Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தப்பித் தவறி கூட இத பண்ணீடாதீங்க.. அப்றம் உங்களுக்குத் தான் சிக்கல்.! | Magaram March Month Rasi Palan 2023 in Tamil

Gowthami Subramani Updated:
தப்பித் தவறி கூட இத பண்ணீடாதீங்க.. அப்றம் உங்களுக்குத் தான் சிக்கல்.! | Magaram March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் மகர ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

தப்பித் தவறி கூட இத பண்ணீடாதீங்க.. அப்றம் உங்களுக்குத் தான் சிக்கல்.! | Magaram March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சனி பகவானின் தாக்கத்தினால், இது வரை ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்து வந்தனர். ஜென்ம சனியிலிருந்து விலகி பாத சனிக்கு சனி பகவான் இருக்கிறார். உங்கள் ராசிக்கு சனி பகவான் இரண்டாம் இடத்தில் இருப்பதால், வாக்குகள் விடுவதில் கவனமாக இருக்க வேண்டும். வாய்ப்பேச்சில் சற்று கவனம் தேவை. அதே போல, கணவன், மனைவியிடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

தப்பித் தவறி கூட இத பண்ணீடாதீங்க.. அப்றம் உங்களுக்குத் தான் சிக்கல்.! | Magaram March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மிகவும் முக்கியம், வெளியில் பணம் கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். மற்றவர்கள் உங்கள் ஆசையைத் தூண்டி முதலீடு செய்ய வேண்டுவர். அதற்கு இடம் கொடுக்காமல், சிக்கல்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. வருமானம் ஈட்டக் கூடியதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு கடன் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். எதிலும் சிந்தித்து செயல்படுவது சிறப்பைத் தரும். மூன்றாம் இடத்தில் சுக்கிர பகவான் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். உங்களது தைரியத்தினால், ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியையே அடைவீர்கள்.

அதே போல, வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை சிறப்பாக உள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு மிகச்சிறப்பான மாதம். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அதே போல, நீங்களும் உங்கள் உடன் பிறந்தவர்களின் ஆதரவு பெறுவீர்கள்.

தப்பித் தவறி கூட இத பண்ணீடாதீங்க.. அப்றம் உங்களுக்குத் தான் சிக்கல்.! | Magaram March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

நான்காம் இடத்தில் ராகு இருப்பதால், அம்மாவின் உடல் நிலை மற்றும் உங்களது உடல் நலத்தில் கவனம் தேவை. இந்த மாதம் 13 ஆம் தேதிக்குப் பின், சிறப்பான நாளாக அமையும். சுப ஸ்தானத்தில் சுக்கிரன் வருவதால், வாகனம் வாங்கும் யோகம், நிலம், வீடு, தங்கம் வாங்குதல் என எல்லாவற்றிலும் யோகம் தான். இந்த மார்சி மாதத்தில் நீங்கள் எடுத்த காரியம் அனைத்துமே வெற்றியில் தான் முடியும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்