Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57
Exclusive

இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: 

ஆகஸ்ட் மாதத்தில் மேஷம் ராசியில் ராகு மற்றும் குரு, கடக ராசியில் சூரியன் மற்றும் சுக்கிரன், சிம்மம் ராசியில் செவ்வாய் மற்றும் புதன், துலாம் ராசியில் கேது, கும்ப ராசியில் வக்கிர சனி என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கின்றன. மேலும், சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி கடகத்திலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதேபோல், ஆகஸ்ட் 07 ஆம் தேதி மிதுன ராசியில் உள்ள சுக்கிர பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுமட்டுமல்லாமல், ஆகஸ்ட் 18 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்த செவ்வாய் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவ்வாறு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசியினர் பெறப்போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கடகம்:

உங்க லக்னத்தில் சூரியனும், சுக்கிரனும் வக்கிரமடைகின்றன. இதனால், பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும். திடீர், வீண் செலவுகள் அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் மருத்துவ செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. தாயுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. சூரியன் லக்னத்தில் வக்கிரமடைவதால், எப்போதும் இல்லாமல் பேச்சில் அநாகரிமான பேச்சு அதிகரிக்கும். அதனால், யாரிடம் பேசுவதாக இருந்தாலும் யோசித்து நிதானத்துடன் பேச வேண்டும். 

அதேபோல், இந்த காலக்கட்டத்தில் பிடிவாதத் தன்மை அதிகரிக்கும். ஒருசிலருக்கு முகத்தில் சின்ன சின்ன வெட்டுக் காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சினால் குடும்பத்தில் பிரச்சனை வரலாம். தந்தையின் சொல்கேட்டு நடப்பது உத்தமம். இப்படி ஒருபக்கம் இருந்தாலும், சிலருக்கு வண்டி, வாகனம், மனை வாங்கக்கூடிய யோகம் கைகூடி வரும். பணிமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதிக்கு பிறகு சின்ன விஷயமாக இருந்தாலும் மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக நடக்கும். 

இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 சிம்மம்:

உங்க ராசியிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் சூரியனும் சுக்கிரனும் வக்கிரமடைவதால், வாழ்க்கை துணையினால் பல விரையங்கள் வரும். 18 ஆம் தேதிக்கு பிறகு சுப காரியங்களுக்காக செலவு செய்யலாம். தண்ணீரால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்நிலை சார்ந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும். நிறைய புதிய நபர்களின் சந்திப்பு ஏற்படும். வியாபாரிகளுக்கு அற்புதமான காலக்கட்டம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். 

கடனாக கொடுத்த இடத்தில் பணத்தை திரும்ப கேட்டால் உடனே கிடைக்கும். ஆளுமை திறன் அதிகரித்து காணப்படும். எந்த செயலையும் தையரியமாக கையாளுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் அனைத்தும் நல்லமுறையில் நடக்கும். எதிர்பாராத பணவரவுக்கு அதிகளவு உள்ளது. இருப்பினும், உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டிய காலக்கட்டம். உங்களுடைய பேச்சு சரியாக இருந்தாலும், அது பிரச்சனையில் தான் முடியும். அதாவது, உங்களுடைய பேச்சு குடும்பத்தில் பகையை வளர்க்கும். 

இந்த ராசியினர் நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.. | August Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ஆகஸ்ட் மாத ராசிபலன் 2023 கன்னி:

19ம் தேதிக்கு பிறகு ராஜ கிரகமான செவ்வாய் உங்க ராசிக்கு வருவதால், அதிகார தோரணை ஏற்படும். வீடு, மனை, வாகனம் வாங்கக்கூடிய யோகம் உள்ளது. பிடித்த உயர்கல்வியை படிக்க வாய்ப்பு கிடைக்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றி ஏற்படும். ஒரு சிலர் வீட்டிற்கு முதல் முறையாக நாய்க்குட்டி வாங்கவும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை தேடி வரும். விட்டுப்போன உறவுகள் மீண்டும் தேடி வரும் சூழ்நிலை ஏற்படும். 

இருப்பினும், 18 ஆம் தேதிக்கு முன்னாடி வரையிலும் சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிலருக்கு வேறொரு இடத்திற்கு குடிப்பெயரவும் வாய்ப்புள்ளது. எந்த காரியத்தையும் நம்பிகையுடன் செய்தால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். நண்பர்களால் தேவையில்லாத சிக்கலில் சிக்குவீர்கள். பெரியளவில் பண முதலீடு செய்வதை தவிர்க்கவும். மேலும், இந்த மாதத்தில் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கிவிட்டால் கட்டவே முடியாத நிலை ஏற்படும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்