Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் தனுசு ராசி! தரமான சம்பவம் காத்திருக்கு.. | Dhanusu March Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் தனுசு ராசி! தரமான சம்பவம் காத்திருக்கு.. | Dhanusu March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் தனுசு ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
 

ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் தனுசு ராசி! தரமான சம்பவம் காத்திருக்கு.. | Dhanusu March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உங்க ராசியின் அதிபதி 4 ஆம் இடத்தில் உச்ச சுக்கிரனில் இருப்பதால், இனி உங்களுக்கு வெற்றியைத் தரும் நாள்களாக அமையும். இதுவரை சனி பகவானின் கிரக நிலையினால், எல்லா வகையான இன்னல்களையும் அனுபவித்திருப்பீர்கள். ஆனால், இந்த மார்ச் மாதத்தில் எல்லா துன்பங்களும் நீங்கி இன்பம் பெருகும். வீடு, மனைகளை இழந்திருக்கும் நிலையில் உள்ளவர்களும், புதிதாக வாங்குவதற்கான அனுகிரகத்தைப் பெறுவீர். காசே இல்லைனாலும், வீடு கட்டக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கு.
 

ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் தனுசு ராசி! தரமான சம்பவம் காத்திருக்கு.. | Dhanusu March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

4 ஆம் இடமானது வாகனம் வாங்குவதற்கான இடம் என்பதால், புதிதாக வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு. ஏழரை சனியால் தாயாரின் உடல் நலமும், உங்களுக்கும் உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கும். இவை அனைத்துமே குணமாகி நல்ல ஆரோக்கியமாக வாழ்வு உருவாகக் கூடிய நாள். நீங்கள் எடுக்கக் கூடிய ஒவ்வொரு முயற்சியும் வெற்றியிலேயே முடியும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகமாகி இதுவரை தோல்வியையே சந்தித்த தனுசு ராசிக்காரர்களுக்கு, இந்த மார்ச் மாதத்தில் வெற்றி உங்களுக்குத் தான். 
 

ஏழரை ஆண்டுகளுக்குப் பிறகு விஸ்வரூபம் எடுக்கும் தனுசு ராசி! தரமான சம்பவம் காத்திருக்கு.. | Dhanusu March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ராகு 5 ஆம் இடத்தில் இருப்பதால், உடல் நிலை தொடர்பாக அதிலும் வயிறு சார்ந்தவற்ரில் பிரச்சனைகள் உண்டாகலாம். அதே நேரத்தில் 6 ஆம் இடத்தில் செவ்வாய் பகவானின் அனுகிரஹப்படி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிரிகளே இல்லாத நிலை ஏற்படும். எதிரிகளும் நண்பர்கள் ஆகும் சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத சூழலில் நன்மை உண்டாகும். இந்த மாதம் உங்களுக்கு மிகச் சிறப்பான மாதமாக அமையப் போகிறது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்