Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.. | Midhunam March Month Rasi Palan 2023 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.. | Midhunam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image.

மார்ச் மாதத்திற்கு உண்டான கிரக நிலைகள்: மேஷம் ராசியில் ராகு, 2 ஆம் இடமான ரிஷப ராசியில் செவ்வாய், 7 ஆம் இடமான துலாம் ராசியில் கேது, 11 ஆம் இடமான லாப ஸ்தானமான கும்பத்தில் சூரியன், புதன் மற்றும் சனி, 12 ஆம் இடமான மீனத்தில் குரு மற்றும் சுக்கிரன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. இந்த மாதம் மார்ச் 13 ஆம் தேதி சுக்கிரன் பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதே 13 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு மாற்றம் பெறுகிறார். அதேபோல், மார்ச் 16 ஆம் தேதி சூரியன் பெயர்ச்சியும், மார்ச் 17 ஆம் தேதி புதன் பெயர்ச்சியும் நிகழவிருக்கிறது. இதனால், மார்ச் மாதத்தில் மிதுன ராசியினர் பெறப் போகும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.. | Midhunam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

ராசி அதிபதி 9 இடத்தில் இருப்பதால், மாணாக்கர் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. முக்கியமான முதலீடுகளில் கவனம் தேவை. உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கீழ்பணிபுரிபவர்களால் சிக்கல் வரும், எச்சரிக்கையாக நடந்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.. | Midhunam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

மேலும், பாக்கிய ஸ்தானத்தில் 3 கிரகங்களின் சஞ்சாரம் செய்திருப்பதால், பிரயாணங்கள் மூலம் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவி தேடி வரும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த மாதம் நிச்சயம் வேலை உறுதி. இரவு நேர வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு ஏற்கனவே இருந்த வேலையில் பணி மாற்றம், சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அஷ்டம சனியால் நிறைய சிக்கலில் சிக்கிய உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும். கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். 

கடன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மாதம்.. | Midhunam March Month Rasi Palan 2023 in TamilRepresentative Image

சொந்த தொழில் ஏகப்பட்ட அடி விழுந்திருக்கும், அவை அனைத்தும் சரியாக தொழில் அமோகமாக நடைபெறும். எத்தனையோ நல்லது செய்திருந்தாலும் கெட்டப்பெயர் மட்டுமே வந்து சேர்ந்திருக்கும். ஆனால், இந்த மாதம் அவை அனைத்தும் விலகி புதுதெம்புடம் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தந்தைவழி பூர்வீக சொத்து விவகாரம் உங்களுக்கு சாதகமான பலனை கொடுக்கும். உடன்பிறந்தவர்களுடனான இருந்தவந்த கருத்து வேறுபாடு நீங்கும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் ஏற்படும். கடன் பிரச்சனையால் மனம் வெறுத்துப்போய் இருந்த மிதுன ராசியினருக்கு இந்த மாதத்தில் இருந்து புதுமையான மாற்றம் ஏற்படும்.

சந்திராஷ்டம நாள்: 17.03.2023 காலை 10.18 முதல் 19.03.2023 காலை 10.17 வரை.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணர் வழிபாடு செய்வது நல்ல பலன்களை கொடுக்கும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்