Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 74,032.40
179.46sensex(0.24%)
நிஃப்டி22,464.50
62.10sensex(0.28%)
USD
81.57
Exclusive

புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.. | Kadagam March Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.. | Kadagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் கடக ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.. | Kadagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

உங்க ராசிக்கு 8வது இடத்தில் இருக்கும் சனிபகவானால் அஷ்டம சனி ஆரம்பம். எனவே, யாரை நம்பியும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. பங்குச்சந்தை முதலீட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், 4ஆம் இடத்தில் கேதுபகவானால் தாய், தாய்வழி பந்தங்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்படும். வண்டி, வாகனம் செலவு வைக்கும். இரவு நேர பிராயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை. காதலர்களுக்கு இடையே வாக்குவாதம், மனக்கசப்பு ஏற்படும், நீங்க அனுசரித்துக் கொள்வது நல்லது. 

புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.. | Kadagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

வருமானத்தில் சிக்கல் வரும். அனாவசியமாக செலவு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் பணம் வசூலாக இழுத்தடிக்கும். அதேபோல், பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர்கள் பிள்ளைகளுடனும் அனுசரித்து நடந்துக் கொள்வது மனவருத்தத்தை குறைக்கும். வார்த்தையால் அசிங்கபட வாய்ப்புள்ளது. எனவே, பெயர் தெரியாதவர்களிடம் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல், புதிய தொடங்குவதாக இருந்தால் இந்த மாதம் வேண்டாம். 

புதிய நபர்களிடம் அளவோடு இருந்துக் கொண்டால் பிரச்சனை இல்லை.. | Kadagam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

இருந்தாலும் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு எல்லா தலைகீழாக மாறும். ஏனென்றால், 9 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவனால் எதிர்பாரா அதிர்ஷ்ட காற்று வீசும். பண நெருக்கடிகள் குறையும். தந்தை வழி உறவினர்களிடம் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கி, ஒற்றுமை ஏற்படும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம், நெருக்கும் அதிகரிக்கும். வியாபாரம் அமோகமாக இருக்கும். கேட்ட இடத்தில் பணஉதவி கிடைக்கும். சொந்த தொழில் செய்வோருக்கு வருமானம் இரட்டிப்பாகவே இருக்கும். தந்தைவழி பூர்வீக சொத்து கைக்கு வரும். அதேபோல், வீடு மாற்றம் செய்ய விரும்பினால் இந்த மாதத்தில் செய்யலாம்.  

சந்திராஷ்டம நாள்: 19.03.2023 காலை 10.17 முதல் 21.03.2023 காலை 11.57 வரை.

பரிகாரம்: மதுரை மீனாட்சி தாயார் வழிபாடு உகந்த பரிகாரமாக இருக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்