வருத்தத்தை தரும். நீங்கள் நம்பிக்கை வைத்த நபர் உங்களுக்கு எதிராகவே நடந்துக் கொள்ளும் சூழ்நிலைகள் வரும். இந்த காலக்கட்டத்தில் வாழ்க்கை துணையின் பேச்சு, அதிகாரம் அதிகரித்து காணப்படும். எனவே, நீங்க அனுசரித்து அமைதியாக இருப்பது பல பிரச்சனைகளை தடுக்கும். 

வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரம், பொறுப்பு அதிகரிக்கும். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் நீங்கும். அய்யோ பாவம் என்று யார் மீது இரக்கம் காட்டினாலும் அவர்களே உங்களை ஏமாற்ற வாய்ப்புள்ளது. பணம் சார்ந்த விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்